மிஸ் இங்கிலாந்து அழகியாக பட்டம் பெற்ற இந்திய மருத்துவப் பெண்..!

கடந்த டிசம்பர் மாதம் நடந்த உலக அழகிப் போட்டிக்காக பங்கேற்று வெற்றியடையவில்லை.

news18
Updated: August 3, 2019, 4:12 PM IST
மிஸ் இங்கிலாந்து அழகியாக பட்டம் பெற்ற இந்திய மருத்துவப் பெண்..!
பாஷா முகர்ஜி
news18
Updated: August 3, 2019, 4:12 PM IST
இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பாஷா முகர்ஜி ( Bhasha Mukherjee) என்னும் 23 வயது பெண் மிஸ் இங்கிலாந்து 2019 பட்டத்தை வென்றுள்ளார்.

முகர்ஜி 9 வயதாக இருக்கும்போதே இங்கிலாந்தில் கிழக்கு மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள டெர்பியில் குடியேறியுள்ளனர். பின் அழகியாக வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். இதற்காக ஏழு வருடங்களாக இந்த துறையில் இருக்கிறார். இந்த மிஸ் இங்கிலாந்து பட்டத்திற்காக 22,000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அதில் 55 பேர் தேர்வாகி முகர்ஜி இறுதி வாய்ப்பில் வெற்றிபெற்று பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

மாடலிங் துறை ஒரு பக்கம் இருக்க மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையால் மருத்துவப் படிப்பையும் முடித்து கடந்த வாரம்தான் பில்கிரிம் மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவராக பணியில் சேர்ந்துள்ளார்.

முகர்ஜிக்கு ஆங்கிலம், பெங்காலி, ஹிந்தி, ஜெர்மன், ஃபிரெஞ்சு என ஐந்து மொழிகள் தெரியும். அதேபோல் இவரின் ஐ.க்யூ 146 என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் படிப்பில் படு சுட்டியாக இருந்துள்ளார். கனவுப் பட்டத்தையும் வாங்கிவிட்டதால் அடுத்ததாக மருத்துவராக செயலாற்ற உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடந்த உலக அழகிப் போட்டிக்காக பங்கேற்று வெற்றியடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...