ஃபோன் வையருக்கு ரூ.1 லட்சம் விலையா? தம்பி இது கழுத்துல போடுற நெக்லஸ்பா - கலக்கும் பேஷன் உலகம்!

ஃபோன் வையர் நெக்லஸ்

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2 ஆயிரம் அமெரிக்க டாலரைக் கொடுத்து பழைய போன் வையர் மாடல் நெக்லஸையும் வாங்கியுள்ளனர்.

  • Share this:
பார்பதற்கு அந்தகால போன் வையர் போல் இருக்கும் புதிய மாடல் நெக்லஸூக்கு ஒரு லட்சம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பது நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேஷன் உலகில் அறிமுகம் செய்யப்படும் புதிய மாடல் டிரஸ்கள் முதல் ஆபரணங்கள் வரை எப்போதும் நெட்டிசன்களின் கவனத்தை விரைவாக ஈர்த்துவிடும். நிறுவனங்களும், தங்கள் பிராண்டுகளுக்கு விளம்பரம் தேவை என்பதால் பிராண்டு அறிமுகத்தில் வித்தியாசமான புதிய யுக்தியை கையாள்வார்கள். அந்தவகையில் இத்தாலி பேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நெக்லஸ் (Necklace) ஒன்று நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பழைய கால போன் வையர் (wire) போல் இருக்கும் நெக்லஸூக்கு அந்த நிறுவனம் சுமார் 1.40 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது.

இத்தாலியின் காஸ்ட்லி பேஷன் பிராண்டான போட்டெகா வெனெட்டா (Bottega Veneta) நிறுவனம் புதிய நெக்லஸ் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது அந்தக்கால லேண்ட் லைன் போன்களுக்கு ரிசீவருக்கு கொடுக்கப்படும் வையர் போல் சுருள்சுருளாக உள்ளது. ஸ்டெர்லிங் சில்வரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நெக்லஸ், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ற சிகப்பு, பச்சை, மஞ்சள் என பல்வேறு கலர்களில் கிடைக்கின்றன. இந்த நெக்லஸ் ஒன்றுக்கு இரண்டாயிரம் அமெரிக்க டாலர் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் சுமார் ரூ. 1,45,189 லட்சமாகும். நெக்லஸ் மாடலைவிட அதற்கு கீழ் கொடுக்கப்பட்ட விலையை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துவிட்டனர். 
View this post on Instagram

 

A post shared by Diet Prada ™ (@diet_prada)


என்னது பழைய போன் வையரை ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து கழுத்தில் பேஷன் என போட்டுக்கொள்ள வேண்டுமா? என ஆதங்கத்துடன் கேள்வியும் எழுப்பியுள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பேஷன் பொருட்களை அறிமுகம் செய்து வைத்து விமர்சனமும் செய்து வரும் டையட் பிரதா (Diet Prada) அக்கவுண்டில் முதன்முதலாக இந்த நெக்லஸ் ஷேர் செய்யப்பட்டது. பின்னர், அதன் அருகிலேயே சுருள் சுருளாக இருக்கும் பழைய போன் வையர் புகைப்படத்தையும் பதிவிட்ட டையட் பிரதா, இதன் விலை ரூ.5 டாலர் மட்டுமே என தெரிவித்துள்ளது.

2 ஆயிரம் டாலர் காஸ்டிலியான விலை கொடுத்து போன் வையர் மாடல் நெக்லஸை வாங்குவதற்கு பதிலாக 5 டாலர் மட்டுமே விலைகொண்ட போன் வையரையே வாங்கி கழுத்தில் மாட்டிகொள்ளலாம் என டையட் பிரதா பக்கம் கூறியுள்ளது. இதனையடுத்து நெட்டிசன்கள் இந்தப் புகைப்படத்தை எடுத்து மீம்ஸ், டிரால் என கலாய்த்து வருகின்றனர்.

வெயிலை சமாளித்து அழகாக வெளியே சென்றுவர ஸ்டைலிஷான 5 ஸ்கர்ட் வகைகள்..!

போட்டெகா வெனெட்டா (Bottega Veneta) நிறுவனம், இந்த நெக்லஸூடன் காதணிகள் மற்றும் மோதிரங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளன. புதிய காதணிகள் 893 அமெரிக்க டாலர்களுக்கும், மோதிரங்கள் 556 அமெரிக்க டாலருக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2 ஆயிரம் அமெரிக்க டாலரைக் கொடுத்து பழைய போன் வையர் மாடல் நெக்லஸையும் வாங்கியுள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published: