சோனம் கபூர் பிறந்தநாளுக்கு அணிந்த ஆடையின் விலை என்ன தெரியுமா?

தெரிந்தால் மலைத்துப் போவீர்கள்...

சோனம் கபூர் பிறந்தநாளுக்கு அணிந்த ஆடையின் விலை என்ன தெரியுமா?
சோனம் கபூர்
  • News18
  • Last Updated: June 12, 2019, 4:45 PM IST
  • Share this:
பாலிவுட்டின் ஃபேஷனிஸ்டா எனவும், ஆடைகளின் குயின் எனவும் அழைக்கப்படும் சோனம் கபூர், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று தன் பிறந்தநாளை பாலிவுட் பட்டாளத்துடன் வெகு விமர்சையாகக் கொண்டாடினார். அப்போது அவரின் பிறந்தநாள் ஆடைகள் டிரெண்டாக வலம் வந்து கொண்டிருந்தன. அதைப் பார்த்த பல பெண்களும், இதுபோன்ற உடை வாங்க வேண்டும் என்ற ஆசையும் கொண்டிருப்பார்கள். அப்படி வாங்க முடிவு செய்தால் அதன் விலையை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சோனம் அன்று வெள்ளை நிற சட்டை மற்றும் ஜொலிக்கும் சில்வர் நிற ஸ்கர்ட் அணிந்திருந்தார். அதற்கு ஏற்ப சோக்கர் நெக்லஸ் அணிந்திருந்தார். அதோடு பிரகாசமாக மேக்அப் மற்றும் பளீர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் என எப்போதும் போல் ஸ்டைல் ஐக்கானாகவே சோனம் இருந்தார்.


அந்த உடை அப்படி என்ன விலை இருந்துவிடப் போகிறது என்று யோசிக்கிறீர்களா... சற்று பொறுங்கள்!
அவருடைய மொத்த ஆடையின் விலை மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாய்.

அவர் அணிந்திருந்த நாட் போடப்பட்ட சட்டை 33,751 ரூபாய். மெட்டாலிக் ப்ளீட்டட் ஸ்கர்ட் 1,18,959 ரூபாயாகும். படிக்கும்போதே மூச்சு வாங்குகிறதா..? இந்த பிறந்தநாள் ஆடையை சோனமே பார்த்துப் பார்த்து வாங்கியிருக்கிறார்.

சோனம் பிறந்தநாள் பார்ட்டியில் அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா, கரன் ஜோஹர், ஜான்வி கபூர் மற்றும் கரிஷ்மா கபூர் என பல முன்னணி பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றார்கள். தற்போது சோனம், ஸோயா ஃபாக்டர் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார்.
First published: June 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading