பூமிகா 90ஸ் கிட்ஸுகளின் கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அந்த அழகை இன்று வரை பராமரித்து வருகிறார் எனில் ஆச்சரியம்தான். விரல் விட்டு என்ணக்கூடிய அளவில்தான் பூமிகா தமிழ்ப்படங்களில் நடித்தார். இருப்பினும் வசீகரிக்கும் அழகால் பலரது மனங்களைக் கட்டிப்போட்டார்.
அதை தொடர நினைக்கும் பூமிகாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் எப்போதும் கனெக்டிவிட்டியில்தான் இருக்கிறார். குறிப்பாக இன்ஸ்டாகிராமில்தான் பூமிகாவிற்கு ஃபேன் பேஸ் அதிகம்.
அதற்கு ஏற்ப ரசிகர்களை எப்போதும் எங்கேஜிங்காக வைத்துக்கொள்ள அவ்வப்போது சில ஃபோட்டோஷூட்ஸ் நடத்தி பகிர்ந்துகொள்வார். அதில் சற்றும் வயது முதிர்ந்த தோற்றம் தெரியாது. இளமைத் துள்ளலுடனே இருப்பார்.
அந்த வகையில் தற்போது அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில் அட்டகாசமான பார்ட்டி லுக்கில் இருக்கிறார். கிரீமி நிற கவுன் அணிந்து அதன் மேல் ரோஸ் கோல்டு நிறத்தில் ஜிகு ஜிகுவென ஜொலிக்கும் ஷ்ரக் அணிந்துள்ளார்.
அதற்கு ஏற்ப நேர்த்தியான மேக்அப். அவருக்கு இருக்கும் தனிச்சிறப்பே உதடுதான். அதை ஹைலைட் செய்யும் விதமாக ஊதா நிற லிப்ஸ்டிக் அட்டகாசமாக தூக்கிக் கொடுக்கிறது.
ஃபிரீ ஸ்டைல் ஹேர், சிம்பில் ஆக்சஸரீஸ் என பக்காவான பார்ட்டி லுக்கில் மின்னுகிறார் பூமிகா. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவருடைய ஃபாலோவர்கள் கார்ஜியஸ், பிரெட்டி என வர்ணிக்கின்றனர்.