கண் தெரியாத பூனைக்குக் கிடைத்த ராஜ வாழ்க்கை!

இதை வெறும் சாதாரன பூனை தானே என்று நினைத்துவிடாதீர்கள்..!

news18
Updated: June 14, 2019, 8:43 PM IST
கண் தெரியாத பூனைக்குக் கிடைத்த ராஜ வாழ்க்கை!
சன் கிளாஸ் பூனை
news18
Updated: June 14, 2019, 8:43 PM IST
பூனைகள் செய்யும் சேட்டை எப்போதும் ரசிக்கக் கூடியவை. அதுவும் இன்ஸ்டாகிராமைக் கலக்கும் இந்த பூனை அனைவரையும் கவனம் ஈர்க்கிறது.

லாஸ் ஏஞ்சல்சில் வாழும் பேகல் (Begal) என்னும் இந்தப் பூனைக்குக் கண் பார்வைப் பிரச்னை உள்ளது. இதை வளர்க்கும் உரிமையாளர் கரன் மெக்கில் பூனை மீதான அதீதக் காதலால் பூனையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்கிறார். ஷேர் செய்யும்போது பூனையின் குறையை மறைக்க தினம் தினம் வித விதமான சன் கிளாஸுகளை பூனைக்கு அணிந்து புகைப்படமெடுத்து ஷேர் செய்கிறார்.மக்களும் பூனையின் ஸ்டைலைக் கண்டு ”சோ க்யூட்” என ஹார்டை தட்டி விடுகின்றனர்.  தற்போது இந்தப் பூனைக்கு 600,000 ஃபாலோவர்கள் இருக்கிறார்கள்.

அப்படி என்னதான் பூனையின் புகைப்படங்கள் இருக்கின்றன என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கிரால் செய்தபோது, கிட்டத்தட்ட 4000 புகைப்படங்கள் அதுவும் வெவ்வேறு 600 வகையான சன்கிளாஸுகளை வெவ்வேறு ஷேடுகளில் அணிந்து பக்காவாக போஸ் கொடுக்கிறது.
அந்த சன் கிளாஸுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் பல வகையான டிசைன்களில் இருக்கின்றன. மனிதர்கள் கூட இப்படி சன் கிளாஸுகளை அணிந்திருக்க மாட்டார்கள்.

Loading...
பேகல் பூனை வெறும் சன் கிளாஸுகள் மட்டும் அணிந்து போஸ் கொடுக்கும் பூனை என சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அது பல நாடுகளை சுற்றித் திரியும் சுற்றுலாவாசி. இஸ்டாகிராமிலும் ’குளோபல் டிராவலர்’ என்றே தன்னை பெருமையாகச் சொல்லிக்கொள்கிறது பேகல்.சன் கிளாஸ் மட்டும் அணிந்தால் போதுமா எல்லா நாடுகளுக்கும் பறக்கும் பேகலுக்கு ஆடை எப்படி இருக்கும். அதுவும் அட்டகாசம். பேகலுக்கு என பிரத்யேகமாக உரிமையாளர் கரன் தைத்து அணிவிக்கிறார். அதன் ஆடைகளைப் பார்க்கும் பெண்களே பொறாமைப்பட்டு கமெண்ட் செய்கிறார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இது குறித்து டெய்லி மெயில் பத்திரிக்கைக்கு உரிமையாளர் கரன், “பேகலுக்கு கண்பார்வைக் கோளாறு இருக்கிறது. பல நாடுகள், ஊர்கள் சுற்றுவதால் கண் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்திலே சன் கிளாஸ் அணிய ஆரம்பித்தேன். அது ஃபங்கியாக இருக்கட்டுமே என்ற காரணத்திற்காகவே இப்படி கலர் கலராக விதவிதமாக அணிகிறேன். இதுவே அவளுக்கு ஃபேஷன் ஸ்டேட்மெண்டாகி அனைவரும் பாராட்டி வருகின்றனர். எனக்குப் பெருமையாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார் .
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...