சப்பக் புரமோஷனிற்கு எத்னிக் உடையில் கலக்கிய தீபிகா..!

மஞ்சள் நிறத்திற்கு காண்டாஸ்டாக சிவப்பு நிற பார்டர் புடவைக்கு கூடுதல் அழகு.

சப்பக் புரமோஷனிற்கு எத்னிக் உடையில் கலக்கிய தீபிகா..!
தீபிகா படுகோன்
  • News18
  • Last Updated: January 14, 2020, 3:45 PM IST
  • Share this:
தீபிகா படுகோன் நடித்து வெளியாகியுள்ள சப்பக் திரைப்படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகளுக்குக் கலந்து கொண்டு வருகிறார்.

இந்த புரமோஷன் வேலைகளுக்காக தீபிகா எத்னிக் மற்றும் கலர்ஃபுல்லான டிரெடிஷ்னல் ஆடைகளில்தான் வலம் வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் சென்ற புரமோஷனிற்கு அனாமிகா கண்ணாவின் கைவண்ணத்தால் ஆன மஞ்சள் நிற புடவையில் மிளிர்ந்திருக்கிறார். மஞ்சள் நிறத்திற்கு கான்ட்ரஸ்டாக சிவப்பு நிற பார்டர் புடவைக்கு கூடுதல் அழகு. புடவைக்கு எதிர் நிறத்தில் நீல நிறத்தில் பெரிய ஓப்பன் வைத்த பிளவுஸ் வெஸ்டர்ன் டச்சாக இருக்கிறது. இதுதான் சிம்பிலான புடவையையும் ரிச்சாகவும் , ஸ்டைலிஷாகவும் காட்டுகிறது.

 
View this post on Instagram
 

💛❤️🧡 Beauty @deepikapadukone today for #chhapaak promotions in Mumbai


A post shared by Deepika Padukone Fanpage 🔹 (@deepika.padukone.fanpage) on

புடவையின் பளீர் நிறத்தை சற்று டல்லாகக் காட்ட நகைகளை சில்வர் மெட்டலில் தேர்வு செய்துள்ளார். அதுவும் நீல நிற கற்கள் பதித்ததாக பிளவுஸிற்கு மேட்சாக தேர்வு செய்துள்ளார். சாண்டிலியர் காதணி, கை நிறைய வளையல் என டிரெடிஷ்னலாக இருக்கிறார். அதற்கு ஏற்ப மேக் அப்பையும் சிம்பிளாகவே அப்ளை செய்துள்ளார். எப்போதும் போல் பன் ஹேர் ஸ்டைல் அணிந்திருக்கிறார். எப்போதும் ரெட் லிப்ஸ்டிக்கை விரும்பும் தீபிகா புடவை பளீரென இருப்பதால் பீச் நியூட் லிப்ஸ்டிக் தேர்வு செய்துள்ளார். மொத்தத்தில் தீபிகா பர்ஃபெக்ட் டிரெடிஷ்னல் லுக்கில் ஸ்டைலிஷாக ஜொலிக்கிறார். 
View this post on Instagram
 

❤️💛🧡 @deepikapadukone arrived for a Marathi Show in Mumbai wearing Anamika Khanna saree.


A post shared by Deepika Padukone Fanpage 🔹 (@deepika.padukone.fanpage) on

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: January 14, 2020, 3:45 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading