பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தி ஆடைகளா ? ஃபேஷனில் புதிய முயற்சி..!

இதற்காக 40 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை பயபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தி ஆடைகளா ? ஃபேஷனில் புதிய முயற்சி..!
மறுசுழற்சி
  • News18
  • Last Updated: November 5, 2019, 5:38 PM IST
  • Share this:
மறுசுழற்சி தயாரிப்புகள் புதிய மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. அந்த வகையில் மறுசுழற்சி செய்து ஆடைகளை தயாரிக்கவும் டிசைனர்கள் மட்டுமன்றி பிரபல பிராண்டுகளும் முன் வருகின்றன.

அந்த வகையில் பிராடா, ஸ்டெல்லா மெக்கார்ட்னே ஆகிய பிராண்டுகள் 2021க்குள் மறுசுழற்சி செய்யப்பட்ட நைலானை மட்டும் பயன்படுத்தப்போவதாக அறிவித்தன. அதோடு ஹெச் & எம், ஸாரா ஆகியவை 2020 முதல் 2025 ஆண்டுக்குள் ஆடை உற்பத்திக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிஸ்டரைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது மார்னி அண்ட் பிரீன் பிராண்ட் SS20 கலெக்‌ஷனை பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து ஆடைகள் தயாரிக்கப்போவதாக அறிவித்தது. ஆனால் ரிநியூ( ReNew) என்ற பிராண்ட் தற்போது வெளியிட்டுள்ள ஆடைகளை பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரித்துள்ளது.

 


குறிப்பாக கடலை சுத்தம் செய்யும் வகையில் இந்த முயற்சியை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளது. இதை ஓஷன் பிளாஸ்டிக் என்று குறிப்பிடுகிறது. கடலை சூழந்துள்ள பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்தே இந்த ஆடைகள் தயாரிக்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அமைப்பான பார்லே கடலில் தேங்கியுள்ள பிளாஸ்டிகுகளை அகற்றுவதை செய்து வருகிறது. இவர்களோடு அடிடாஸ் நிறுவனமும் கைகோர்த்துள்ளது.

அலுவலகத்தில் பெஸ்டீ இருந்தா பிரச்னையே இல்லை..! ஏன் தெரியுமா?

அமெரிக்க ஃபுட்வேர் பிராண்ட் Rothy’s ஏற்கனவே, பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி ஷூக்கள் தயாரிப்பதில் பிரபலம். இந்த நிறுவனம் முற்றிலும் 100 சதவீதம் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துகிறது. இதற்காக 40 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பிராண்ட் மேகன் மார்கெல்லினுடைய விருப்பமான பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.இவை ஒரு புறம் மகிழ்ச்சி தரக் கூடிய விஷயமாக இருந்தாலும் சுற்றுலா ஆர்வலர்கள் அதிக பிளாஸ்டிக் மறுசுழற்சியால் கார்பன் வெளியீடு அதிகரிப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்த பிளாஸ்டிக் மறுசுழற்சியால் பிளாஸ்டிக் பயன்பாடு முடிவுக்கு வரும். அது ஏற்படுத்தும் ஆபத்து இன்னும் அதிகமானது என்கின்றனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்