பட்டுப் புடவை முதல் காட்டன் புடவை வரை...! புதிது போல் பராமரிக்க என்ன செய்யலாம்...?

அதிக விலை கொடுத்து வாங்கிய புடையாக இருந்தாலும் சரி, அதிகமாக விரும்பி வாங்கிய புடவையாக இருந்தாலும் சரி, அது நீண்ட நாள் உழைக்க வேண்டும்

பட்டுப் புடவை முதல் காட்டன் புடவை வரை...! புதிது போல் பராமரிக்க என்ன செய்யலாம்...?
புடவை
  • Share this:
எப்போது உடுத்தினாலும் புடவைகள் புதிதுபோல் மிளிர வேண்டுமெனில் அதை பக்குவமாய் பராமரித்தால் மட்டுமே முடியும். எனவே அதை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.

பட்டுப் புடவை பராமரிப்பு :

பட்டு புடவை என்றாலே விலை அதிகமாகத்தான் இருக்கும். அதை மற்ற புடவைகளைப் போல் அல்லாமல் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.


வெளியில் உடுத்திவிட்டு வந்ததும் அவிழ்த்து சுற்றி வைக்காமல் விரித்த வாக்கில் காற்றாட விடுங்கள். அதில் உள்ள வியர்வை துர்நாற்றம் போக வேண்டும்.

பின் அதை மடித்து அப்படியே வெளியே லாண்டரியில் கொடுத்து துவைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் உங்களுக்கு துவைக்கும் முறை தெரிந்தால் துவைக்கலாம். இல்லையென்னில் கடையில் கொடுப்பதே நல்லது. ஏனெனில் வீட்டில் துவைத்தால் அதன் ஜரிகை சேதாரமாகலாம். அதேபோல் வாஷிங் மெஷினில் போடுவதும் தவறான செயல்.

பெண்களே உடலுறவுக்குப் பின் இந்த விஷயங்களை செய்யத் தவறாதீர்கள்..!பட்டுப்புடவையை மற்ற துணிகளோடு சகஜமாக மடித்து வைக்கக் கூடாது. அதை மடித்து சல்லடை போல் மெலிதாக இருக்கக் கூடிய மஸ்லின் துணியில் சுற்றி வைக்கவும். மஸ்லின் பை இருந்தாலும் அதற்குள் வைத்து பாதுகாக்க வேண்டும். பீரோவில் மட்டுமே வைக்க வேண்டும்.

அடிக்கடி எடுத்து மாற்றி மாற்றி மடித்து வைக்க வேண்டும். ஒரே மடிப்பில் நீண்ட நாட்கள் இருந்தால் மடிப்புகள் அப்படியே படிந்துவிடும்.



காட்டன் புடவை :

காட்டன் புடவைகளை துவைக்கும் போது மற்ற துணிகளோடு சேர்த்து ஊற வைத்து துவைக்கக் கூடாது. அதை தனியாக வைத்து துவைக்க வேண்டும்.

அதேபோல் காட்டன் புடவைகளை நீண்ட நேரம் சோப்பு தண்ணீல் ஊற வைத்தால் சாயம் மங்கிவிடும். அழுக்கு இல்லை என்றால் துவைக்கும்போது தண்ணீரில் நனைத்து அப்படியே துவைக்கலாம்.

காய வைக்கும்போது வெயிலில் போடாமல் நிழலில் காற்றாட விட்டாலே காய்ந்துவிடும். காட்டன் புடவைகளையும் வாஷிங்மெஷினில் போடாதீர்கள்.

பீரோவில் வைக்கும்முன் நன்கு அயர்ன் செய்து சாரீ ஹேங்கரில் மாட்டி தொங்க விடுங்கள்.

பார்க்க :

 

 
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading