ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வெள்ளி நகை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்..?

வெள்ளி நகை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்..?

வெள்ளி நகை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்..?

வெள்ளி நகை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்..?

தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் நிலையில், சாமானிய மக்களின் எளியத் தேர்வாக வெள்ளி நகைகள் அமையும். குறிப்பாக, பெண்களுக்கு வெள்ளி கொழுசு என்றால் அளவு கடந்த பிரியம் உண்டு. அதேபோல முதலீடு அடிப்படையில் வெள்ளி வாங்குபவர்கள் நாணயங்களை தேர்வு செய்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது என்றால் எப்போதும் மகிழ்ச்சிகரமான விஷயம் தான். குறிப்பாக, செல்வத்தின் அடையாளமாக திகழும் இந்தப் பொருட்களை பண்டிகைக் காலங்களில் வாங்குவது இன்னும் சிறப்புக்குரிய விஷயமாக இருக்கும். ஒருவேளை தீபாவளி பண்டிகைக்கால நெருக்கடியான நேரத்தில் உங்களால் நகை வாங்க வாய்ப்பு அமையாத பட்சத்தில், இப்போதவாது நகை வாங்கிக் கொள்ளலாம்.

தங்கத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே போகும் நிலையில், சாமானிய மக்களின் எளியத் தேர்வாக வெள்ளி நகைகள் அமையும். குறிப்பாக, பெண்களுக்கு வெள்ளி கொழுசு என்றால் அளவு கடந்த பிரியம் உண்டு. அதேபோல முதலீடு அடிப்படையில் வெள்ளி வாங்குபவர்கள் நாணயங்களை தேர்வு செய்கின்றனர்.

வெள்ளி நகைகளுக்கான மதிப்பை கணக்கீடு செய்வது?

வெள்ளியின் எடை எவ்வளவோ, அதற்கான கட்டணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானதல்ல. வெள்ளி எடைக்கான மதிப்பு, செய்கூலி, ஹால்மார்க் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி ஆகிய அனைத்திற்கும் சேர்த்து தான் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய சூழலில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.65 ஆகும். இதனுடன் நகை விற்பனையாளரை பொறுத்து செய்கூலி மாறும். ஜிஎஸ்டி வரி 3 சதவீதம் சேர்க்கப்படும். ஹால்மார்க் கட்டணம் சில நூறு ரூபாய்கள் இருக்கும்.

மாறுபடும் செய்கூலி கட்டணம் :

சில நகைக்கடைகளில் செய்கூலி கட்டணம் தனியாக வசூல் செய்வார்கள். சில கடைகளில் வெள்ளி கிராம் விலையுடன் செய்கூலி கட்டணத்தை சேர்த்து விடுவார்கள். எப்படி இருந்தாலும் நீங்கள் வாங்கும் வெள்ளிக்கு ரசீது பெறுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நகையின் தரம், வரி பிடித்தம் உள்ளிட்டவை தனித்தனியாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

Also Read : மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க தங்க நகை வாங்குறீங்களா..? அதன் தூய்மை மற்றும் தரத்தை பார்த்து வாங்க டிப்ஸ்..!

வெள்ளி நகையின் ப்யூட்டி :

பொதுவாக 100 சதவீதம் சுத்தமான தங்கத்தை கொண்டு நகை செய்ய முடியாது. அதில் செம்பு அல்லது வேறு உலோகத்தை கலப்பார்கள். பிற உலோகம் எவ்வளவு கலக்கப்படுகிறது என்பதை பொறுத்து, தங்கத்தின் தரத்தை காரட் அடிப்படையில் பிரிப்பார்கள். அதைப்போலவே, வெள்ளியின் உறுதித்தன்மை பொறுத்து அதை தரம் பிரிக்கின்றனர். அதாவது 999 அளவுக்கு உறுதித்தன்மை கொண்டது சுத்தமான வெள்ளி ஆகும். 925 அளவுக்கு உறுதித்தன்மை கொண்ட வெள்ளியில் பிற உலோகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.

ஸ்டட் நகை :

வைரம் அல்லது விலை மதிப்புமிக்க கல் பதித்த வெள்ளி நகைகளை வாங்குவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. உங்கள் நகையில் பதிக்கப்படும் கல்லுக்கு தனியாக மதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். அந்தக் கல்லுக்கும் சேர்த்து வெள்ளியின் எடை இருக்கக் கூடாது.

ரோடியம் பிளேட்டிங் :

வெள்ளி நகைகளை அடிக்கடி பயன்படுத்தும்போது அவை கருத்து விடுகின்றன. ஆகவே, இதனை தவிர்க்க ரோடியம் என்னும் உலோகத்தை நகை தயாரிப்பாளர்கள் கலக்கின்றனர். அந்த வகை நகை தேவையென்றால் கேட்டு வாங்கவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Silver