Home /News /lifestyle /

சாப்பிடும் மேகி நூடுல்ஸில் காலணி.. கிரங்கடிக்கும் விலை..!

சாப்பிடும் மேகி நூடுல்ஸில் காலணி.. கிரங்கடிக்கும் விலை..!

மேகி நூடுல்ஸில் காலணி.

மேகி நூடுல்ஸில் காலணி.

இது விண்டர் 2020 கலெக்‌ஷன் தொகுப்பிற்காக வெளியிட்டுள்ள ஹீல்.

  • News18
  • Last Updated :
    பேச்சிலர்கள் தொடங்கி வீட்டுப் பெண்கள் வரை இன்ஸ்டண்டாக ஒரு உணவு சமைக்க வரமாக வந்ததே மேகி நூடுல்ஸ்.. குறைந்த விலையில் ருசியான உணவு. அடிக்கடி சாப்பிட முடியாது என்றாலும் அவசரத்திற்கு உதவும், பசி போக்கும் உணவாக இருக்கிறது.

    ஆனால் அந்த மேகி நூடுல்ஸில் காலணி தயாரித்து வெளியிட்டிருக்கிறது பிரபல நிறுவனம். இத்தாலியைச் சேர்ந்த லக்ஸுரி பிராண்ட் பொடிகா வெனிடா (bottega veneta) நூடுல்ஸ்-ஆல் ஈர்க்கப்பட்டு அதனை டிசைனாகப் பயன்படுத்தி ஹீல் வடிவமைத்திருக்கிறது.




    இது விண்டர் 2020 கலெக்‌ஷன் தொகுப்பிற்காக வெளியிட்டுள்ள ஹீல் ஆகும். இதை இன்ஸ்டாகிராமில் @diet_prada என்பவர் ஷேர் செய்திருக்க தற்போது 90 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சிலர் அந்த ஹீல்ஸை பார்த்ததும் பசி உண்டாகிறது என்றும். சிலர் அதை வெந்நீரில் போட்டால் வெந்துவிடுமா என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

    படிக்க : பிரபலங்கள் முதல் சாமானிய பெண்கள் வரை... டிரெண்டாகும் ரஃபில் புடவை..!

    என்னதான் மேகி நூடுல்ஸை 10 ரூபாய்க்கு வாங்கினாலும் இந்த மேகி ஹீலை ஒரு லட்சம் கொடுத்தால்தான் வாங்க முடியும். அவ்வளவு காஸ்ட்லியான ஹீலாக தயாரித்து வெளியிட்டுள்ளது.

    படிக்க : எந்த ஆடைக்கு எந்த ஐப்ரோ ஷேப்..? டிரெண்ட் செட்டர் நயன்தாராவின் ஐப்ரோ ஸ்டைல்.!
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி