Home /News /lifestyle /

சமந்தா கட்டியிருக்கும் இந்த சேலையின் விலை எவ்வளவு தெரியுமா..?

சமந்தா கட்டியிருக்கும் இந்த சேலையின் விலை எவ்வளவு தெரியுமா..?

சமந்தா

சமந்தா

சமந்தாவை அவரது பேஷனுக்காகவே ஏராளமான இளம் பெண்கள் பின்பற்றி வருகின்றனர். புடவையில் ஆரம்பித்து ஷார்ட்ஸ் வரை விதவிதமாக மார்டன் உடைகளில் வலம் வரும் சமந்தா டீன் ஏஜ் பெண்களின் ட்ரெண்ட் செட்டராக உள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சொந்த வாழ்க்கையில் என்ன தான் சமந்தா விவாகரத்து போன்ற பிரச்சனைகளை கடந்து வந்தாலும், சோசியல் மீடியாவில் அதற்கான எதிர்வினை கமெண்ட்களை எதிர்கொண்ட விதம், மீண்டும் துணிச்சலுடன் தனது வேலையில் கவனம் செலுத்தி வருவது ஆகியவை சமந்தாவை பலருக்கும் ரோல் மாடலாக மாற்றியுள்ளது.

பிரபலமான நடிகைகள் திருமணத்திற்கு பிறகு குத்து டான்ஸ் பாடலுக்கு ஆட நிறைய அழைப்புகள் வரும், ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சமந்தா முதன் முறையாக ஆடிய ‘ஓ.. சொல்றீயா..” குத்து பாடல் பட்டி, தொட்டி எல்லாம் கடந்து உலக அளவில் ஹிட்டாகியுள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை வெப் சீரிஸ், படங்கள் என பிசியாக வலம் வரும் சமந்தா, சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக வலம் வருகிறார்.

குறிப்பாக அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி தனது போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வரும் சமந்தா, பேஷன் உடைகள் மற்றும் ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல்களுக்கான ட்ரெண்ட் செட்டராக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, தான் அன்றாடம் அணியும் கேஷ்வல் உடைகள் முதல் ஷூட்டிங் மற்றும் அல்ட்ரா மார்டன் உடைகள் வரை விதவிதமான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.



சமந்தாவை அவரது பேஷனுக்காகவே ஏராளமான இளம் பெண்கள் பின்பற்றி வருகின்றனர். புடவையில் ஆரம்பித்து ஷார்ட்ஸ் வரை விதவிதமாக மார்டன் உடைகளில் வலம் வரும் சமந்தா டீன் ஏஜ் பெண்களின் ட்ரெண்ட் செட்டராக உள்ளார். தென்னிந்தியாவின் சென்சேஷன் அழகியான சமந்தா தற்போது வெயிட் அண்ட் பிளாக் கலர் புடவை, மஞ்சள் கலர் ஸ்லிவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வெளியிட்டுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய பேட் அல்லது தூக்கி எறியக்கூடிய பேட் : எது பயன்படுத்த சிறந்தது..?

டிசைனர் ப்ரீதம் ஜுகல்கர், வெள்ளை நிற தாரா மஷ்ரு புடவையில் கருப்பு நிற நேர்கோடுகளை சேர்த்து, அதற்கு மேட்சிங்காக மாம்பழ கலர் பார்டரையும் இணைத்து சமந்தாவிற்காகவே பார்த்து பார்த்து இந்த புடவையை உருவாக்கியுள்ளார். பார்க்க டிசைனர் புடவை போல் தெரிந்தாலும், இதன் மேற்பரப்பு பட்டு துணியால் நெசவு செய்யப்பட்டுள்ளது. சமந்தாவிற்கு அழகுக்கு மேலும் அழகூட்டும் வகையில் புடவை பளபளக்க இதுவே காரணமாகும்.



துடுக்கான பார்வையுடன் மிடுக்காக போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் புடவை பல இளம் பெண்களின் கண்களையும் உறுத்த ஆரம்பித்துள்ளது. எனவே சமந்தா அணிந்துள்ள புடவை எங்கே கிடைக்கும், என்ன விலை என இணையத்தில் தேடலை ஆரம்பித்துள்ளனர். அப்படி ஆவலுடன் சமந்தாவின் புடவை விலையை அறிந்து கொள்ள நினைத்தப்பவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். சமந்தா அணிந்துள்ள இந்த கையால் நெய்யப்பட்ட இந்த புடவையின் விலை 32.800 ரூபாய் ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Actress Samantha, Fashion Look

அடுத்த செய்தி