Home /News /lifestyle /

காலநிலை மாற்றத்தால் 2022 ஆண்டில் ஃபேஷன் துறையில் வரப்போகும் மாற்றங்கள் : இதுவரை இல்லாத புதிய முயற்சிகள்

காலநிலை மாற்றத்தால் 2022 ஆண்டில் ஃபேஷன் துறையில் வரப்போகும் மாற்றங்கள் : இதுவரை இல்லாத புதிய முயற்சிகள்

ஃபேஷன் துறை

ஃபேஷன் துறை

ஃபேஷன் துறைக்கும், காலநிலை மாற்றத்திற்கும் அப்படி என்ன பெரிய இணைப்பு இருக்கும் என்று யாருமே கேட்க மாட்டார்கள். ஏனெனில் அனைவருக்குமே தெரியும் ஆடை சம்மந்தப்பட்டப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது கார்பன் உமிழ்வுகள் வெளியிடப்படுகின்றன.

மேலும் படிக்கவும் ...
கடந்த 2021 ஆம் ஆண்டில், காலநிலை மாற்றம் என்கிற "டாபிக்" முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகம் பேசப்பட்டதை இந்த உலகம் பார்த்தது. தார்மீக உணர்வு, வளங்களை பயன்படுத்துவதன் மீதான நெறிமுறை மற்றும் காலநிலையை புரிந்துணர்வது ஆகியவற்றைச் சுற்றியுள்ள சொற்பொழிவுகள் உலகின் அனைத்து துறைகளிலும் நடைபெற்றது. அதன் விளைவாக கலாநிலை மாற்றம் சார்ந்த சில தேவையான முடிவுகளும் எடுக்கப்பட்டது.

எடுத்துக்காட்டாக, வாகனத் துறையில் பல முக்கிய நிறுவனங்கள் கார்பன் நியூட்ரலை நடைமுறைப்படுத்தும் - அதாவது வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதை நிறுத்த, எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பிற்குள் இறங்க முடிவு செய்ததை நாம் கண்டோம்.

நம்பினால் நம்புங்கள்! ஃபேஷன் துறையிலும் இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஃபேஷன் துறைக்கும், காலநிலை மாற்றத்திற்கும் அப்படி என்ன பெரிய இணைப்பு இருக்கும் என்று யாருமே கேட்க மாட்டார்கள். ஏனெனில் அனைவருக்குமே தெரியும் ஆடை சம்மந்தப்பட்டப் பொருட்களை உற்பத்தி செய்யும் போது கார்பன் உமிழ்வுகள் வெளியிடப்படுகின்றன. அதன் விளைவாக நமக்கு கிடைக்கும் வளங்களை நாம் தொடர்ந்து பயன்படுத்த முடியாத வகையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில் ஃபேஷன் துறை ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது.

இந்த 2022 ஆம் ஆண்டும், அதன் முன்னோடியைப் போலவே, காலநிலை சார்ந்த தார்மீக உணர்வுகளை பற்றிய விவாதத்தைத் தொடர்கிறது. இதன் கீழ் இந்த 2022 ஆம் ஆண்டானது சில தரமான முன்னேற்றங்களை காணாமல். அது ஃபேஷன் துறையில் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதில் ஒன்று தான்..க்ளோஸ்டு-லூப் சினெர்ஜி ஆஃப் ஃபேஷன்!

இது ஒரு வட்டப் பொருளாதாரமாகும், அதாவது சர்க்குலர் எகானமி ஆகும். அதாவது உற்பத்தி மற்றும் நுகர்வின் கீழ் பகிர்தல், குத்தகை, மறுபயன்பாடு, பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் முடிந்தவரை இருக்கும் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை மறுசுழற்சி செய்தல் ஆகும். இது சோஷியல் மீடியாக்கள் போன்ற பல்வேறு கருவிகளின் வழியாக இளைஞர்களால் பிரபலமாக்கப்பட்டு வரும் ஒரு பொருளாதார முறையாகும். இது மெல்ல மெல்ல மக்கள் மத்தியில் பரவி, படிப்படியாக மேலாதிக்க முன்னுதாரணத்தை நோக்கி செல்லும் என்றும், இதன் விளைவாக ஆடைகள் உட்பட ஃபேஷன் பாகங்கள் முடிவில்லாத மறுசுழற்சிக்கு வந்துகொண்டே இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

கொலாஜின் அடுக்குகள் முகத்திற்கு செய்யும் நன்மைகள் என்ன..? கட்டுக்கதைகளும்..உண்மைகளும்

எதிர்காலத்திற்கான பொருட்கள்!

காலநிலையை புரிந்துணர்வது சார்ந்த நடத்தையின் ஒரு விளைவாக, ஒரு தயாரிப்புக்குப் பிந்தைய கட்டம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஆடைப் பொருட்களின் ஆரம்ப கால தயாரிப்பு கட்டடமும் குறிப்பிடத்தக்க நன்மைக்காக மாற்றப்படுகிறது. அதாவது வழக்கமாக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் ஆதாரங்கள் கைவிடப்படப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டிற்கு காளான்களிலிருந்து பெறப்படும் லெதருக்கான கூறு, ஸ்பைடர் சில்க் போன்ற பயோ-பேப்ரிக்ஸ் போன்ற பசுமையான தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது எதிர்காலத்திற்கான கார்பன் வெளியீட்டை குறைக்கும் என்று ஒருவர் நம்பலாம்.சட்டங்களின் உருவாக்கம்!

டோமினோ விளைவு - இது முழு உலகின் ஒரு சிறிய பகுதியாக இருந்தாலும் கூட இது ஒரு அசாதாரணமான முடிவின் ஒரு தொடக்கமாக கூட இருக்கலாம். சுருக்கமாக டோமினோ எப்பெக்ட் என்றால் செயின் ரியாக்ஷன் ஆகும்; ஒரு எதிர்வினையை தொடர்ந்து மற்றொன்று உருவாகி கொண்டே போகும் ஒரு விளைவாகும். இது தொடர்பாக அமெரிக்க செனட்டில் ஒரு புதிய மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது, அந்த மசோதா பெரிய பிராண்டுகளை குறிவைத்து, பொருட்களை உற்பத்தி செய்வதற்கான வழிகளை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது உற்பத்திச் சங்கிலியில் பெரிய அளவிலான வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Fashion, Fashion Tips

அடுத்த செய்தி