Home /News /lifestyle /

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கப்போகிறீர்களா - இந்த ஐந்து விஷயங்களை மறக்காதீர்கள்!

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கப்போகிறீர்களா - இந்த ஐந்து விஷயங்களை மறக்காதீர்கள்!

தங்கம்

தங்கம்

Akshaya Tritiya 2022 | தங்க நாணயங்களை வாங்கும் பொழுது உங்களுக்கு செய்கூலி சேதாரம் ஆகியவை மிகக்குறைந்த அளவில் தான் சேர்க்கப்படும். எனவே நீங்கள் 10 கிராம் தங்கத்தை நகையாக வாங்கினால் செலுத்த வேண்டிய தொகையை விட, 10 கிராம் தங்க நாணயத்துக்கு குறைவான தொகை தான் செலுத்துவீர்கள்.

மேலும் படிக்கவும் ...
அள்ள குறையாதது என்பதை அட்சயம் என்று கூறுவார்கள். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது என்பது கிட்டத்தட்ட ஒரு பழக்கமாகவே கடந்த சில ஆண்டுகளாக மாறி விட்டது. இந்தியர்கள் விசேஷ தினங்களில் தங்கம் வாங்குவார்கள். நகையாக வாங்கவில்லை என்றாலும், நல்ல முதலீடு என்பதால் தங்க நாணயங்களாக வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது கிட்டத்தட்ட 50,000 ரூபாயை எட்டியிருக்கும் தங்கத்தின் விலை, மேலும் அதிகரிக்கும்.

பொதுவாகவே தங்கம் வாங்கும் பொழுது முகூர்த்த நாள் அல்லது அனுகூலமான நாளாக இருக்கிறதா என்று பார்த்துதான் வாங்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அதில் அட்சய திருதியை அன்று ஒரே ஒரு கிராம் தங்கமாவது வாங்கி விட வேண்டும் அல்லது ஒரே ஒரு தங்க நாணயமாவது வாங்கிவிட வேண்டுமென்று பலருக்கும் ஆசை இருக்கிறது. நீங்களும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இருக்கிறீர்கள் என்றால் இந்த ஐந்து விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்!

தங்கத்தின் தூய்மை (காரட்)

தங்கத்தை நகையாக வாங்கும் பொழுது, 18 காரட், 22 காரட் என்று தங்கத்தின் தூய்மையைப் பொறுத்து ஒரு கிராம் தங்கத்தின் விலை மாறும். ஆனால் நீங்கள் தங்க நாணயமாக வாங்கும் பொழுது 100% தூய்மையான தங்கமான 24 காரட் தங்க நாணயத்தை வாங்கலாம். 24 கேரட் தங்கம் என்பது நகைகள் செய்வதற்கு உகந்ததல்ல என்பதால் அதில் கொஞ்சம் செம்பு சேர்க்கப்பட்டு 22 காரட் கோல்ட் நகைகளாக செய்யப்படும். ஆனால் நாணயங்களை பொறுத்தவரை 24 காரட் தங்கத்தில் கிடைக்கும். எனவே, தங்கத்தின் காரட் எவ்வளவு என்பதை இறுதி செய்து நாணயங்களை வாங்குங்கள்.

ஹால்மார்க் சின்னம்

இந்திய தரச் சான்றிதழ் அடிப்படையில் ஒரு தங்கம் எந்த அளவுக்கு கலப்பில்லாதது என்பதை ஹால் மார்க் சின்னம்தான் உறுதி செய்யும். நீங்கள் வாங்கும் தங்கம் BIS சான்றளிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய அதில் ஹால்மார்க் சின்னம் இருக்கிறதா என்று பாருங்கள்.

Also Read... அட்சய திருதியை அன்று கண்டிப்பாக இதை செய்யுங்கள்...

தங்கத்தின் எடை

தங்கம் பொதுவாகவே கிராம் கணக்கில் தான் எடை போடப்பட்டு விலை என்ன என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே நீங்கள் தங்க நாணயம் வாங்க போதும் எந்த எடையில் அல்லது டினாமினேஷனில் வாங்க போகிறீர்கள் என்பதை முடிவு செய்வது மிகவும் அவசியம். பொதுவாகவே தங்க நாணயங்கள் ஒரு கிராம், ஐந்து கிராம் மற்றும் பத்து கிராம்கள் வரை கிடைக்கும். ஒரு சில இடங்களில் அரை கிராம் முதல் 50 கிராம் வரை கூட தங்க நாணயம் கிடைக்கும்.



தங்க காசுகளுக்கு செய்கூலி குறைவு

தங்க நாணயங்களை வாங்கும் பொழுது உங்களுக்கு செய்கூலி சேதாரம் ஆகியவை மிகக்குறைந்த அளவில் தான் சேர்க்கப்படும். எனவே நீங்கள் 10 கிராம் தங்கத்தை நகையாக வாங்கினால் செலுத்த வேண்டிய தொகையை விட, 10 கிராம் தங்க நாணயத்துக்கு குறைவான தொகை தான் செலுத்துவீர்கள். எனவே, உங்களுக்கு நகையாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்றால் நீங்கள் முதலீடாக தங்கத்தை, தங்க நாணயங்கள் ஆக வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

Also read... Akshaya Tritiya 2022 | அட்சய திருதியை 2022 தேதி மற்றும்‌ நேரம்‌ குறித்த தகவல்கள்...

தங்க நாணயங்களை விற்பது

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள படி நீங்கள் வங்கியிலிருந்து தங்க நாணயங்களை வாங்கினால் அதே வங்கிக்கு மீண்டும் உங்களால் அதை விற்பனை செய்ய முடியாது. எனவே நீங்கள் தங்கம் விலை ஏறும் வரை காத்திருந்து விற்பதற்காக தங்க நாணயங்களில் முதலீடு செய்தால், நீங்கள் வாங்கும் தங்க நாணயங்களை ஆன்லைன் தளங்களிலோ அல்லது நகை கடைகளில் விற்பனை செய்ய முடியும்.

Also Read... தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
Published by:Vaijayanthi S
First published:

Tags: Akshaya Tritiya, Gold

அடுத்த செய்தி