முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சரியான பிரா அளவை தேர்வு செய்வதில் குழப்பமா..? இந்த கணக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்...

சரியான பிரா அளவை தேர்வு செய்வதில் குழப்பமா..? இந்த கணக்கை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்...

ஒரு கச்சிதமான உள்ளாடையை வாங்குவது எப்படி?

ஒரு கச்சிதமான உள்ளாடையை வாங்குவது எப்படி?

உங்கள் வடிவம், தோற்றம் மற்றும் நீங்கள் வசதியாக உணரும் தன்மை ஆகிய அனைத்திலும், உங்களின் உள்ளாடை முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு நல்ல வடிவம் பெறவும், உடல் நல்ல நிலையில் இருப்பதையும், உங்கள் உள்ளாடை உறுதி செய்கிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு அழகான மற்றும் கச்சிதமான ஆடை என்பது நீங்கள் வெளிப்புறத்தில் என்ன அணிந்துள்ளீர்கள் என்பது மட்டும் கிடையாது. உங்கள் உள்ளாடையும் அடங்கும். சில நேரங்களில், உங்கள் வெளிப்புற ஆடை மிகவும் அழகானதாக, நேர்த்தியானதாகவும் இருந்தாலும், உங்கள் பிரா சரியானதாக அல்லது சரியான அளவில் இல்லையென்றாலும், நீங்கள் விரும்பும் தோற்றம் பெற முடியாது.

உங்கள் வடிவம், தோற்றம் மற்றும் நீங்கள் வசதியாக உணரும் தன்மை ஆகிய அனைத்திலும், உங்களின் உள்ளாடை முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு நல்ல வடிவம் பெறவும், உடல் நல்ல நிலையில் இருப்பதையும், உங்கள் உள்ளாடை உறுதி செய்கிறது. எனவே, சரியான ஆடையைத் தேர்ந்தெடுப்பது போல, கச்சிதமான உள்ளாடையையும் தேர்வு செய்ய வேண்டும்.

சரியான உள்ளாடை என்றால் மூன்று முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் – சரியான அளவு, ஃபேப்ரிக், மற்றும் உள்ளாடையின் ஸ்டைல். நீங்கள் அணிந்திருக்கும் அல்லது வாங்கும் உள்ளாடையின் அளவு சரியானதா என்ற குழப்பம் இருந்தால், இதோ உங்களுக்கான உள்ளாடை வழிகாட்டி., இதன் மூலம், நன்றாக பொருந்தக்கூடிய பிராவை மிகச் சுலபமாக வாங்கி, உங்கள் தோற்றத்தை மேம்படுத்தலாம்.

ஒரு கச்சிதமான உள்ளாடையை வாங்குவது எப்படி?

நீங்கள் மிகச்சரியான பிராவை அணிந்திருப்பது பெரும்பாலும் உணராமலே இருப்பீர்கள். ஆனால், மோசமான பிராவை அணிந்திருந்தால், அது பல விதங்களில் வெளிப்படும். எனவே, ஒரு பிரா அல்லது வேலைபாடு நிறைந்த உள்ளாடையை வாங்கும் போது, நீங்கள் கவனிக்க வேண்டிய சில அடிப்படை கூறுகள் உள்ளன.

உங்கள் சரியான அளவைக் கண்டுபிடிப்பது எப்படி?

பெரும்பாலான பெண்கள், சரியான அளவு உள்ளாடையை வாங்குவதில்லை என்று பல தரவுகள் கூறுகின்றன. மார்பளவு என்ன என்பது தெரியாமலே இத்தனை நாட்கள் பலரும் உள்ளாடை வாங்கியிருப்பார்கள். சரியான அளவு உள்ளாடையை வாங்க நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் அளவை சரியாக அளந்து தெரிந்து கொள்வது ஆகும். கப்பின் அளவு, பேண்டின் (Band) அளவு ஆகிய இரண்டும் முக்கியான அளவீடுகலாகும். இந்த அளவுகளை நீங்கள் சரியாகக் கண்டறிந்தால், உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் அளவுள்ள பிராவை நீங்கள் எளிதாக வாங்கலாம்.

பெண் பருவமடையும் முன் உண்டாகும் அறிகுறிகள்... முதல் மாதவிடாயை எதிர்கொள்வது எப்படி..?

பிரா வாங்கும் போது எப்படி அளந்து பார்ப்பது?

பேண்டு அளவு (Band): உங்கள் பிரா அமரும் இடமான உங்கள் இடுப்புக்கு கொஞ்சம் மேற்புறம் மற்றும் மேல்முதுகுப்புறத்தை அளக்கவும். அது இரட்டைப்படை எண்ணாக இருந்தால், அது தான் உங்கள் பேண்டின் அளவு. ஒரு வேளை, அது ஒற்றைப்படை எண்ணாக வந்தால், அடுத்த இரட்டைப்படை எண் உங்களின் அளவு.

கப்பின் அளவு (Cup): உங்கள் மார்பை, மார்புகாம்பு உட்பட முழுமையாக அளக்கவும். உங்களுக்குக் கிடைத்த அளவில், பேண்டின் அளவை கழித்தபின் கிடைக்கும் அளவு, உங்கள் கப் அளவாகும்.

1 - AA

2 - A

3 - B

4 - C

5 - D

6 – DD

7 - E

8 – F

எத்தனை விதமான பிராக்கள் உள்ளன?

இன்று சந்தையில் பல்வேறு விதமான ஸ்டைல்களில் பிராக்கள் கிடைக்கின்றன. அவற்றில், பேடு வைக்கப்பட்ட, பேடு இல்லாத, வயர் வைக்கப்பட்ட, வயர் இல்லாத, ஸ்ட்ராப் இல்லாத, என்று பல்வேறு தேர்வுகளுடன் பிராக்கள் உள்ளன. ஆனால், உங்களுக்குப் பொருந்தும் சரியான பிரா வகையைத் தேர்வு செய்ய வேண்டும்.

டிஷர்ட் பிரா

இது நீங்கள் தினசரி அணியக்கூடிய பிரா. உங்கள் மார்பகங்களுக்கு கச்சிதமான பொருத்தம் மற்றும் வடிவம் தரும்.

முழு கப் பிரா

உங்கள் மார்பகம் பெரிதாக, முழுமையாக இருந்தால், நீங்கள் இந்த ஸ்டைலை தேர்வு செய்யலாம். இது உங்கள் மார்பகங்களுக்கு முழுமையான கவரேஜ் வழங்குகிறது.

ப்ளன்ஜ் பிரா

உங்களின் ஆழமான கழுத்து வெட்டுள்ள ஆடைக்கு பொருத்தமாக, நீங்கள் இந்த ப்ளன்ஜ் பிராவை அணிவது பொருத்தமாக இருக்கும்.

புஷ்-அப் பிரா

நீங்கள் முழுமையான தோற்றமளிக்கும் மார்பகத்தை மற்றும் கிளிவேஜ் விரும்பினால், நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய பிரா ஸ்டைல் புஷ்-அப் பிரா ஆகும். இது உங்கள் பிராவை மேல்நோக்கியும், உள்நோக்கியும் தள்ளும்.

ஸ்டிராப் இல்லாத, மல்டிவே பிரா

உங்களின் ஸ்ட்ராப் இல்லாத அல்லது பேக்லஸ் ஆடைகளுக்கு பொருத்தமாக, நீங்கள் இந்த ஸ்டிராப்லெஸ் அல்லது பேக்லஸ் பிராவை தேர்வு செய்யவேண்டும்.

மழை சீசனில் பளபளப்பான சருமத்தை பெற உதவும் பயனுள்ள தோல் பராமரிப்பு டிப்ஸ்கள்..!

பிராலெட்

உங்கள் உள்ளாடை தொகுப்பில் முக்கியமாக இருக்க வேண்டியது - இந்த நேர்த்தியான வடிவமைப்பும், வசதியான உணர்வும் தரும், கச்சிதமாக் உணர வைக்கும் உள்ளாடையாகும். தாழ்வான கழுத்து, தாழ்வான முதுகுப்புறம், உள்ள ஆடைகளுடன், இந்த கவர்ச்சியான, அழகான உள்ளாடையை அணியலாம்.

ஸ்போர்ட்ஸ் பிரா

நீங்கள் விளையாட்டு, உடற்பயிற்சி, ஓட்டம் அல்லது யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடும்போது, உங்கள் உடலுக்கு சரியான ஆதரவை அழிப்பது ஸ்போர்ட்ஸ் பிரா.

எது சரியான பொருத்தம்?

* அனைவருக்கும் ஒரே அளவு, ஒரே வடிவம் கொண்ட மார்பகம் இருப்பதில்லை. எனவே, அனைவரும் ஒரே வடிவம் அல்லது ஸ்டைல் பிராவை அணியக் கூடாது. பொருத்தமில்லாத பிரா, உங்கள் தோற்றத்தை பாதிக்கும். எனவே உங்கள் மார்பு வடிவத்துக்கு பொருத்தமான பிராவைத் தேர்வு செய்யவேண்டும்.

* அதே போல, உங்கள் உள்ளாடை சரியான துணியில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எடை குறைவான, நீட்டிக்கும் தன்மை கொண்ட, அணிவதற்கு வசதியான ஃபேப்ரிக்கை எப்போதுமே தேர்வு செய்ய வேண்டும்.

பெண்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை பாதுகாக்க புரோபயாடிக்ஸ் உணவுகள் உதவுகின்றன : ஆய்வில் தகவல்

* தூய பருத்தியை விட, பருத்தி மற்றும் எலாஸ்டேன் கலவையில் ஆனா உள்ளாடை சிறந்த பொருத்தத்தைத் தரும்.

* எந்த தருணத்தில், என்ன ஸ்டைல் அல்லது எந்தத் துணிவகையினால் ஆன உள்ளாடையை அணிய வேண்டும் என்பதும் முக்கியம். டிஷர்ட் அல்லது அலுவலக உடைக்கு லேஸ் துணியினால் ஆன உள்ளாடை பொருந்தாது.

* அளவு, ஸ்டைல் மற்றும் ஃபேப்ரிக், இந்த மூன்றையும் தவிர்த்து, என்ன நிறத்தில் வாங்குகிறீர்கள் என்பதும் முக்கியம். பல வண்ணங்களில் நீங்கள் அணிய விரும்பினாலும், நிறப்பொருத்தம் இல்லாமல் போக வாய்ப்புள்ளது. நீங்கள் அணியும் நிறத்துக்கு ஏற்ற நிறத்தில் உள்ளாடை இருக்க வேண்டும்.

First published:

Tags: Bra, Fashion Tips