இளமை துள்ளலான பேட்ட ரஜினியின் காஸ்டியூம் டிசைனர் யார் தெரியுமா?

காஸ்டியூம்  விஷயத்தில் ரஜினி ஒரு விஷயத்தை மட்டும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.

News18 Tamil
Updated: January 12, 2019, 3:20 PM IST
இளமை துள்ளலான பேட்ட ரஜினியின் காஸ்டியூம் டிசைனர் யார் தெரியுமா?
காஸ்டியூம்  விஷயத்தில் ரஜினி ஒரு விஷயத்தை மட்டும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை.
News18 Tamil
Updated: January 12, 2019, 3:20 PM IST
பொங்கல் கொண்டாட்டத்தை  3 நாட்களுக்கு முன்னரே ஏற்படுத்திவிட்ட  உற்சாகத்தை அளித்துவிட்டது பேட்ட திரைப்படம். அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் பேட்ட படத்திற்கான கிரேஸ் குவிந்து வருகிறது.

படத்தில் ரஜினியின் மாஸ் ஆக்‌ஷன்கள் ஒரு பக்கம் அதிரடியாக இருந்தாலும், அவரின் காஸ்டியூம்கள் 90களில் இருந்த ரஜினியை மீண்டும் கண்முன் நிறுத்திவிட்டது. அதற்கு முற்றிலும் காரணம் காஸ்டியூம் டிசைனர் நிஹாரிகா பாசின் கான். படத்தில் ரஜினியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் அசர வைத்துவிட்டார். லொக்கேஷனிற்கு ஏற்ற கலர் காம்பினேஷன்கள், சூழ்நிலைக்கு ஏற்ற ஆடைத் தேர்வுகள் என ரஜினியை எங்கு பார்த்தாலும் கண் சிமிட்ட முடியவில்லை.

யார் இந்த நிஹாரிகா  பாசின் கான்?

காஸ்டியூம் டிசைனர் நிஹாரிகா பாசின் கான்


ஜார்கண்ட்  மாநிலத்தைச் சேர்ந்த நிஹாரிகா பாலிவுட்டில் மிகவும் பிரபலமான காஸ்டியூம் டிசைனர். ஃபேன், லஞ்ச் பாக்ஸ் என பல படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராக இருந்திருக்கிறார். ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்திற்காக தேசிய விருதைப் பெற்றவர். இதுதவிர பல பிரபலங்களுக்கு அவ்வப்போது பெர்சனலாகவும் ஸ்டைலிங் செய்து கொண்டிருக்கிறார்.இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் நிஹாரிகா இதுவரை ரஜினியின் படங்களைப் பார்த்ததே இல்லையாம்.  ரஜினியே அவரின் இரண்டு படங்களைக் காட்டினாராம். பின் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அவரை ஈர்த்த  சில புகைப்படங்களை காட்டினாராம். இவற்றை வைத்துதான் நிஹாரிகா ரஜினிக்கான காஸ்டியூம்களை வடிவமைத்திருக்கிறார் .

காஸ்டியூம்  விஷயத்தில் ரஜினி ஒரு விஷயத்தை மட்டும் சமரசம் செய்து கொள்ளவே இல்லையாம். அது அவருடைய  சவுகரியம்தான். ஆடையின் ஸ்டைல், டிசைன் குறித்து எந்தவிதக் கவலையும் கிடையாது. ஆனால் அவை சவுகரியமாக இருக்க வேண்டும் என தன் எதிர்பார்ப்பைக் கூறியிருக்கிறார். அதனால் அவருக்காகவே மென்மையான ஃபேப்ரிக்குகளை தேர்வு செய்து ஆடைகளை வடிவமைத்திருக்கிறார். ரஜினிக்கு ஏற்ப சவுகரியமாகவும் அதேசமயம் ஸ்டைலாகவும் வடிவமைத்து மக்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றிருக்கிறார் நிஹாரிகா.படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் ரஜினிக்கு காஸ்டியூம் ஸ்டைலிங் செய்த பின் அவரை கண்ணாடி முன் நிறுத்தியிருக்கிறார். அப்போது அவரின் முகத்தில் சொல்லமுடியாத ஒரு உற்சாகச் சிரிப்பைப் பார்த்திருக்கிறார். பின் நிஹாரிகாவைப் பார்த்து “சூப்பர் நிஹாரிகா சூப்பர்” எனக் கூறியிருக்கிறார். அப்போது நான் வானத்தில் பறந்ததைப் போன்று உணர்ந்தேன் என நிஹாரிகா  பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் அந்தப் பேட்டியில் “அவர் அதைச் சொல்லிவிட்டுத் திரும்பிய அடுத்த நொடியே 90 வயத்திற்கு சென்று விட்டதைப் போன்ற உற்சாகத்தில் நடந்தார். அவரின் நடை, பேச்சு எல்லாமே இளமை துள்ளலாக இருந்தது. அதற்கு முன் அவரை அப்படி நான் பார்த்ததே இல்லை’ என்றார் நிஹாரிகா.அதேபோல் ரஜினியை 1990களுக்கு ஏற்ற ஆடை , முதுமைத் தோற்றத்திற்கு ஏற்ற ஆடை என இரு வித ஆடைகள் வடிவமைக்க வேண்டியிருந்தது. 90களுக்கான காஸ்டியூம்கள் வெயில்காலத்திற்கு ஏற்ப சம்மர் ஆடைகள் , முதுமையில் குளிர்காலத்திற்கு ஏற்ப வின்டர் ஆடைகள் என இரு வேறாக வடிவமைத்திருக்கிறார்.

