ஸ்டைல் காட்ட உதவும் லெதர் பைகளை பராமரிப்பது எப்படி..?

லெதர் பேகில் ஈரம் பட்டுவிட்டதெனில் ஈரம் வற்ற வெயிலில் காய வைக்காதீர்கள்.

news18
Updated: September 11, 2019, 9:50 PM IST
ஸ்டைல் காட்ட உதவும் லெதர் பைகளை பராமரிப்பது எப்படி..?
லெதர் பேக்
news18
Updated: September 11, 2019, 9:50 PM IST
நம் அழகான தோற்றத்தை முழுமையாக்கும் லெதர் பைகளைப் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். இல்லையெனில் லெதர் விரைவில் சேதமாகக் கூடும். அதிக பணம் போட்டு வாங்கிய பைய் பாழானால் மனம் வருத்தம்தான் மிஞ்சும். எனவே இவற்றைத் தவிர்க்க லெதர் பைய் பராமரிப்பு வழிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

காற்றோட்டம் : லெதர் பைய்களைப் பொருத்தவரை காற்றோட்டம் அவசியம். அதன் மெட்டீரியல் நன்கு சுவாசம் பெறும் வகையில் வைக்க வெண்டும். குறிப்பாக மழைக் காலங்களில் வெளியே எடுத்துச் சென்றால் நன்கு உலற வைக்கவும்.

சூரிய வெளிச்சம் படக் கூடாது : லெதர் பையில் ஈரம் பட்டுவிட்டதெனில் ஈரம் வற்ற வெயிலில் காய வைக்காதீர்கள். அது லெதரை வெடிப்புக்குள்ளாக்கும். நிறமும் மங்கிவிடும்.
பராமரிப்பு : பையை எப்போதுதாவதுதான் பயன்படுத்துகிறீர்கள் என பப்புல் கவர்களால் மூடப்பட்டு வையுங்கள். லெதரை நீண்ட நாட்கள் அப்படியே வைத்தால் பூஞ்சைகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல் மரத்தாலான அலமாரிகளில் வைக்காதீர்கள். அதுவும் பூஞ்சைகளை உருவாக்கி லெதரை அரித்துவிடும்.

கண்டிஷ்னர் : லெதர் பையை பராமரிப்பதற்கென கண்டிஷ்னர்கள் விற்பனைக்கு உள்ளன. அதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பேக் முழுவதும் தேய்த்துப் பயன்படுத்தினால் நிறம் மங்காமல் புதிது போல் ஜொலிக்கும்.

Loading...குறிப்பு : லெதர் பைகள் எளிதில் எண்ணெய் , கிரீஸை உறியும் தன்மைக் கொண்டது. அதைக் கொண்டு பையைத் துடைப்பதாலும் பாலிஷ் போட்டதுபோல் இருக்கும். மென்மையான துணியைப் பயன்படுத்தித் துடையுங்கள். அதேபோல் ஈரத்தில் நனைத்த துணியையும் பயன்படுத்தி துடைக்கலாம். இதற்கென கிளீனர் ஜெல் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி வட்ட முறையில் துடைத்தால் நீண்ட வருடம் உழைக்கும்.

பார்க்க :

குழந்தைகளை ஸ்மார்ட்போன் மற்றும் டிவி மோகத்தில் இருந்து திசை திருப்புவது எப்படி என்பது குறித்து இன்றைய கேள்விகள் ஆயிரம் தொகுப்பில் விளக்குகிறார் குழந்தைகள் நல ஆலோசகர் ராதா.....

First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...