• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ”குட்டி பட்டாஸ் அஷ்வினுக்கு காஸ்டியூம் டிசைன் செய்தது நான்தான்” - சத்யா

”குட்டி பட்டாஸ் அஷ்வினுக்கு காஸ்டியூம் டிசைன் செய்தது நான்தான்” - சத்யா

குட்டி பட்டாஸ் | Kutty Pattas

குட்டி பட்டாஸ் | Kutty Pattas

இசையும், நடனமும் நம்மை உற்சாகப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் அந்த பாடலின் சூழலும் , செட் அமைப்பும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

  • Share this:
குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடல் யூடியூபில் டாப் டிரெண்டிங்கில் இருக்கிறது. பாடலின் ஹீரோவாக இருக்கும் குக் வித் கோமாளி அஷ்வினும் டிரெண்டிங் நாயகன்தான். அவருக்கு ஹீரோயினாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். யாரைப் பார்த்தாலும் அந்த பாடலைதான் முனுமுனுத்துக் கொண்டிருக்கின்றனர்.  இசையும், நடனமும் நம்மை உற்சாகப்படுத்துவது ஒருபுறம் இருந்தாலும் அந்த பாடலின் சூழலும் , செட் அமைப்பும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. கலர்ஃபுல் மேக்கிங் மனதில் உற்சாகத்தை தூண்டுகிறது.

அந்த பாடலை கவனித்தால் பாலிவுட் செட் அப்பில் இருக்கும். அதில் நடிகர் நடிகைகளின் ஆடை வடிவமைப்பும் முக்கிய காரணம். கண்களை பறிக்கும் வண்ணத்தில், ஜொலிக்கும் வேலைபாடுகளுடன் அவர்களின் காஸ்டியூம் தனித்துவம் பெற்றிருக்கும். நிச்சயம் அந்தப் பாடலை ரசித்தவர்கள் அஷ்வினின் ஆடையையும் ரசிக்கத் தவறியிருக்க மாட்டார்கள்.

அந்த மேக்கிங்கை உருவாக்கியவர் பிரபலங்களின் காஸ்டியூம் டிசைனர் சத்யா என்.ஜே தான். “ இந்த பாடலுக்கான காஸ்டியூம் டிசைன் குறைந்த நேரத்தில் திட்டமிடப்பட்டது. இரவுதான் வெங்க்கி செல்ஃபோனில் அழைத்து தகவல் தெரிவித்தார். உடனே அதற்கான வேலைகளை இரவு ஆரம்பித்து மறுநாள் காலை ஆடை தயாரானது. இது பாலிவுட் பாடல்களைப் போல் கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்பதால் அஷ்வினிற்கு குர்தா தேர்வு செய்தேன் “ என தன் அனுபவத்தை பகிர்கிறார் சத்யா.அஷ்வினின் உள்ளே அணிந்திருக்கும் குர்தா மற்றும் பேண்ட் ஆனியன் பிங்க் நிறத்திலும் மேலே அணிந்திருக்கும் ஜாக்கெட் மாம்பழ நிறத்திலும் இருக்கும். ஜாக்கெட்டில் சில கற்களும் பதிக்கப்பட்டிருக்கும். ரெபா அணிந்திருக்கும் ஆடை அஷ்வினின் ஆடைக்கு பொருந்துமாறு லெஹங்கா நிறமும் மாம்பழ மஞ்சள் மற்றும் பிங்க் நிறம் கலந்தவாறு இருக்கும்.

பாஸி லுக்கில் ஐஷ்வர்யா ராஜேஷ்..! அடுத்த படத்திற்கான கெட்அப் இதுதான்...

”இந்த கலர்தான் ஷூட்டிங்கிற்கு தேர்வு செய்திருக்கிறேன் என அஷ்விடம் காட்டிய போது அவர் முகமே மாறிவிட்டது. என்ன புரோ இவ்வளவு பிரைட் கலரா இருக்கேனு கேட்டாரு..நான் தான் நல்லா இருக்கும் டிரை பண்ணுங்கனு சொன்னேன். அப்புறம் அதை கான்ஃபிடண்டா போட்டுகிட்டாரு. பாடல் ரிலீஸ் ஆகிய பிறகு திரையில் பார்த்ததும் அஷ்வின் உடனே அழைத்து புரோ காஸ்டியூம் வேற லெவல் என மகிழ்ச்சியாக பேசினார். நான் கூட பயந்தேன். ஆனால் திரையில் பார்க்கும்போது கலர்ஃபுல்லா சூப்பரா இருக்குனு சொன்னார் என அஷ்வினுடன் வேலை பார்த்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.சத்யா ஹீரோயினுக்கும் ஹீரோவுக்குமான ஆடை காம்பினேஷனை மேட்ச் செய்ய ரெபா அணிந்திருக்கும் ஷாலில் கொடுக்கப்பட்டிருக்கும் கற்கள் வேலைபாடுகளை அப்படியே அஷ்வினின் காலரிலும் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். இப்படி சின்ன சின்ன நுட்பமான வேலைபாடுகளால்தான் சத்யா இன்று வரை தனித்துவ ஃபேஷன் டிசைனராக பயணித்து வருகிறார்.

காஸ்டியூமிற்கான பாராட்டுகள் குவிந்தனவா என்ற கேள்விக்கு “ ஆம்..நிச்சயமாக..பாடலை இயக்கிய வெங்க்கிக்கு என்னுடைய வேலை திருப்தியாக இருந்தது. உங்களுக்கு நான் காஸ்டியூம் தேர்வுக்கு நேரமே கொடுக்கவில்லை. ஆனாலும் பக்காவாக செய்துவிட்டீர்கள் என மகிழ்ச்சியாக பேசினார். இவ்வளவு நன்றாக வந்ததற்கும் அவர் எனக்கு கொடுத்த சுதந்திரம்தான்.காரணம் இது நல்லா இருக்கும் டிரை பண்ணுங்க என்று சொன்னால் அதற்கு மறுப்பிலாமல் செய்தனர். இப்படி வேலை செய்யும்போதுதான் நமக்கும் ரிலாக்சாக ஒர்க் செய்ய முடியும்.சத்யா இந்த பாடல் மட்டுமன்றி கவின் , தேஜூ அஷ்வினி, ஷிவாங்கி நடித்த அஸ்கு மாரோ பாடலுக்கும் காஸ்டியூம் டிசைன் செய்திருக்கிறார். அதோடு சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்திற்கும் சத்யா தான் காஸ்டியூம் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: