முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / விரைவில் வருகிறது ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்... என்னென்ன வசதிகள் இடம் பெறும் தெரியுமா?

விரைவில் வருகிறது ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்... என்னென்ன வசதிகள் இடம் பெறும் தெரியுமா?

கண்

கண்

2016ம் ஆண்டில் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் காப்புரிமைக்கு விண்ணப்பித்த முதல் நிறுவனம் சாம்சங்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஒரு காலத்தில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் பெரிய சைஸ் கண்ணாடிகளை அணிந்து வந்தனர். இதனால் கண்ணாடி பயன்படுத்துபவர்கள் பள்ளி, கல்லூரி, பணியிடம் என அனைத்து இடங்களிலும் கேலி, கிண்டலுக்கு ஆளாகினர். அதன் பின்னர் படிப்படியாக கண்ணாடியின் அளவு குறைந்து தற்போது விதவிதமான ப்ரேம்களுடன் அசத்தலான டிசைன்களில் கிடைக்கின்றன. தற்போது இளம் தலைமுறையினர் இடையே கண்ணாடி அணிவது குறைந்து காண்டாக்ட் லென்ஸை பயன்படுத்தும் முறை அதிகரித்து வருகிறது. தற்போது அதிலும் அதிநவீன டெக்னாலஜி புகுந்து விளையாடப்போவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் யுகத்திற்கு ஏற்றார் போல் சாதாரண பொருட்கள் அனைத்துமே ஸ்மார்ட் பொருட்களாக மாறி வருகின்றன. நம்மில் பலரிடமும் ஸ்மார்ட் வாட்சுகள், ஸ்மார்ட் இயர்பட்கள் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடிகள் உள்ளன. இவ்வளவு ஏன்?, ஸ்மார்ட் ஃபேன், ஸ்மார்ட் ஏசி, ஸ்மார்ட் பிரிட்ஜ் என வீட்டு உபயோக பொருட்கள் கூட ஸ்மார்ட்டாக மாறிவிட்டன. இப்போது இந்த ஸ்மார்ட் பட்டியலில் காண்டாக்ட் லென்ஸும் இணைய உள்ளது. எதிர்காலத்தில் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப கால ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் தயாரிப்பாளர்களான சாம்சங் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் இருக்கும் என்றும், இதன் மூலம் ஊக்கம் பெற்றும் பிற நிறுவனங்கள் தயாரிப்பில் களமிறங்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Read More : திருமணத்திற்கு முன்பு பொலிவான முகத்தைப் பெற இந்த 5 வகை மாஸ்க்குகளை முயற்சி செய்யலாம்!

தற்போதைய நிலவரப்படி சந்தைகளில் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் என்ற ஒன்று கிடையாது. ஆனால் பல பிராண்ட் நிறுவனங்கள் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்களை தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதனால் விரைவில் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் உற்பத்தி மற்றும் பயன்பாடு தொடர்பான கால அவகாசம் குறுகியதாக இருக்காது என்றும், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்களின் தொழில்நுட்பம் குறிப்பிட்ட அளவிற்கு வளர்த்திருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில் ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் காப்புரிமைக்கு விண்ணப்பித்த முதல் நிறுவனங்களில் சாம்சங் ஒன்றாகும், எனவே சாம்சங் நிறுவனம் மிகப்பெரிய ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் பிராண்டாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாம்சங் நிறுவனம் மடிக்ககூடிய ஸ்மார்ட் போன்களை கண்டறிந்து சாதனை படைத்ததைப் போலவே ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ் விஷயத்திலும் புதுமை மற்றும் தொழில்நுட்பம் சிறந்ததாக இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றன.

ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் தொழில்துறை எதிர்காலத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், தயாரிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி, எப்போது பயனர்களின் கைகளுக்கு பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்பது இதுவரை கணிக்கப்படவில்லை. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி ஸ்மார்ட் காண்டாக்ட் லென்ஸ்கள் மூலமாக வாட்ஸ் அப் சாட் செய்வது, கண் சிமிட்டுவதன் மூலமாக போட்டோக்களை கிளிக் செய்வது போன்ற வசதிகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Eye care, Eye makeup, Lifestyle