Home /News /lifestyle /

மிஸ் தமிழ்நாடு 2020 பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த தீப்தி..!

மிஸ் தமிழ்நாடு 2020 பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த தீப்தி..!

தீப்தி

தீப்தி

Miss TamilNadu | "16 அழகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் தீப்தி பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்"

  • News18
  • Last Updated :
மிஸ் தமிழ்நாடு 2020 அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த தீப்தி இறுதிப்போட்டியில் பட்டம் வென்றார்.

ராஸ் மடாஸ் நடத்தும் 13ம் ஆண்டு நிகழ்வான இந்த மிஸ் தமிழ்நாடு 2020 போட்டிக்கென ஏறத்தாழ 100 மாடலிங் ஆர்வலர்களில், பல்வேறு ஆடிஷன்கள் மூலம் இறுதிச்சுற்றுக்கு மொத்தம் 16 அழகிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த், சனம் ஷெட்டி, உபாசனா ஆர்.சி, ஹரினி, சைதன்யா ராவ், ஜெயஸ்ரீ ஈஸ்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியின் 3 சுற்றுகளின் அடிப்படையில் தீப்தி ’மிஸ் தமிழ்நாடு 2020’ ஆக முடிசூட்டப்பட்டார். காம்னா, லாவன்யா ஆகியோர் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனர். மேலும், இந்த போட்டியில் முதல் ஆறு இடங்களைப் பெற்ற அழகிகள் ஜனவரி 21-ம் தேதி கேரளாவில் நடைபெறவுள்ள மிஸ் சௌத் இந்தியா 2020 அழகிப்போட்டியில் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இதுகுறித்து பேசிய ராஸ் மடாஸ் நிறுவனர் ஜோ மைக்கேல், ”இந்த அழகிப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் சென்னை, திருப்பூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாடல் அழகிகளும், சென்னையில் தங்கியிருக்கும் சில வட இந்திய அழகிகளும் கலந்து கொண்டனர். அழகை மட்டுமே பார்க்காமல், நேர்த்தியான மற்றும் திறமையான அழகிக்கே மகுடம் சூட்டப்பட்டது.

இது போன்ற போட்டிகள் மாடல்களின் தரத்தை அதிகரிக்கின்றன. முந்தைய போட்டிகளின் இறுதிப் போட்டியாளர்களைப் போல இவர்களும் எதிர்காலத்தில் நல்ல நிலைக்குச் செல்வார்கள்” என்று கூறினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை யாஷிகா ஆனந்த், ”மிஸ் தமிழ்நாடு 2020 அழகிப்போட்டியின் நடுவர்களில் தானும் ஒருவராக இருப்பதை மிகுந்த கௌரவமாகக் கருதுகிறேன் என்று கூறினார்.
Published by:Sivaranjani E
First published:

அடுத்த செய்தி