காஃபி கொட்டை, அன்னாசி இலையில் தயாராகும் ஆடைகள்..!

காஃபி கொட்டை, அன்னாசி இலையில் தயாராகும் ஆடைகள்

பெரிய வர்த்தகத்தை கொண்ட காஃபி கொட்டைகளை வாங்க கூடிய ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கை கோர்த்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இயற்கையை பாதுகாக்க அரசாங்கமும் மக்களும் பல முயற்சிகளையும், மாற்றுகளையும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் ஃபேஷன் டிசைனர்களும் தங்கள் பங்கிற்கு புதிய வகை மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதாவது காஃபி கொட்டை நார், அன்னாசி இலைகள் மற்றும் மறுசுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றின் மூலம் நூல் தயாரித்து ஃபேப்ரிக்குகளை உருவாக்கி வருகிறது.

இதனால் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையை பாதுகாக்க முடியும் என்று கூறுகின்றனர். இதற்காக புதிய வகைத் தொழில்நுட்பங்களையும் உருவாக்கி அறிமுகப்படுத்தவுள்ளனர்.

அழிக்கமுடியாத தொழிற்சாலையான இந்த ஃபேஷன் இண்டஸ்ட்ரீயின் இந்த முயற்சி உலக ஃபேஷன் வல்லுநர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது. ஏற்கனவே பருத்தி, லினென், மற்றும் ஜூட் போன்ற நூல்களை அப்படியே பயன்படுத்தி வரும் நிலையில் இந்த காஃபி மற்றும் அன்னாசி இலை நார்களையும் அப்படியே நூலாக மாற்றி பயன்படுத்தி வருகிறது.இதற்காக உலகம் முழுவதும் உள்ள , பெரிய வர்த்தகத்தை கொண்ட காஃபி கொட்டைகளை வாங்க கூடிய ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்களுடன் கை கோர்த்து இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதனால் அதிக மதிப்பைக் கொண்ட இந்த காஃபி கொட்டைகள் நாராக வெளியேறும்போது தூக்கி எரியப்படும். இனி அப்படி இல்லை. இந்த முயற்சியால் அவற்றிற்கு மறு உயிர் அதாவது மறுசுழற்சிப் பயன்பாடாக நிலைக்கச் செய்கிறது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் நீங்கள் குடிக்கும் ஒரு கப் காஃபியில் இரண்டு டீ சர்ட்டுகளை தயாரிக்கலாமாம். அதேபோல் இந்த காஃபி கொட்டை நூலோடு பாலிஸ்டர், நைலான் போன்ற நூலையும் இணைத்து ஃபேப்ரிக் தயாரிக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

காஃபி கொட்டைகள் மூலம் ஃபேப்ரிக் தயாரிப்பை சிண்டெக்ஸ் தொழிற்சாலை ஏற்கனவே 2008 ஆம் ஆண்டே இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் அடைந்தது. ஆனால் தற்போதுதான் அதன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. டிசைனர்களிடேயும் இந்த காஃபி கொட்டை ஃபேப்ரிக் பிரபலமடைந்து வருகிறது. தைவானைச் சேர்ந்த இந்த ஃபேப்ரிக் தொழிற்சாலை உலக அளவில் பிரலம் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sivaranjani E
First published: