இது கிறிஸ்துமஸ் சீசன் (Christmas season), அதோடு நாம் குளிர் காலத்தில் இருக்கிறோம். இதனால் குளிருக்கு பயந்து உங்கள் உடைகளில் தளர்வு காட்டாதீர்கள். உடை என்பது ஆளுமையின் ஒரு முக்கிய அம்சம். அதுவும் குறிப்பாக பண்டிகை காலங்களில் நாம் அணியும் உடைகள் நேர்த்தியாகவும், ஸ்டைலாகவும் இருப்பது முக்கியம். காலத்திற்கேற்ப உடைகளை அணிந்து அனைவரையும் கவர்வது ஒரு தனி கலை தான்.
அந்த வகையில் இந்த கிறிஸ்மஸ் சீசனுக்கு (Christmas season) ஏற்ற பின்வரும் டிரஸ் டிப்ஸ்களை நீங்கள் செக் செய்வது முக்கியம். நீங்கள் சீக்வன் உடையை (sequin dress) அணிய விரும்புகிறீர்களா அல்லது கதகதப்பான கோட் போதுமா? பேஷன் உலகில் அனைவருக்கும் எல்லா உடைகளையும் எளிதாக செட் ஆக்கலாம். கொரோனா வைரஸால் ஊருக்கு செல்லமுடியாமலோ, பள்ளி/கலோரி நண்பர்களை சந்திக்க முடியாமல் தவிக்கிறீர்களா? பின்வரும் டிரஸ் டிப்ஸ்களை பின்பற்றி அனைவரையும் அசர வைத்திடுங்கள்.
பலரையும் அசர வைப்பதற்கு ஏற்ற உடை (For the fun type) :
உங்கள் ஆடை ஒரு கிறிஸ்துமஸ் மரம் போல இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஒரு தொடர்ச்சியான உடை அல்லது பிரகாசமான வெல்வெட் ஆடையை நீங்கள் தேர்வு செய்வது ஒரு சிறந்த வழி. தேர்வு செய்ய சில விருப்பங்கள் இங்கே உள்ளது. பால் கவுனில் உண்மையில் நீங்கள் தேவதை போல இருப்பீர்கள். குறிப்பாக, உயரம் குறைந்தவர்களுக்கு இந்த உடை எடுப்பாக இருக்கும். ஏசிம்மெட்ரிக் (Asymmetric) கவுன் சமச்சீரற்ற, இருபுறமும் வெவ்வெறு வடிவங்களை கொண்ட கவுன், ஏசிம்மெட்ரிக் கவுனாகும். கவுனின் பாவாடைகளின் ஒவ்வொரு புறமும் ஏற்ற, இறக்கமாய் இருக்கும். பார்க்கும் போது நல்லா இல்லாதது போல் இருக்கும். ஆனால், அணிந்தால் அட்டகாசமாக இருக்கும்.
நீங்கள் ஜாலியான நபர் என்றால் உங்கள் தோற்றத்தை சூப்பராக பிரதிபலிக்க, சில தங்க மற்றும் வெள்ளி நிற ஸ்னீக்கர்களை (sneakers) நீங்கள் தேர்வு செய்யலாம், அது நிச்சயமாக பலரையும் கவரும்.
கிளாசிக் நபர்களுக்கு ஏற்ற உடை (For the classy one) :
நீங்கள் ஒரு ஃபேஷன் பிரியராக இருந்தால், ஸ்கர்ட் மற்றும் ஸ்வெட்டர் (skirt and a sweater) போன்ற நுட்பமான மற்றும் ஒரே வண்ணமுடைய உடை அலங்காரத்தை அணிவது உங்களுக்கு சரியானதாக இருக்கும். இதற்கு பின்வரும் படத்தை காணலாம்.
ஒரு ஸ்லிங் பேகுடன் (sling bag) அற்புதமான மேட்ச்சிங் பூட்ஸ் உங்களை வேற லெவலில் காட்டும். அதோடு நீங்கள் ஒரு கிறிஸ்துமஸ் விருந்திற்கு செல்லகிறீர்கள் என்றால் வேறென்ன வேண்டும். இந்த காம்பினேஷன் நபராக இருக்க வேண்டும்.
