திருமதி இந்தியா 2019-க்கான பட்டத்தை வென்று குஜராத் பெண் சாதனை...!

திருமணமானதும் குழந்தை , குடும்பம் என்ற நினைப்பில் தன்னுடைய அடையாளத்தைப் பெண்கள் இழந்துவிடுகின்றனர். அவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் - பூஜா தேசாய்

திருமதி இந்தியா 2019-க்கான பட்டத்தை வென்று குஜராத் பெண் சாதனை...!
பூஜா தேசாய்
  • News18
  • Last Updated: September 25, 2019, 10:50 PM IST
  • Share this:
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பூஜா தேசாய் என்ற இல்லத்தரசி திருமணமான பெண்களுக்கான மிர்சஸ் இந்தியா பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

MIPON என்ற நிறுவனம் இந்த அழகிப் போட்டியை நடத்தியுள்ளது. அதில் வெற்றி பெறுவதற்கான இலக்காக அவர்களின் அழகு, பர்சனாலிட்டி, தன்னம்பிக்கை ஆகியவற்றைக் கண்காணித்தது. அதில் இறுதியில் மூன்றிலும் திறம்பட செயல்பட்ட பூஜா தேசாய் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த அழகிப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 4,500 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் பூஜா வெற்றி பெற்றுள்ளார். “ பயிற்சி காலத்தில் காலை 7.30 மணிக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும். இரவு இரண்டு மணி வரை மேடைக்கான நடைப் பயிற்சி இருக்கும். அத்தனை கடின உழைப்பிற்குமான பலன் இன்று கிடைத்துள்ளது என்று ஏ.என். ஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அவரிடம் குடும்பம் வேலை இரண்டையும் எப்படி சமாளித்தீர்கள் என்ற கேள்விக்கு “ பெண்கள் தங்களுடைய இலக்கை அடைவதில் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டோடு இருந்தால் நேரத்தை சமாளிப்பது கடினமாக இருக்காது. திருமணமானதும் குழந்தை , குடும்பம் என்ற நினைப்பில் தன்னுடைய அடையாளத்தைப் பெண்கள் இழந்துவிடுகின்றனர். அவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் “ என்று கூறியுள்ளார் பூஜா.

இந்தப் பட்டம் இரண்டு வகைகளாகப் பிரித்து இருவருக்கு வழங்கப்பட்டது. அதில் தைரியமாக ஆடிஷனில் கலந்துகொண்டவர், பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற கோணத்தில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சலோனி பகிர் என்ற பெண்ணிற்கும் வழங்கப்பட்டது. இப்படி இரண்டு வகைகளில் முதல் ரன்னர்களாக கன்ஜன் கோயல் மற்றும் பிரதிமா டேவிட் ஆகியோரும் இரண்டாவது ரன்னர்களாக தீபாஞ்சலி முண்டடா மற்றும் மன்யா புன்யானி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.இதைத் தொடர்ந்து பகுதி வாரியாகவும் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் எஸ்தர் பெர்னார்ட் தென் இந்தியாவின் அழகியாகவும், சுருதி சிங் வட இந்தியாவின் அழகியாகவும், ஹெமலதா ஷர்மா மேற்கு இந்தியாவின் அழகியாகவும், அலோலைகா கிழக்கு இந்தியாவின் அழகியாகவும் அறிவிக்கப்பட்டனர். 
View this post on Instagram

 

A post shared by Pooja P. Desai, Mrs India 2019 (@ppdesai_mrsindia2019) on
 
View this post on Instagram

 

A post shared by Pooja P. Desai, Mrs India 2019 (@ppdesai_mrsindia2019) on
 
View this post on Instagram

 

A post shared by Pooja P. Desai, Mrs India 2019 (@ppdesai_mrsindia2019) on
First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading