ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்றீங்களா..? உங்களுக்கான லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ்..!

இந்த தீபாவளிக்கு குர்தா வாங்க பிளான் பண்றீங்களா..? உங்களுக்கான லேட்டஸ்ட் குர்தா கலெக்‌ஷன்ஸ்..!

தீபாவளி என்றாலே புத்தாடைகளும், பட்டாசும்தான் பிரதானம். அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு என்ன புத்தாடை வாங்கலாம் , எப்படி அணியலாம் என்கிற திட்டங்களை இப்போதிலிருந்தே தொடங்கியிருப்பீர்கள். உங்களுக்காகவே சந்தையில் புதிதாக வந்துள்ள புதிய குர்தா வகைகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டுள்ளோம்.

தீபாவளி என்றாலே புத்தாடைகளும், பட்டாசும்தான் பிரதானம். அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு என்ன புத்தாடை வாங்கலாம் , எப்படி அணியலாம் என்கிற திட்டங்களை இப்போதிலிருந்தே தொடங்கியிருப்பீர்கள். உங்களுக்காகவே சந்தையில் புதிதாக வந்துள்ள புதிய குர்தா வகைகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டுள்ளோம்.

இந்த தீபாவளிக்கு என்ன புத்தாடை வாங்கலாம் , எப்படி அணியலாம் என்கிற திட்டங்களை இப்போதிலிருந்தே தொடங்கியிருப்பீர்கள். உங்களுக்காகவே சந்தையில் புதிதாக வந்துள்ள புதிய குர்தா வகைகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டுள்ளோம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தீபாவளி என்றாலே புத்தாடைகளும், பட்டாசும்தான் பிரதானம். அதன் பிறகுதான் மற்ற விஷயங்கள். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு என்ன புத்தாடை வாங்கலாம் , எப்படி அணியலாம் என்கிற திட்டங்களை இப்போதிலிருந்தே தொடங்கியிருப்பீர்கள். உங்களுக்காகவே சந்தையில் புதிதாக வந்துள்ள புதிய குர்தா வகைகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டுள்ளோம்.

கவுல் டிரேப் குர்தா : இந்த குர்தா இண்டோ வெஸ்டர்ன் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதாவது குர்தாவின் ஒரு பக்கம் மட்டும் ப்ளீட்ஸ் வைத்து டிசைன் செய்யப்பட்டிருக்கும். இதுதான் அந்த ஆடையின் தனித்துவம். இது எத்னிக் ஸ்டைலில் புதிய பரிணாமத்தில் அணிவதற்கு ஏற்ற ஸ்டைல். எத்னிக் ஸ்டைலில் ஸ்டேமெண்டை உருவாக்க விரும்புகிறீர்கள் எனில் இது உங்களுக்கு பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். அதேபோல் ஆடையின் ஃபேப்ரிக்கும் உங்களுக்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். ஃபுல் ஸ்லீவுடன் வரும் இந்த குர்தா மந்தாரின் காலருடன் வருவது புது டச் எனலாம்.

ஷார்ட் குர்தா : ஷர்ட் விரும்பிகளுக்கு இந்த ஸ்டைல் குர்தா எடுப்பாக இருக்கும். சௌகரிமானதும் கூட... இந்த குர்தாவில் இடைப்பகுதியில் சிறிய ஸ்லிட் வைத்து தைக்கப்பட்டிருக்கும். அதோடு சிறு சிறு பூக்களுடன் கண்டெம்புரரி ஸ்டைலிலும் வருகிறது. பார்ப்பதற்கே ஈர்ப்புடையதாக இருக்கும். சிம்பிளாகவும் அதேசமையல் எளிகண்ட் லுக் வேண்டுமெனில் இந்த ஸ்டைலை ட்ரை பண்ணலாம். இது காட்டன், லினன், காதி போன்ற ஃபேப்ரிக்குகளில் கிடைக்கின்றன. அதோடு ஃபுல் ஆஃப் என இரு வகைகளிலும் ஸ்லீவ் கிடைக்கிறது. இதற்கு எத்னிக் ஸ்டைலில் கொஞ்சம் வெஸ்டர்ன் டச் கொடுக்கும் வகையில் பாட்டம், ஜீன்ஸ் அணிந்து கோலாபூரி செப்பல் அணிந்தால் பக்காவாக இருக்கும்.

அசமெட்ரிக் ட்ரேப் குர்தா : எத்னிக் குர்தா உடையில் ஒரு கண்டெம்புரரி டச் கொடுத்தால் எப்படி இருக்குமோ அதுதான் இந்த குர்தா டிசைன். அதாவது ஸ்ரெய்ட் கட் இல்லாமல் அசமெட்ரிக்காக இருக்கும். அதோடு ஏதாவதொரு பக்கம் ட்ரேப் செய்யப்பட்டு இருக்கும். இதிலும் ஷார்ட் , லாங் என இரு வகைகளில் கிடைக்கிறது. இதுவும் உங்கள் தீபாவளியை குதூகலமாக்க சிறந்த தேர்வாக இருக்கும். இதற்கு கேதரிங் பேண்ட், சிகரெட் பேண்ட் மற்றும் லெதர் காலணி அணிந்தால் எடுப்பாக இருக்கும்.

அங்ரகா குர்தா : எத்னிக் உடைக்கு பெயர்போன குர்தா இது. அதன் வடிவமைப்பு , டிசைன் அதன் ராயல் தன்மை மாறாமல் நமக்கு அழகு சேர்க்கும். இடுப்புக்கு கீழ் குடை போல் விரிந்திருக்கும் அழகுதான் இந்த ஆடைக்கான தனித்துவம். அதுமட்டுமன்றி இடது பக்கம் அதிக வேலைபாடுகளுடன் கொண்ட கயிறு, முடி போடும் வகையில் இருக்கும். இதுதான் இந்த உடையின் ஸ்பெஷல் எனலாம். இதில் எளிமையான டிசைன் தொடங்கி ஸ்டோன் , மிரர் வேளைபாடுகளுடன் பிரமாண்ட வடிவமைப்புகளிலும் கிடைக்கின்றன. உங்கள் தீபாவளி கொண்டாத்திற்கு மேலும் மகிழ்ச்சி சேர்க்க இந்த குர்தா சரியான தேர்வு. இதற்கு அணிகலன்கள் அதிகம் அணியாமல் பெரிய காதணி மற்றும் ஜூட் காலணி அணிந்தால் சூப்பராக இருக்கும்.

ஜமீந்தார் ஸ்டைல் குர்தா : இது பாரம்பரியமான ஸ்டைல் குர்தா. திருமணம், பண்டிகைக்காலம் என்றாலே இந்த ஸ்டைல் குர்தாதான் பலராலும் விரும்பப்படும். எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த குர்தா அதன் இடத்தை தக்க வைத்துள்ளது எனலாம். அப்படி நீங்களும் பக்காவான டிரெடிஷ்னல் ஸ்டைலை விரும்புகிறீர்கள் எனில் இது சரியான சாய்ஸ்.

பூண்டி குர்தா : ராயல் ரிச் லுக் வேண்டுமெனில் இந்த ஸ்டைல் குர்தா எடுப்பாக இருக்கும். பிளெய்ன் குர்தாவுக்கு மேல் பூக்களின் பிரிண்ட் வேளைபாடுகளுடன் ஜாக்கெட் அணிவதுதான் இந்த குர்தாவின் சிறப்பு. இது பண்டிகை அக்கேஷன்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். எளிமையாக அதேசமயம் ரிச் லுக் கொடுக்கும். இந்த தீபாவளியை இந்த பூண்டி குர்தாவுடன் அசத்துங்கள்.

கிளாசிக் லாங் குர்தா : கணுக்கால் நீளத்திற்கு வரும் இந்த குர்தா உங்களின் ரிச் லுக் தோற்றத்திற்கு பக்காவான பொருத்தமாக இருக்கும். இது ஸ்டோன், ஜம்கி மற்றும் மிரர் வேளைபாடுகளுடன் டிசைன் செய்யப்படுகிறது. பாஷ் தோற்றம் வேண்டுமெனில் யோசிக்காமல் இந்த ஸ்டைல் குர்தாவை தேர்வு செய்யுங்கள். இதற்கு ஸ்டோன் நிறைந்த அணிகலன்கள் அணிந்து உயரமான வெஜ்சஸ் அணிந்தால் சூப்பராக இருக்கும். பின் அனைவரின் கண்களும் உங்களைதான் மொய்க்கும்.

அனார்கலி : அனார்கலியும் பாரம்பரிய ஃபெஸ்டிவ் உடைகளில் தவிர்க்க முடியாதது. இதற்கு பலாஸூ, லெக்கின்ஸ் என எதையும் மேட்ச் செய்து அணியலாம். டிரெடிஷனல் டச்சுக்கு ஏற்ற உடை. தீபாவளிக்கு தனித்துவமான ஸ்டேட்மெண்ட் லுக்கை முயற்சி செய்ய விரும்புகிறீர்கள் எனில் இந்த அனார்கலி உடையை தேர்வு செய்யலாம். இதற்கு ஜூடீஸ் அல்லது ஹீல்ஸ் அணிவது மேட்சாக இருக்கும்.

First published:

Tags: Deepavali, Diwali, Diwali purchase, Fashion Tips, Kurta