கம்பர்ட்டான ஆட்களுக்கு ஏற்ற உடை (For the ‘comfort first’ one) :
ஃபேஷன், ஸ்டைல், ஆடம்பரம் போன்றவற்றை விலக்கி உங்களுக்கு உங்களுடைய கம்பர்ட் முக்கியம் என்றால் அதற்கான உடைகளும் பேஷன் உலகில் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் வசதியான உடையை தேடுகிறீர்களானால், நீங்கள் அவுட் ஆப் ஃபேஷன் என்று அர்த்தமல்ல. அதற்கு பெரிய குளிர்கால கோட்டுகள் மற்றும் தளர்வான பேண்ட்களை நீங்கள் தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு டெய்லர் ஸ்விஃப்ட்டின் எவர்மோர் ஆல்பம் கவரைப் (Taylor Swift’s Evermore album cover) பாருங்கள்.
டெய்லர் (Taylor) ஒரு ஸ்டெல்லா மெக்கார்ட்னி (Stella McCartney) கிரியேஷனை அணிந்திருப்பார். லேயர் கவுன்கவுனின், பாவாடை ஒன்றுக்கு மேற்பட்ட அடுக்குகளை கொண்டிருக்கும். அடுக்குகளின் எண்ணிக்கையால், பாவாடை அடர்த்தியாக இருக்கும். எந்த வேலைப்பாடும் இன்றி, லேயர் கவுனின் அடர்த்தியே, தனியாக நின்று ஆடைக்கு எழிலுாட்டும். லேயர் கவுன்கள் அனைத்து உடல்வாகு கொண்டவர்களுக்கும், பொருத்தமாக இருக்கும்.
நீங்கள் கம்பர்ட்டாகவும், நாகரீகமாகவும் இருக்க மற்றொரு வழி, என்ன தெரியுமா? உங்கள் உடைகளின் மீது ஒரு ஃபர் ஜாக்கெட்டை (fur jacket) அணிந்துகொள்வது தான்.
நியான் உடை பிரியர்களுக்கு (For the neon lovers) :
நீங்கள் நியான் ஆடைகளை அணிய விரும்பினால், இந்த கிறிஸ்துமஸ் விருந்திற்கு நியான் ஆடைகளை அணிந்து செல்லுங்கள். ஜாக்கெட் கவுன்களுடன், ஜாக்கெட்டுகள் இணைந்து வருவதே ஜாக்கெட் கவுன். கவுன்களுக்கு மேலோ தனியாக அணியும் வகையில் இவை உள்ளது. இவை ஜாக்கெட்டின் முன்பக்கம், முட்டி வரையும், பின்பக்கம் அதைவிட நீளமாகவும் இருக்கும். பிளைன் கவுன்களுக்கு, எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்த ஜாக்கெட்டும், வேலைப்பாடு கொண்ட கவுன்களுக்கு, அடர்நிற பிளைன் ஜாக்கெட்டும் அணியலாம்.
மலர் அச்சு உடைகளை அணிய விரும்புவோருக்கு (For the floral print lovers) :
பிரகாசமான மலர் அச்சு உடைகளுடன் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை நீங்கள் கொண்டாட விரும்பினால் அட்டகாசமாக இருக்கும். மேலும் மலர் அச்சு உடைகளில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
குட்டிஸ்களுக்கான ஆடைகள் (Children collections) :
இண்டோ-வெஸ்டர்ன் ஸ்டைலில் வந்துள்ள லேட்டஸ்ட் கவுன் மாடல்கள், கிறிஸ்துமசுக்கு சர்ச்சுக்கு அணிய பொருத்தமாக இருக்கும். ரவுல் கவுன் ஆடைகளில் 'ரவுல்' கள் தற்போது டிரெண்டாக உள்ளது. ஆடையின் பார்டர்களில், ரவுல்கள் அல்லது பிரில்கள் இணைக்கப்பட்டிருக்கும். ரவுல் கவுனில், இடுப்புக்கு கீழ் பாவாடை பகுதி முழுவதும், மேலிருந்து, கீழாக ரவுல்கள் அல்லது பிரில்கள் இருக்கும். உயரமாகவுள்ள குழந்தைகளுக்கு இவை ஸ்டைலிஷ் லுக் தரும்.