புதிய ஃபேஷன் ஸ்டோர் மூலம் தொண்டு நிறுவனத்துக்கு நிதி! ரசிகர்களிடம் ஆதரவு கேட்கும் தீபிகா படுகோன்
புதிய ஃபேஷன் ஸ்டோர் மூலம் தொண்டு நிறுவனத்துக்கு நிதி! ரசிகர்களிடம் ஆதரவு கேட்கும் தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்
”என்னுடைய ரசிகர்கள் இந்த சிறந்த முயற்சிக்கு என்னோடு கை கோர்த்து வாருங்கள் என்று அனைவருக்கும் அழைப்பும் விடுத்திருக்கிறார். முடிந்த அளவு அந்த ஆன்லைன் ஸ்டோரில் ஒரே ஒரு ஆடை வாங்கி அவர்களுக்கு உதவுங்கள் ” - தீபிகா
தீபிகா படுகோனின் ஆடைகள் மீது நிச்சயம் அனைத்து பெண்களுக்கும் கொஞ்சம் பொறாமை உண்டு. அதனால்தான் அவர் இன்றளவும் ஃபேஷன் ஐக்கானாக வலம் வருகிறார்.
இப்படி அவருடைய ஆடைகளைப் போல் தானும் அணிய வேண்டும் என்று ஆசை கொண்ட பெண்களுக்கு சிறப்பான செய்தியை தீபிகா அறிவித்திருக்கிறார்.
அதாவது தீபிகா அவருடைய இன்ஸ்டாகிராமில், அவரே நேரடியாக தேர்வு செய்த ஆடைகளை மட்டுமே விற்பனை செய்யும் வகையில் ஆன்லைன் ஃபேஷன் ஸ்டோர் திறந்துள்ளார். அந்த ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைச் செய்யப்பட உள்ள அனைத்து ஆடைகளும் தீபிகா படுகோனேவே தேர்வு செய்வார். அதுவும் அவை லிமிட்டட் மற்றும் செலக்டட் ஆடைகள் மட்டுமே கிடைக்கும்.
இந்த ஆன்லைன் ஸ்டோரைத் திறக்க மற்றொருக் காரணமும் உண்டு என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தீபிகா படுகோன் தன்னுடைய நடிப்புத் துறையின் ஆரம்ப காலகட்டத்தில் கடுமையான மன அழுத்தத்தை சந்தித்த போது அதிலிருந்து மீண்டு வந்து அவர் ஆரம்பித்ததுதான் The Live Love Laugh Foundation. அந்த தொண்டு நிறுவனம் மன அழுத்தத்தில் இருப்போரை மீட்டும், தனிமை , மனப் பதட்டம் என பல வகையான மன நோய் கொண்டவர்களை மீட்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம். அதை தீபிகாவும் சிறப்பாக செய்து வருகிறார்.
அதற்கு வருமானம் வரும் வகையில்தான் இந்த ஆன்லைன் ஃபேஷன் ஸ்டோரை தொடங்கியிருக்கிறார். அதில் வரும் வருமானத்தை அவருடைய தொண்டு நிறுவனத்திற்காக பயன்படுத்தப்போவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே ”என்னுடைய ரசிகர்கள் இந்த சிறந்த முயற்சிக்கு என்னோடு கை கோர்த்து வாருங்கள் என்று அனைவருக்கும் அழைப்பும் விடுத்திருக்கிறார். முடிந்த அளவு அந்த ஆன்லைன் ஸ்டோரில் ஒரே ஒரு ஆடை வாங்கி அவர்களுக்கு உதவுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் உலக மனநல நாள் கடைபிடிக்கப்பட்டது. அப்போது அவருடைய The Live Love Laugh Foundation - யை சிறப்பாக நடத்தி வருவதால் ஸ்டிக்மா விருது பெற்றதுடன் ரொக்கப் பரிசாக 35 லட்சம் ரூபாய் பெற்றார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.