வேலைக்கு செல்லும் நாட்களில் தினசரி பயன்படுத்தும் ஹேண்ட் பேக், ஷூ, பெல்ட் போன்றவற்றை சுத்தம் செய்யக் கூட நேரமில்லாமல் இருந்திருக்கலாம். தற்போது கிடைத்திருக்கும் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி அவற்றை சுத்தம் செய்து பளபளப்பாக்குங்கள்.
எவ்வாறு சுத்தம் செய்வது..?
லெதர் ஹேண்ட் பேக்குகள் நிறைய பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கலாம். அவற்றை ஹேண்ட் சானிடைஸர் கொண்டு பருத்தித் துணியால் துடைத்து எடுங்கள்.
தண்ணீரில் மூழ்க வைத்து துவைக்கிறீர்கள் எனில் நன்கு உதறி வெயில் படும்படி நாள் முழுவதும் காய வையுங்கள். எடுக்கும்போது கொஞ்சமும் ஈரப்பதம் இருக்கக் கூடாது. ஹேர் டிரையர் இருந்தால் அதை வைத்து ஈரத்தை இழுத்துவிட்டு சிறிது நேரம் வெயிலில் வையுங்கள். இதனால் நிறம் மங்காமல் இருக்கும்.
அதேபோல் பயன்படுத்தாமல் நீண்ட நாட்கள் அப்படியே தொங்கவிட்டால் அதன் ஷேப் மாறிவிடும். அதற்கு பேப்பர் கொண்டு முழுமையாக்குங்கள். ஸிப்புகளுக்கு எண்ணெய் விடுங்கள்.
பெல்டுகளை சுத்தம் செய்ய ஈரத்துணி கொண்டு முழுவதும் துடைத்து எடுங்கள். ஈரம் போகும் வரை காய வையுங்கள். காய்ந்ததும் ஹேங்கரில் தொங்க விடாமல் சுருட்டி டிராயர் அல்லது உருளை டப்பாக்களில் வையுங்கள்.
லெதரை பராமரிக்கும் கண்டிஷ்னர் வைத்திருந்தால் அதை அப்ளை செய்வதும் பெல்டை நீண்ட நாட்கள் பளபளவென நீடிக்கச் செய்யும்.
ஷூவையும் சோப்பு தண்ணீரில் மூழ்க வைத்து அலசி காய வையுங்கள். உள்ளேயும் ஈரமில்லாமல் இருக்க வேண்டும். ஷூவை வைக்கும்போது அதில் வாசனை ஜெல் அல்லது ரசக் கற்ப்பூரம் வைத்தால் துர்நாற்றம் இருக்காது. அதேபோல் ஷூவின் வாய் பகுதியை காலியாக வைக்காமல் பேப்பர் கொண்டு அடைத்து வையுங்கள்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை முறையாகப் பின்பற்றினால் நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய ஷூ, பெல்ட், ஹேண்ட் பேகுகள் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.