• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஒரு பக்கம் ஆக்டிங்.. மறுபக்கம் பிசினஸில் கலக்கும் ஜனனி ஐயர்!

ஒரு பக்கம் ஆக்டிங்.. மறுபக்கம் பிசினஸில் கலக்கும் ஜனனி ஐயர்!

ஜனனியின் டிரெஸ்ஸிங் சென்ஸ் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதை அப்படியே கையில் எடுத்த அவர், வெஸ்டர்ன் ஆடைகள் பக்கம் திரும்பினார்.

  • Share this:
    கொரோனா துயரக்காலம் நம்முடைய வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றியமைத்தது. அதில் சினிமா பிரபலங்களும் தப்பிக்கவில்லை. ஐடி நிறுவனங்கள் கூட வொர்க் ஃப்ரம் ஹோமில் இயங்க ஆரம்பித்தன.
    ஆனால் சினிமா நட்சத்திரங்களுக்கு அப்படியில்லை. வெளியில் ஷூட்டில் தொடங்கினால் தான் வருமானம். இந்த சூழ்நிலையில் தான் பிரபலங்கள் யூடியூப் பக்கம் டெண்ட் போட தொடங்கியினர். சீரியல் நடிகர்கள், நடிகைகள், ஆங்கர்கள், நகைச்சுவை நடிகர்கள் என எல்லோரும் யூடியூப்பில் சேனல் தொடங்கி அதிலும் வருமானத்தை நீட்டத் தொடங்கினர்.

    இன்னும் வேறு சிலர் சொந்தமாக பிசினஸ் செய்யவும் தொடங்கினர். அதில் ஒருவர் தான் பிக் பாஸ் புகழ் நடிகை ஜனனி ஐயர். இவர், லாக்டவுன் காலத்தில் ஃபேஷன் இணையதளம் ஒன்றைத் தொடங்கி தனது அக்காவுடன் சேர்ந்து ஆடைகளை விற்பனை செய்து வருகிறார். இது வெளியில் பலரும் அறிந்திடாத செய்தி.

    ஜனனி ஐயர் செல்பி


    இயல்பாகவே ஜனனியின் டிரெஸ்ஸிங் சென்ஸ் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதை அப்படியே கையில் எடுத்த அவர், வெஸ்டர்ன் ஆடைகள் பக்கம் கவனத்தைத் திருப்பி The Hazel Avenue' என்ற பெயரில் தளத்தை தொடங்கி அதன் மூலம் ஆடைகளை விற்பனை செய்கிறார்.

    இவங்ககிட்ட இருக்குற ஸ்பெஷல் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகள்லேருந்து டிசைனர்கள்கிட்ட தனித்துவமான ஆடைகளைத் தேர்வு செய்து வாங்கி, விற்பனை செய்கிறார்கள்.

    இவங்க கடைக்கு மாடல்ஸ் இவங்களே தான். ஜனனியும் அவரின் அக்கா கிருத்திகாவும் விதவிதமான ட்ரெஸ்களை போட்டு ஃபோடோஷூட் நடத்தி அதை சைட்டில் அப்லோட் செய்கிறார்கள். இவர்களின் ரெகுலர் கஸ்டமர்ஸ் பிரியா பவானி சங்கர், அதுல்யா உட்பட இன்னும் சிலர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja
    First published: