ஹோலி கொண்டாட எந்த காஸ்டியூம் பெஸ்ட் சாய்ஸ் ?

ஆடைத் தேர்வு முதல் ஒப்பனை அலங்காரம் வரை...

news18
Updated: March 20, 2019, 12:12 PM IST
ஹோலி கொண்டாட எந்த காஸ்டியூம் பெஸ்ட் சாய்ஸ் ?
ஹோலி பண்டிகை
news18
Updated: March 20, 2019, 12:12 PM IST
வண்ணம் என்றாலே மகிழ்ச்சிதான். கண்கவர் வண்ணகளைத் தூவி விளையாட இந்தியாவே தயாராகிக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் ஹோலி பண்டிகைக்கு ஏற்ப எந்த மாதிரியான ஆடை அணிந்து அசத்தலாம்.

ஆடைத் தேர்வு:

ஹோலி பண்டிகைக்கு ஏற்ற ஆடை நிறம் வெள்ளை. வெள்ளை நிற ஆடையை அணியும்போது அதில் தூவப்படும் வண்ணங்களின் நிறம் எளிதில் ஒட்டிக்கொள்ளும். அந்த ஆடையை வண்ணம் நிறைந்ததாக்கிவிடும். வெள்ளை அணிந்தால்தான் தூவப்படும் வண்ணங்களின் தோற்றம் நிறைந்திருக்கும். அதுமட்டுமன்றி அதை பின்னாட்களில் எடுத்துப் பார்க்கும்போது, அந்தச் சாயங்கள் நினைவு கூறும் விதமாக இருக்கும். வெள்ளை நிற டி.சர்ட் மற்றும் ஜீன் என வெஸ்டர்னாகவும் குர்தா, சுடிதார் என டிரெடிஷனலாகவும் கலக்கலாம். இடையூறு இல்லாமல் கொண்டாட்டத்தை அனுபவிக்க ஆடையை ஃபிரீ ஸைஸில் அணிவது ஏற்றதாக இருக்கும். டிரான்ஸ்பிரண்டான ஆடையை தவிறுங்கள். தண்ணீர் பீச்சி அடிக்கும் விளையாடுகளும் அடங்கியிருக்கும். அதைக் கவனத்தில் கொண்டு அடர்த்தியான பேப்ரிக் (பருத்தி பேப்ரிக்) கொண்ட ஆடையைத் தேர்வு செய்யுங்கள்.


ஆக்சசரீஸ் தேர்வு

வெள்ளை நிற ஆடையைத் தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்றால், காண்ட்ராஸ்டான நகைகளை அணிவது போல்டாக இருக்கும். அதிக எடை நிறைந்த நகைகளை அணிவதை விட லைட் வெயிட் நகைகள் ஏற்றதாக இருக்கும். நீங்கள் பெரிய அளவிலான நகைகளை அணிவதில் விருப்பம் கொண்டவராக இருந்தால் மெட்டல் நகைகள் இல்லாமல் சில்க் திரெட், டெரகோட்டா போன்ற அணிகலன்களை அணியலாம். டிரெடிஷ்னல் வெஸ்டர்ன் என எப்படி உடையணிந்தாலும் அதற்கு ஏற்ற வகையில் அதிக அளவிலான வலையல்களை அணியுங்கள். பெஸ்டிவல் லுக்கை அளிக்கும். அதேபோல், கொண்டாட்டங்களுக்கு முக்கியதுவம் இருக்கும் இடத்தில் நம் கவனமும் அதில் மூழ்கிவிடும். அப்போது விலை உயர்ந்த நகைகளை அணிவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

அடுத்ததாக ஹேன்ட் பேக், சன் கிளாஸ், தொப்பி என கூடுதல் துணைப் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிருங்கள். அவை கீழே விழுந்து தொலைந்துவிடும் வாய்ப்பு அதிகம். அவை விலை உயர்ந்ததாக இருந்தால் உங்களுக்கு மன வருத்தமே. காலணி தேர்வில் பிளாட் செருப்பு தேர்வு செய்யுங்கள் அல்லது ட்ரெண்டியான பிளோரல் லூஃபர் ஷூ அணிந்து சவுகரியமாக துள்ளிக் குதித்து நடனமாடி ஹோலியைக் கொண்டாடுங்கள்.

Loading...

சிகை அலங்காரம்எல்லோரும் அதிக பட்சமாக லூஸி அல்லது ஃபிரீ ஹேர் ஸ்டைல்தான் தேர்வு செய்வார்கள். அது எடுப்பாகவும் இருக்கும். இருப்பினும் ஸ்டைலாக இருக்க வேண்டுமெனில் முடியை கர்லிங் செய்து கொண்டு வாட்டர் ஃபால் ஹேர் ஸ்டைல் செய்யுங்கள். ஹோலிக்கு பர்ஃபெக்டான ஹேர் ஸ்டைலாக இருக்கும். இருப்பினும் தலைமுடி மீது அதிக கவனம் இருப்போர் வகை வகையான கொண்டை அல்லது பிரெஞ்ச் பின்னல், பிஷ் டெயில் பின்னல், டச் பின்னல் என உங்கள் கூந்தலை அலங்கரியுங்கள். முடி பராமரிப்பு மட்டுமன்றி ஃபீல் ஃபிரியாகவும் உணர்வீர்கள். கூடுதல் ஸ்டைலுக்கு தலையில் புளோரல் ஸ்காஃப் அல்லது பெரிய அளவிலான கைக் குட்டையை கட்டிக் கொள்ளலாம்.

ஒப்பனை அலங்காரம்ஹோலி பண்டிகையில் வண்ணப் பொடிகளை முகத்தில் பூசி மகிழ்வதுதான் முக்கிய அம்சமே. அந்த இடத்தில் ஹெவி மேக் அப் செய்து கொள்வது எடுப்பாக இருக்காது. குறைவான ஃபவுண்டேஷன் அப்ளை செய்து காம்பேக்ட் போடுங்கள். லிப்ஸ்டிக் விஷயத்தில் சிவப்பு, பிங்க் என பளீர் நிறங்களை தேர்வு செய்து போல்டாக அணியுங்கள். அதேபோல் கண்மையும் அடர்த்தியாக இட்டுக் கொள்ளுங்கள். ஹைஷாடோ தேவைப்பட்டால் அப்ளை செய்யலாம். எல்லாவற்றையும் விட சன் ஸ்கிரீணை கட்டாம தடவிக் கொள்ளுங்கள். அப்போதுதான் வண்ணப் பொடிகளின் கெமிக்கல் நேரடியாக ஸ்கின்னை பாதிக்காது. சிலருக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. அதேபோல் அப்ளை செய்யும் ஃபவுண்டேஷன் மற்றும் காம்பேக்ட் லேயர்களும் வண்ணப் பொடிகள் நேரடியாக படாமல் ஸ்கின்னை பாதுகாக்கும். கைகளில் பாடி லோஷன் அல்லது தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து செல்லுங்கள். இதனால் சாயம் ஒட்டிக்கொள்வது குறையும்.
First published: March 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...