கைதிகளால் வடிவமைக்கப்படும் ஆடைகள் : பிரபல ஃபேஷன் டிசைனரின் புது முயற்சி!

திறமைக்கான அங்கீகாரமே இந்த முயற்சி..!

Web Desk | news18
Updated: August 6, 2019, 4:47 PM IST
கைதிகளால் வடிவமைக்கப்படும் ஆடைகள் : பிரபல ஃபேஷன் டிசைனரின் புது முயற்சி!
சிறைக் கைதியால் எடுக்கப்பட்ட புகைப்படம்
Web Desk | news18
Updated: August 6, 2019, 4:47 PM IST
ஃபேஷன் துறையில் எவ்வளவு கற்பனை வளத்தைக் கொண்டிருந்தாலும் தீராது. அதை தினம் தினம் ஃபேஷன் டிசைனர்களும் மறக்காமல் இல்லை. எதையாவது புதுமைப்படுத்துவதும், அதை டிரெண்டாக்குவதும்தான் அவர்களின் அயராத சிந்தனையாக இருக்கும்.

அந்த வகையில் கொல்கத்தாவைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் அபிஷேக் துத்தா ’ பரோல் ‘ என்கிற பெயரில் புதிய பிராண்டை வெளியிட்டுள்ளார். கடந்த ஜூலை 30 ஆம் தேதி சந்தைக்கு வந்த இந்த பிராண்ட் வெளியான சில நொடிகளிலேயே அனைவராலும் பேசப்பட்டது, கவரப்பட்டது.

அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா..?

அதாவது இந்த ’பரோல்’ பிராண்ட் ஆடைகள் ஒவ்வொன்றும் திஹார்  மத்திய சிறையில் உள்ள கைதிகளால் வடிவமைக்கப்பட்டது என்பதுதான் இந்த ஆடைகளின் சிறப்பு.

“ இந்த ஆஃபர் எனக்குத் தானாக வந்தது. மேற்கு வங்க சிறைச்சாலையில் உள்ள டி.ஜி மற்றும் ஐ.ஜி அருண் குப்தா சிறைக் கைதிகளுக்கு ஆடைகள் நெய்யக் கற்றுக் கொடுங்கள் என்றுக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்படி  விருப்பமுள்ள 40 சிறைக் கைதிகளுக்கு கற்றுக்கொடுத்தேன். அதில் ஆண், பெண் இரு பாலரும் அடக்கம். இந்த திட்டம் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்தப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் அதீத அக்கறையுடனும் தன்  கற்பனையையும் பயிற்சியின்போது வெளிப்படுத்தினர். இதை மக்களுக்கும் கொண்டுபோய் சேர்க்க , அவர்களின் திறமை உலகறியவே இந்த பரோல் கலெக்‌ஷனை உருவாக்கினேன். அனைவரும் மிக அழகாக செயல்பட்டார்கள்” என அபிஷேக் வோக் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.இந்த பிராண்ட் வெளியிடும் அடுத்தடுத்த கலெக்‌ஷன்களும் சிறைக்கைதிகளின் வேலைபாடுகளுடனே வெளியாகும். ஆக.. இந்த பிராண்ட் சிறைக்கைதிகளால் தயாரிக்கப்படும் பிராண்டாகும்.

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் சில ஆடைகளுக்கு சிறைக்கைதிகளும் மாடல்களை வைத்து சிறைக்குள்ளேயே  புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துத் தருகின்றனர்.

மேலும் அவர் ”நிச்சயம் அவர்கள் வெளியே வந்ததும் இந்த கைத்தொழில் வாழ்க்கையில் முன்னேற உதவும். அதற்கு நான் விதையாக இருப்பது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Label Parole (@labelparole) on


இந்த பரோல் கலெக்‌ஷன் ஃபேப்ரிக்குகள் ஒவ்வொன்றும் கைத்தறியால் நெய்யப்பட்டது. உடலுக்கு சவுகரியம் தரும் பருத்தி மற்றும் லினென் ஃபேப்ரிக்கால் நெய்யப்பட்டுள்ளது. கம்பீரம், புதுமை கலந்து டென்னிம் தோற்றம் மற்றும் மினிமலிசப் பிரிண்டுகளால் இந்த ஆடைகள் ஒவ்வொன்றும் மிளிர்கிறது. இந்த ஆடைகளின் தீமும் அதுதான்.

ஆண்களுக்கான சட்டைகள், குர்த்தா, ஜாக்கெட், ஜம்சூட் என அனைத்தும் இந்த கலெக்‌ஷனில் கிடைக்கப்பெரும். பெண்களுக்கும் இதே வகைகள்தான். கூடிய விரைவில் ஆன்லைனிலும் கிடைக்கும் என அபிஷேக் குறிப்பிட்டுள்ளார்.
First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...