ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பார்க்கத்தான் சிம்பிள்! ராஷ்மிகா ஆடையின் தலைசுற்ற வைக்கும் விலை!

பார்க்கத்தான் சிம்பிள்! ராஷ்மிகா ஆடையின் தலைசுற்ற வைக்கும் விலை!

ராஷ்மிகா

ராஷ்மிகா

ராஷ்மிகா அவர் நடித்த குட்பை படத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அணிந்த ஆடை தற்போது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னிந்தியத் திரைப்படத்துறையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வரும் ராஷ்மிகா அவர் நடித்த குட்பாய் படத்தில் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அணிந்த ஆடை தற்போது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி என்ன தான் ராஷ்மிகா அணிந்த ஆடையிலிருந்தது? என்பது குறித்து இங்கு காண்போம்.

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த குட்பாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ராஷ்மிகா மந்தனா பல வண்ண லெதர் பஸ்டியர் டாப் மற்றும் ரெட் ஃபிளேர்டு பேண்ட்டுடன் வந்திருந்தார். பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் ஸ்டைலில் பிரமிக்க வைத்திருந்தார்.

இதில் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்களா? வேறொன்றும் இல்லை, லுக் மற்றும் விலை தான். ராஷ்மிகா அணிந்திருந்த கிளாஸி பஸ்டர் டாப்பின் விலை ரூ.27, 950 மற்றும் ரெட் ஃபிளேர்டு பேண்டின் விலை ரூ. 36,950 என மொத்தம் ரூ.64,900க்கு வாங்கியுள்ளார். பார்ப்பதற்கு சிம்பிளாக இருந்தாலும் இதன் விலை மற்றும் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த டாப் மற்றும் பேண்ட் Jaiscape ல் விற்பனைக்கு உள்ளது.

                                                                                                                                                                         சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருந்தாலும், இவரை டாப் ஹீரோயினாக்கியது தெலுங்கு படங்கள் தான்.

குறிப்பாகத் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான சுல்தான் படம் மூலம் என்ட்ரி கொடுத்த நாயகி, தற்போது தளபதி விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

Also Read : உண்மையாகவே இது காதல் தானா என்ற சந்தேகமா? இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!

தெலுங்கு, தமிழ், கன்னடம் எனப் பல மொழிகளில் நடித்திருந்தாலும் புஷ்பா படத்தின் மூலம் பட்டி தொங்கும் எங்கும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இதோடு விதவிதமான ஆடைகள் அணிவதை தன்னுடைய வாடிக்கையாகக் கொண்டுள்ள ராஷ்மிகா, சமீபத்தில் டெல்லியில் ஜூலை 22 ஆம் தேதி நடந்த இந்திய கவுச்சர் வீக் 2022 ல் பேஷன் டிசைன் வருண்பால் வடிவமைத்த சிவப்பு நிற லெஹாங்காவை அணிந்து பேஷன் வாக் செய்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Janvi
First published:

Tags: Actress Rashmika Mandanna, Dresses