ஒவ்வொரு இந்திய பெண்ணுக்கும் திருமண நாளில் அவர்கள் அணியக்கூடிய உடை என்பது மிகவும் முக்கியமானது ஆகும். வாழ்நாளிலேயே மறக்க முடியாத நாளான திருமணம் அன்று, தேவதை போல் ஜொலிப்பது யாருக்குத் தான் பிடிக்காது. இந்தியாவில் இந்து முறைப்படி நடத்தப்படும் திருமணங்கள் அனைத்துமே 3 அல்லது 4 நாள் கொண்டாட்டங்களை அடிப்படையாக கொண்டது.
மெஹந்தி, சாகன், நிச்சயதார்த்தம், சங்கீத், திருமணம் என ஒவ்வொரு நாளும் மணப்பெண் விதவிதமான உடையை அணிந்து கொண்டாட்டங்களில் பங்கேற்பது வழக்கம். எனவே தான் திருமணத்தன்று மணமகள் சிறப்பாகவும், அழகாகவும் ஜொலி ஜொலிக்க ஏற்ற உடைகள் குறித்து பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஆகன்ஷா சிங்கால் பகிர்ந்துள்ள சில பயனுள்ள குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்துள்ளோம்.
1. புடவை:
இந்திய திருமணங்களை பொறுத்தவரை அனைத்து விதமான விசேஷங்களும் அணியக்கூடிய எளிதான மற்றும் அழகான அடையாக புடவை கருத்தப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் நிபுணத்துவம் பெற்ற புடவைகள் வடிவமைக்கப்படுகின்றன. மேலும் பார்த்து பார்த்து வாங்கிய தனித்துவமான புடவைகளை, அணிய பல வகையான பாணிகளும் உள்ளது.
2. வண்ணமயமான துப்பட்டாவுடன் சுடிதார்:
புடவைக்கு அடுத்தபடியாக ஒவ்வொரு பெண்ணும் அதிகம் விரும்பி அணியும் உடை துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அல்லது குர்தா ஆகும். பாட்டியாலா, அனார்கலி அல்லது நீண்ட குர்தா மற்றும் சுடிதாருடன் தேர்ந்தெடுக்கப்பட்டன கிராண்டான துப்பட்டாங்களை சேர்க்கும் போது, அது உங்களுக்கு தனித்துவமான லுக்கை தரும். இதற்கு ஏற்றார் போல் பேண்ட், லெக்கின்ஸ், பலாஸ்ஸோ போன்றவற்றை அணியலாம்.
Also Read :
சிவப்பு நிற லெஹங்காவில் பேஷன் வாக் செய்த புஷ்பா பட நாயகி ராஷ்மிகா.!
3. லெஹங்கா & சோளி:
வட இந்திய திருமணங்களில் மட்டுமே பிரபலமாக இருந்து வந்த லெஹங்கா, தற்போது தென்னிந்திய திருமணங்களிலும் அணியப்படுகிறது. மணப்பெண் முதற்கொண்டு அவரது தோழிகள் வரை ரிஷப்ஷன் போன்ற விசேஷத்திற்கு லெஹங்கா அணிந்த தேவதைகளாய் வலம் வருவதைக் காணலாம். எம்பிராய்ட்ரி, ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட கனமான அல்லது லேசான லெஹங்காவை நீங்கள் எந்த நிகழ்ச்சியிலும் அணியலாம். குறிப்பாக மணப்பெண், லெஹெங்காக்கள் மூலமான தனது மணப்பெண் லுக்கை மேலும் மேம்படுத்த முடியும்.
4. கவுன்:
திருமணத்தின் மாலை நேர நிகழ்ச்சிகளுக்கு கவுன்கள் சிறந்த தேர்வாகும். சீக்வின்கள், மணிகள், பூக்கள் போன்ற பல்வேறு வகையான டிசைன்களைக் கொண்ட கவுன்கள் மணப்பெண்ணின் அழகை மேலும் மெருகேற்ற உதவும். தற்போது கவுன்கள் நவீன டிசைன்களுடன், பாரம்பரியத்தையும் கலக்கும் பியூஷன் போலவும் கிடைக்கின்றன.
5. பிளவுஸ் & அனார்கலி ஸ்கர்ட்:
மணப்பெண்ணுக்கு கிராண்டான மற்றும் நவநாகரீக லுக்கை கொடுக்க அனார்கலி ஸ்கர்ட் மற்றும் டிசைனர் பிளவுஸ் சிறந்த தேர்வாகும். இரவு பார்ட்டிகளில் லேசான டோன்களைக் கொண்ட காட்டன் அனார்கலி சூட்கள் சிறப்பான ஆடையாகும். பருத்தி ஆடையால் செய்யப்பட்ட அனார்கலி ஸ்கர்ட் மற்றும் பிளவுஸ் மிகவும் பொருத்தமானது. பருத்தி பட்டு, சாந்தேரி பருத்தி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டு அல்லது பருத்தி அனார்கலிகள் எவ்வித சந்தேகமும் இன்றி மணப்பெண்ணுக்கு வசதியாகவும், கிராண்டாகவும் இருக்கும். இந்த அனார்கலி ஸ்கர்ட்களை நீங்கள் விரும்பும் க்ராப் டாப் அல்லது பிளவுஸ்களுடன் இணைக்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.