Petta Movie | Rajinikanth

அவரின் வின்டர் ஆடைகள் இந்தியாவில் அத்தனை மன நிறைவாக இல்லை என்பதால் பாங்காக்கில் வாங்கியிருக்கிறார். வின்டர் ஆடைகள் எல்லாமே அடர் நிறங்களை கொண்டிருக்கும். 90-களின் பிளாஷ் பேக் கதைக்கு வெளிர் நிறங்களை தேர்வு செய்திருக்கிறார். மற்ற ஆடைகளை டெல்லியிலேயே வாங்கியிருக்கிறார். அதேபோல் நிஹாரிகாவின் ஆடைத் தேர்வுகள் அனைத்துமே ரஜினிக்கும் மிகவும் பிடித்ததாகவே இருந்திருக்கின்றன.

Rajinikanth

ரஜினியுடன் வேலை செய்த அனுபவம் குறித்து கேட்டபோது “ நான் பல பிரபலங்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இவரைப்போன்ற ஒரு நடிகரைப் பார்த்ததே இல்லை. அத்தனை புரொஃபஷனலாக நடந்து கொண்டார். செட்டில் அனைத்து டெக்னீஷியன்களையும் மதிப்பார். அவருடன் வேலை செய்தது எந்தவித வேலை நெருக்கடிகளுமின்றி மிகவும் சவுகரியமாக இருந்தது எனக் கூறிய நிஹாரிகா மேலும் சில அனுபவங்களைப் பகிந்தார்.அதில் “மறுநாள் ஷூட்டிற்கான காஸ்டியூமை முதல் நாளே டிரையல் பார்க்க காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஷூட்டிங் 3 மணி நேரம் கூடுதலாக நடந்தது. அதனால் எவ்வாறு கேட்பது என தயக்கத்துடனே இருந்தேன். பின் அவரே என்னிடம் வந்து கேட்டார். விஷயத்தை சொன்னதும் உடனே எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஆடையைக் காட்டுங்கள் என்றார். அதே உற்சாகத்தோடு ஆடையை அணிந்து வந்து ‘எப்படி இருக்கிறது நிஹாரிகா’ என சிரித்துக் கொண்டே கேட்டார். உண்மையிலேயே நான் பிரம்மித்துவிட்டேன். அவருடன் நான் வேலைச் செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்” எனக் கூறினார்.

Petta: Rajinikanth

அவர் அந்த ஆடையை அணிந்ததால் மட்டும் அந்த ஆடைக்கு அழகு இல்லை. அதற்கு ஏற்ப தன்னை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடித்ததால்தான் ஹிட் அடித்திருக்கிறது என ரஜினியை புகழ்கிறார் நிஹாரிகா.

ரஜினிக்காக பெர்சனலாக எந்த ஸ்டைல்  செய்ய நினைத்தால் செய்வீர்கள் என்ற கேள்விக்கு அவரை இன்னும் ஸ்டைலிஷாக காட்டுவேன் எனக் கூறுகிறார். இருப்பினும் அவர் இப்படி சிம்பிளாக இருப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.  அதுதான்  அவரின் அடையாளம். அந்த அடையாளம்தான் அவருக்குப் பெருமை. எனவே அதைத் தவிர அவருக்கு எத்தனை பெரிய ஸ்டைலிங் செய்தாலும் அது சிறப்பாக இருக்காது என்றார் நிஹாரிகா.
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...