ஃபேஷன் தேவதை தீபிகா!

கம்ஃபோர்ட்டாக இல்லாத எந்த ஆடையையும் தீபிகா அணிய மாட்டார்

ஃபேஷன் தேவதை தீபிகா!
தீபிகா படுகோனே
  • Share this:
கேன்ஸ் திரைப்பட விழாவில் அத்தனைக் கண்களும் தீபிகாவை மொய்ப்பதற்கு காரணம் அவர் பாலிவுட்டின் பெரிய செலிபிரடி என்பது மட்டுமல்ல, அவரின் தனித்தன்மையான அடையாளமும் அதற்கு காரணம். லக்ஸரியான வாட்ரோப் கலெக்‌ஷன்கள் கொண்ட நடிகைகளில், தீபிகாவும் ஒருவர். இவர் எந்த ஆடை அணிந்தாலும், அது அன்றைய பேஷன் உலகில் செய்தியாகிவிடுகிறது.

பொதுவாக தீபிகாவின் ஆடிட்யூடுக்கு ஏற்பவே அவரது ஆடை அலங்காரமும் இருக்கும். “என் குணத்திற்கு ஏற்பவே என் ஆடை அலங்காரங்கள் இருக்கும். அதேபோல், ஆரம்ப காலகட்டத்திலிருந்து, இதுநாள் வரை என் ஸ்டைல் மாறியதில்லை” என்கிறார் தீபிகா படுகோன். இத்தனை தன்னம்பிக்கையோடு இவர் வெளியுலகை எதிர்கொள்வதில், அவரின் நேர்த்தியான ஆடைக்கும் பங்குண்டு.

“கம்ஃபோர்ட்டாக இல்லாத எந்த ஆடையையும் தீபிகா அணிய மாட்டார். அதுவும், சிம்பிள் மற்றும் சிக் தோற்றத்தை அந்த ஆடை அளிக்க வேண்டும்“ என, தீபிகாவின் மிளிரும் அழகிற்குக் காரணமான ஸ்டைலிஸ்ட் அனைடா ஷ்ரஃப் (anaita shroff) ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் டாப் ஸ்டைலிஸ்ட்களில் ஒருவரான அனைடா, வோக் மாத இதழின் ஃபேஷன் இயக்குநராக இருக்கிறார். கேன்ஸ் திரைப்பட விழா, விருது நிகழ்ச்சிகள் என தீபிகாவின் அனைத்து நிகழ்வுகளுக்கும் அனைடாதான் முக்கியப் பொறுப்பு. திரைப்படங்களுக்கும் இவர்தான் ஸ்டைலிங் செய்கிறார். “எனக்கு சிறந்த ஸ்டைலிங் திறமை, ஆடைத் தேர்வுத் திறமை இருக்கிறதென்று நீங்கள் நினைத்தால், அதற்கு முற்றிலும் அனைடாதான் காரணம். அவர்தான் என்னுடைய ரசனைக்கேற்ப ஆடைகளை தேர்வு செய்கிறார்” என்கிறார் தீபிகா.

தீபிகாவின் அதிகபட்ச வாட்ரோப் கலெக்‌ஷன்களில் இந்திய ஸ்டைல் ஆடைகளே ஆதிக்கம் செலுத்தும்.  இந்த வகையில் அவருக்கு புதுப்புது கலெக்‌ஷன்கள் பிரத்யேகமாக வடிவமைத்துக் கொடுப்பவர்கள், அபுஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா. இவர்கள் இருவரும் விலையுயர்ந்த இந்திய ஆடைகளை வடிவமைப்பதில் கைத்தேர்ந்தவர்கள். இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக, மிக முக்கியத் தருணங்களுக்கு,  மனிஷ் மல்ஹோத்ரா, சப்யாசாச்சி, அனாமிகா கண்ணா, தருண் தஹிலியானி ஆகியோரின் ஆடைகளை அணிவதை, தனது விருப்பமாகக் கொண்டிருக்கிறார் தீபிகா. இவர்கள்தான் தன்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் டிசைனர்கள் என்றும் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார் தீபிகா.

எத்னிக் ஆடைகள் என்று குறிப்பிடும்போது, தீபிகா அதிகமாக புடவையில்தான் உலா வருவார். அதற்குக் புடவையின் மீதான அவரின் தீராதக் காதலே காரணம். குறிப்பாக மணிஷ் வடிவமைத்த  புடவைகளையே அதிகமாக அணிகிறார்.  அதுதான் ஆல்டைம் டிரெண்ட் என்றும் கருதுகிறார்.

ஆடைகளை அணிவதைப் போன்றே, அதற்குப் பொருத்தமான காலணி அணிவதிலும் கவனமாக இருப்பார். குறிப்பாக தீபிகா அதிகம் ஷூ அணிவதைக் காணமுடியும். ஏனெனில், ஷூதான் தீபிகாவிற்கு சவுகரியத்தை அளிக்கிறதாம். மேலும் தீபிகாவிடம் ஷூ கலெக்‌ஷன்கள்தான் அதிகமாக இருக்கின்றன. அதேபோல், வாட்ச் அணிவதிலும் தீபிகாவை மிஞ்ச முடியாது. இவை இரண்டையும் தாண்டி, மற்ற ஆக்சஸரிகள் விஷயத்தில், அதிகம் அக்கறை செலுத்தமாட்டார்.இந்திய எத்னிக் ஆடைகளைப் போன்றே, வெஸ்டர்ன் ஆடைகள் அணிவதும் தீபிகாவுக்கு பிடிக்கும். குறிப்பாக பென்களால் அதிகம் ஈர்க்கப்பட்டது, இவரின் காக்டெய்ல் ஸ்டைல்தான். வெஸ்டர்ன் ஆடைகளை அணிவதில், லார்ஃப் லாரன் மற்றும் டோல்ஸ் & கப்பானா ஆகிய பிராண்டுகள்தான் தீபிகாவின் ஃபேவரைட். லண்டன், நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகியவைதான் தீபிகாவின் விருப்பமான ஷாப்பிங் டெஸ்டினேஷன்கள்.

தீபிகாவின் தனித்தன்மையே அவரது தேர்வுகள் தான். தற்போது எது டிரெண்ட் என்று பார்த்து அவர் அதைப் பின்பற்றுவதில்லை. மாறாக, தனக்கு எது பிடிக்கிறதோ, அதைதான் அணிவார். அது மற்றவர்களுக்கு டிரெண்டாகி விடுகிறது!

Also See...

First published: January 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading