• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உங்கள் உடல் வடிவத்திற்கு ஏற்ற உடைகளை தேர்வு செய்வது எப்படி? இதோ டிப்ஸ்..

உங்கள் உடல் வடிவத்திற்கு ஏற்ற உடைகளை தேர்வு செய்வது எப்படி? இதோ டிப்ஸ்..

காட்சி படம்

காட்சி படம்

உங்கள் உடல் வடிவத்திற்கு ஏற்ப சரியான ஆடையை தேர்வு செய்வது பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..

  • Share this:
உடல் வகைக்கு ஏற்ற ஆடை அணிவது பெண்களுக்கு ஒரு கடினமான பணியாக இருக்கலாம். ஆனால் அதனை சரியாக செய்தால் ஒவ்வொரு பெண்ணும் அழகாக காட்சியளிப்பார்கள். நீங்கள் எந்த உடல் வகையை சேர்ந்தவர்கள் என்பதையும், என்ன வகையான உடையை தேர்வு செய்வது உங்களை அழகாக காட்டும் என்பது குறித்தும் நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

மணி கண்ணாடி வடிவம் : மணி கண்ணாடி வடிவம் என்பது மேற்பகுதியும், கீழ்பகுதியும் சரியான அகலத்தில் இருக்கும். அதேசமயம் இடுப்பு பகுதி உடுக்கைப் போலக் குறுகி இருக்கும். இந்த உடல்வாகு கொண்டவர்கள் சுடிதார், சேலை என எந்த மாதிரியான உடைகளை அணிந்தாலும் அவர்களுக்குப் பொருத்தமாய், அழகாய் இருக்கும். நீங்கள் உங்கள் இடுப்பு வளைவுகளை வெளிப்படுத்த விரும்பினால், இறுக்கமான உடைகளை அணியலாம்.

குண்டான வடிவம் : நீங்கள் ஒரு எடை அதிகரித்த பெண்ணாக இருந்தால் சரியான ஆடைகளில் கவனம் செலுத்த வேண்டும். டாப்ஸ் அணிந்தால் வி நெக்லைன்களை தேர்வு செய்யலாம். நீங்கள் இறக்கமான நெக்லைன்களைத் தேர்வு செய்ய வேண்டியதில்லை. இந்த வகையான உடைகள் உங்கள் கழுத்தை நீளமாகவும் மார்பளவு சிறியதாகவும் காட்டும். மேலும் உங்கள் மார்பு மற்றும் உங்கள் இடுப்புக்கு ஏற்றவாறு சரியான ஆடைகளைத் தேர்வு செய்வது அவசியம். அதனால் நீங்கள் உங்கள் இடுப்புப் பகுதியைச் சுற்றிப் பொருந்தும் கவுன்களை அணியலாம். உங்கள் ஆடைகளுக்கு கூடுதல் வடிவத்தை சேர்க்க வழக்கமான ஆடைகளுக்கு ஒரு பெல்ட்டையும் அணியலாம்.

also read : தம்பதிகள் இந்த மாதிரி விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டுக்கொள்வது நல்லதாம்… ஏன் தெரியுமா..?



ஆப்பிள் வடிவம் : உடலின் மேற்புறம் அகன்றும் இடுப்பிற்குக் கீழே வரவர சிறுத்தும் ஷேப் கொண்ட பெண்கள் ஆப்பிள் வடிவம் கொண்டவர்கள். இந்த உடல் வகைக்கு உங்கள் இடுப்புப் பகுதியில் ஒட்டிக்கொள்ளாத டாப் அணியலாம். உங்கள் கால்களை குறுகிய நீளத்துடன் காட்ட நேர் கோடு போட்ட பேண்ட் அணியலாம். இதனால் கீழ்பகுதி உடம்பின் குறுகிய தன்மை மறைக்கப்பட்டு அழகாகத் தோற்றமளிப்பார்கள். மார்பளவு பகுதிக்கு கீழே பொத்தான்கள் வைத்த உடைகளை தேர்வு செய்யலாம். மேலும் நீளமான கை வைத்த ஜாக்கெட்டுகள் அணியலாம். குறிப்பாக உங்கள் உடம்பில் ஒட்டிக்கொள்ளாத ஆடைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

also read : கொட்டாவி விடுவது சுவாச பிரச்சனையின் அறிகுறியா ? உங்களுக்கு சுவாச பிரச்சனை இருக்கிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்..

பேரிக்காய் வடிவம் : உடலின் மேற்பகுதி குறுகலாகவும், கீழ் பகுதி அகன்றும் காணப்படும் இந்த உடல் அமைப்பினரை பேரிக்காய் வடிவ அமைப்பினர் என்று கூறுவார்கள். இவர்கள் கழுத்துப் பகுதியில் சுருக்கங்கள் வைத்து தைத்த ரூசிங் டைப், போட் நெக், மடிப்புகள், பிரில்கள் வைத்து டிசைன் செய்த ஆடைகளை அணியலாம். அதேபோல் மேலேயிருந்து ஒரே நீளமாக வராமல் எம்பயர் வெய்ஸ்ட் டைப்பில் உடை அணிந்தால் பின்னால் அசிங்கமாக தெரியாது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: