ஒரே ஒரு லெஹெங்கா 4,68000 ரூபாயா? அசரவைக்கும் லுக்கில் நடிகை தியா மிர்சா..

ஒரே ஒரு லெஹெங்கா 4,68000 ரூபாயா? அசரவைக்கும் லுக்கில் நடிகை தியா மிர்சா..

தியா மிர்ஸா

சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட வித்தியாசமான புகைப்படங்களால் இணையத்தில் மிகவும் பிரபலமானார்

  • Share this:
பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா தனது புதிய போட்டோஷூட்டில் ஒரு பத்திரிகை அட்டைப்படத்திற்கு கொடுத்துள்ள போஸ்கள் தற்போது ஃபேஷன் உலகில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதற்கு காரணம் அவர் புதிய போட்டோஷூட்டில் மிகவும் விலை மதிப்புள்ள லெஹெங்காவை அணிந்துள்ளதே.

கடந்த 2019-ல் தியா மிர்சா தனது முன்னாள் கணவர் சாஹில் சங்காவுடனான மணவாழ்க்கையை முறித்து கொள்வதாக அறிவித்தார். பின்னர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான வைபவ் என்பவரை கடந்த மாதம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்தி திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் தியா மிர்சா, ஒரு கட்டத்தில் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட வித்தியாசமான புகைப்படங்களால் இணையத்தில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில் லெஹங்காக்கள், புடவைகள் அல்லது வேறு எளிய உடைகள் என எதை அணிந்தாலும், தியா மிர்சா தனது பாரம்பரிய தோற்றத்தால் ரசிகர்களை ஈர்க்கத் தவறியதில்லை. சமீபத்தில் நடந்த அவரது திருமணத்தின் போதும் சிவப்பு உடையில் நேர்த்தியுடன் தோற்றமளித்தார்.

அழகான குட்டி ரிசார்ட்டைப்போல் காட்சியளிக்கும் சமந்தாவின் வீடு..

சமீபத்தில், Aza Fashions பத்திரிகை இதழுக்கான கவர் ஸ்டாராக மாறினார். சில அழகான வண்ண லெஹங்காக்கள் மற்றும் ஒரு ரீகல் சேலை ஆகியவற்றில் போஸ் கொடுத்திருந்த புதிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் தியா மிர்சா.

புதிய புகைப்படங்களில் அனைவரையும் பிரமிக்க வைக்கும்படி இருக்கிறார் தியா. ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஸ்ரா வடிவமைத்துள்ள மிக அழகான லெஹங்காவை அவர் அணிந்து போஸ் கொடுத்திருக்கும் ஃபோட்டோ தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தியா மிர்சா தனது புதிய லெஹங்காவில் கொடுத்துள்ள போஸ்கள் முற்றிலும் அவரை வேறு கோணத்தில் மிக அழகாக காட்டியுள்ளது. 
View this post on Instagram

 

A post shared by Dia Mirza (@diamirzaofficial)


கனமான கை எம்பிராய்டரியுடன் வரும் இந்த கனவு லெஹங்காவின் விலை என்ன தெரியுமா.? ரூ .4,68,500. ஆம் நடிகை தியா மிர்சா அணிந்துள்ள அந்த ஒரு லெஹங்காவின் விலை தான் இது. ஃபோட்டோவில் தியா போட்டிருக்கும் விலையுயர்ந்த மலர் லெஹெங்கா, வடிவமைப்பாளரின் இணையதளத்தில் மேற்கண்ட அதே விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப கஸ்டமைஸ்டு பிளவுஸ்களும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்ஸ்டாவில் தியா பகிர்ந்துள்ள படத்தில் லெஹெங்கா ஒரு வண்ணமயமான ரவிக்கையுடன் ஜோடியாக உள்ள அதே நேரத்தில் தியா தனது லெஹெங்காவை ஒரு ஆஃப் - வொயிட் எம்பிராய்டரி ரவிக்கைகளுடன் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய போட்டோஷூட்டில் மல்டிகலர் பேட்டர்ன்ட் லெஹெங்காவையும் அணிந்துள்ளார். மேலும் தனது போட்டோஷூட்டிற்காக நவீன ஆடை வடிவமைப்பாளரான அனாமிகா கன்னா வடிவமைத்த அற்புதமான லெஹெங்கா ஒன்றிலும் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published: