நீச்சல் உடையில் துர்க்கையின் உருவப்படம்!

இந்தியர்கள் வழிபடும் துர்கையின் உருவப்படம் பொருத்தியிருப்பதுதான் அதன் முக்கிய அம்சம்.

Web Desk | news18
Updated: January 9, 2019, 10:35 PM IST
நீச்சல் உடையில் துர்க்கையின் உருவப்படம்!
செரா அல்கெர் 
Web Desk | news18
Updated: January 9, 2019, 10:35 PM IST
லண்டனை சேர்ந்த ஃபேஷன் டிசைனரான செரா அல்கெர்  'SULDN’ என்கிற ஃபேஷன் லேபிளை உருவாக்கியுள்ளார். அந்த லேபிளில் இந்தியர்கள் வழிபடும் துர்க்கை அம்மனின் உருவப்படம் பொருத்தியிருப்பதுதான் அதன் முக்கிய அம்சம்.டிஜிட்டல் பிரிண்டட் ஆடைகள்தான் செராவின் சிறப்பு. அவரின் ஒவ்வொரு பிரிண்டுகளும் வித்தியாசமாகவும், வண்ணங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூரும்  செராவின் ஆடைகளை பல நிகழ்ச்சிகளுக்கு அணிந்துள்ளார்.  அவர் இந்திய கடவுளான துர்க்கையின் உருவச்சிலைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார். அதனையொட்டி தனது ஆடைகளில் துர்க்கையின் படம் பொறிக்கப்பட்ட நீச்சல் உடை, ஜெங்கின் பேண்ட் மற்றும் ஜாக்கெட் ஆகியவை வடிவமைத்துள்ளார். செராவின் தளத்தின் முதல் பக்கத்திலேயே இந்த ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.நீச்சல் உடைக்கு ஆங்கிலத்தில் goddess sherwali swimsuit எனப் பெயர் வைத்துள்ளார். ஷெர்வாலி என்பதற்கு சிங்கத்தைக் கொண்ட கம்பீர துர்க்கை என்று அர்த்தம். ஆகவே இந்த ஆடையை அணியும் பெண்களும் தங்களை கம்பீரமாக உணர்வார்கள் என்றும் அவர்களின் தைரியத்தை ஊக்குவிப்பதைப் போன்றும் இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. நீச்சல் உடை மட்டுமன்றி மற்ற எல்லா ஆடைகளிலும் goddess என்கிற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆடைகள் ஒவ்வொன்றும் பத்தாயிரம் தொடங்கி நாற்பதாயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Also watch

First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...