ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

டீனேஜ் வயது பெண்கள் தீபாவளிக்கு எப்படி ரெடி ஆகலாம்..? சில டிப்ஸ் உங்களுக்காக...

டீனேஜ் வயது பெண்கள் தீபாவளிக்கு எப்படி ரெடி ஆகலாம்..? சில டிப்ஸ் உங்களுக்காக...

ஃபேஷன் டிப்ஸ்

ஃபேஷன் டிப்ஸ்

Diwali Fashion Tips : இந்த மாதிரியான லாங் ட்ரெஸை உடனே போட்டு கொண்டு வெளியே கிளம்பிவிடலாம். இதுவே புடவை கட்டுவது என்றால் அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தீபாவளி என்றாலே ஞாபகம் வருவது பலாகாரம் மற்றும் கலர்ஃபுல் ஆடை. புத்தாடை அணிந்து அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு பலாகரம் கொடுத்து மகிழ்வோம். ஆனால் தீபாவளி வந்துவிட்டாலே என்ன ட்ரெஸ் வாங்குவது என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு எப்ப தான் தீர்வு கிடைக்குமோ என்று பெருமூச்சு விட்டு, ஏற்கனவே வைத்திருக்கும் அதே டிசைனில் ட்ரெஸை வாங்கிவிடுவார்கள்.

  அப்படிப்பட்ட உங்களின் குழப்பத்தை போக்கத்தான் இந்த பதிவு. முதலில் போன தீபாவளிக்கு என்ன ட்ரெஸ் எடுத்தீர்களோ, அதே போல் இந்த தீபாவளிக்கு எடுக்காதீர்கள். போன தீபாவளிக்கு புடவை எடுத்திருந்தால் இந்த முறை சல்வார் போன்றவற்றை ட்ரை பண்ணுங்க.

  வயதானவர்கள் பெரும்பாலும் புடவை கட்டவே விரும்புவார்கள். அதுதான் அவர்களுக்கு சவுகர்யமாகவும் இருக்கும். ஆனால் காலேஜ் செல்லும் டீனேஜ் வயது பெண்கள் எந்த மாதிரியான ட்ரெஸ் தீபாவளிக்கு எடுக்கலாம் ?  தீபாவளிக்கு எடுக்கும் உடையை காலெஜிற்கு அணிந்து செல்வார்கள். அப்போது புடவைக்கட்டிக்கொண்டோ, லெஹங்கா, ஜோலி ஆகியவை உடுத்திக்கொண்டோ  வாகனங்களில் பயணம் செல்ல முடியாது. எனவே அவர்களுக்கான சிறந்த தேர்வு தான் லாங் மேக்ஸி ட்ரெஸ்.

  தீபாவளிக்கு லாங் மேக்ஸி ட்ரஸை அவர்கள் தாராளமாக எடுக்கலாம். இது போன்று லாங் ட்ரெஸை உடனே போட்டு கொண்டு வெளியே கிளம்பிவிடலாம். இதுவே புடவை கட்டுவது என்றால் அவர்களுக்கு அதிக நேரம் தேவைப்படும். இந்த ட்ரெஸின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் இந்த ட்ரெஸ் ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது.

  இந்த உடைக்கு என்ன மாதிரியான அணிகலன்கள் அணியலாம்?

  லாங் மேக்ஸி ட்ரெஸ் பார்க்க ட்ரெடிஷ்னலான லுக்கில் இருப்பதால் நீங்கள் இதற்கு கழுத்தை ஒட்டி ஜோக்கர் மற்றும் காதில் ஜிமிக்கி அணியலாம்.  உங்களுக்கு வளையல் போடுவது பிடிக்கும் என்றால் கடா பேங்கிள் கூட போட்டுக்கொள்ளலாம். எந்த அணிகலன்களை தேர்வு செய்தாலும் உடையின் நிறத்திற்கு பொருந்துமாறு தேர்வு செய்யுங்கள்.

  மேக்கப் எப்படி பண்ணலாம் ?

  நீங்கள் எந்த ஒரு உடை அணிந்திருந்தாலும் மேக்கப் என்பது மிகவும் அவசியமானது. உங்களை ஒருவர் பார்த்தவுடன் முதலில் பார்ப்பது உங்கள் முகத்தை தான். அதனால் மேக்கப்பை சரியாக தேர்வு செய்யுங்கள். நீங்கள் ஏற்கனவே மேக்கப் பொருட்கள் உபயோகப்படுத்துபவர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை.  புதிதாக மேக்கப் பொருட்கள் வாங்குபவர்கள் கட்டாயம் ஃபவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர், லிப் ஸ்டிக், ஐ லைனர் வாங்கிக்கொள்ளுங்கள்.

  மேக்கப்பை பொறுத்தவரை அளவாக போட முயற்சியுங்கள். கண்களில் மை மற்றும் ஐ லைனர் போட்டு எடுத்துக்காட்டுங்கள். நியூட் கலர் லிப் ஸ்டிக் ஷேடை ட்ரை பண்ணுங்க..

  என்ன ஹேர் ஸ்டைல் பண்ணலாம் ?

  பெண்களுக்கு ஹேர் ஸ்டைல் செய்வது என்பது தான் கடினமான ஒன்று. முடிந்த அளவு தலைகுளித்து விட்டு straightening செய்து ஃப்ரீ ஹேர் விட முயற்சி செய்யுங்கள். ஃப்ரீ ஹேர் விட பிடிக்காதவர்கள் ஃபிரெஞ்சு பிளேட் போன்றவற்றை ட்ரை பண்ணுங்க.

  இந்த வீடியோவில் சில ஹேர் ஸ்டைல்கள் செய்து காட்டப்படுகிறது. உங்களுக்கு இதில் ஏதாவது ஹேர் ஸ்டைல் பிடித்திருந்தால் அது போல் ட்ரை பண்ணுங்க.. நீங்கள் தேர்வு செய்த ஹேர் ஸ்டைலை தீபாவளி அன்று ட்ரை பண்ணாமல், முன் கூட்டியே இரண்டு அல்லது மூன்று முறை ட்ரை பண்ணி பாருங்க.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Deepavali, Diwali, Fashion, Fashion Tips