பனிக்காலத்தில் உங்கள் கம்பளியைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

மாதிரிப் படம்

கம்பளியை லாண்டரியில் போடாமல் வீட்டிலேயே கையால் துவைப்பது நல்லது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பனிக்காலத்தில் கம்பளிதான் பாதுகாவலன். உடலைப் பாதுகாக்க உதவும் கம்பளிகளை சரியான முறையில் பராமரிப்பது அவசியம். சிலர் கம்பளிகளை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கக் கூடும். எனவே சரியான முறையில் கம்பளியை எவ்வாறு பாதுகாப்பது என்பதைக் காணலாம்.

  கம்பளிகளை துவைக்கும் முன் கவனிக்க வேண்டியவை:  கம்பளிகளை அடிக்கடி துவைக்க வேண்டிய அவசியம் இல்லை. கம்பளிகளில் ஈரம்பட்டால் எளிதில் காயாது. துவைக்கும் முன் அது எந்த மெட்டீரியலில் தயாரிக்கப்பட்டது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கம்பளியின் உட்புறத்தில் எப்படி துவைக்க வேண்டும் என்கிற லேபிள் பொருத்தியிருப்பார்கள். அதன்படி கம்பளியைத் துவையுங்கள். அதிகபட்சமாக கம்பளிகள் இயற்கை முறையினான ஃபைபர் அல்லது காஷ்மீர் கம்பளி நூலில் தயாரித்திருப்பார்கள். அப்படியிருக்கும்பட்சத்தில் அவற்றை லாண்டரியில் போடாமல் வீட்டிலேயே கையால் துவைப்பது நல்லது.

  மிஷினில் போடுவதைத் தவிருங்கள்  கம்பளியை மிஷினில் போடுவதால் எளிதில் நூலிழைகள் பிரிந்து சேதமடையக் கூடும். கம்பளியில் சுருங்கும் தன்மைக் குறைவு. எனவே எளிதில் இளகி நூல் தையல் விரிந்துவிடும். அதனால் கையில் துவைப்பதே நல்லது.

  கம்பளியைத் துவைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்  கம்பளியைத் துவைக்கும் முன் அதன் உள்பகுதியை வெளிப்புறம் திருப்ப வேண்டும். வாஷிங் பவுடரை பயன்படுத்தாமல் ஷாம்பூவை இரண்டு துளி விட்டு குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும். அதிக நேரம் ஊற வைக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் கம்பளி விரைவில் இளகி விடும். பின் உங்கள் தோற்றத்திற்கு அசகவுரியமாக இருக்கும்.

  ஊற வைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கம்பளியை அலச வேண்டும்.

  கம்பளியை அலசியதும் கையில் பிழியக் கூடாது. அதற்கு பதிலாக டவலில் ஈர கம்பளியை வைத்து உருட்ட வேண்டும். அவ்வாறு செய்வதால் ஈரம் டவலில் இழுத்துவிடும். காய வைக்கும் போது கம்பளியை மீண்டும் திருப்பி காய வைக்க வேண்டும். நல்ல வெயில் படும் இடத்தில் கவனமாக காய வையுங்கள்.

  பாதுகாக்கும் வழிமுறைகள்  காய்ந்ததும் கம்பளியை வாட்ரோபில் தொங்கவிடக் கூடாது. அவ்வாறு செய்வதால் தூசுகள் சுற்றிக் கொள்ளும். கம்பளியில் தூசு, கிருமிகள் எளிதில் பற்றிக் கொள்ளும்.பின் அது உங்கள் சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும். மேலும் கம்பளி உங்கள் வாட்ரோப் இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். எனவே அதை மடித்து வையுங்கள்.

  பனிக்காலம் முடிந்ததும் கம்பளியை வாட்ரோபிலேயே போட்டு வைக்காமல் காட்டன் பையில் போட்டு மூடி தனியாக எடுத்து வையுங்கள். கூடவே வாசனைக்கு ரசக் கற்பூரம் போட்டு வையுங்கள். அடுத்த பனிக்காலத்திற்கு பயன்படுத்த எடுக்கும்போது வாசனையாக இருக்கும்.
  Published by:Sivaranjani E
  First published: