நடிகை தீபிகா படுகோன் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவருக்கு பாலிவுட் மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை தீபிகா படுகோன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நடிகை தீபிகா படுகோன் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார். மேலும் இவரின் ஃபேஷன் கோல்ஸை பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே உள்ளது என்று கூறலாம்.
இவர் பதிவிடும் போட்டோ ஷூட்கள் ஒரே நாளில் ட்ரெண்டாகி விடும். அந்த வகையில் நடிகை தீபிகா படுகோன் தற்போது மஞ்சள் , பச்சை நிற, லைட் ப்ளூ, லைட் பிங்க் இப்படி மல்டி கலரில் புடவை அணிந்துள்ளார்.
மிகவும் சிம்பிளான இருக்கும் இந்த புடவையில் எந்த ஒரு டிசைனும் இல்லை.ஆனால் கிளாசிக் லுக்கை தருகிறது. மஞ்சள், பச்சை, ப்ளூ, பிங்க் என பல கலர்கள் கலந்துள்ள புடவையை எடுத்துக்காட்டும்படி மஞ்சள் நிற ஜாக்கெட் அணிந்துள்ளார்.
ஜாக்கெட்டின் மாடல் காலர் டைப்பில் சிலிவ் லெஸில் அணிந்துள்ளார். இந்த லுக் தீபிகா படுகோனின் ஃபேஷன் கோல்ஸை காட்டுகிறது.
Also Read : விதவிதமாக லெஹங்கா போடுவது உங்களுக்கு பிடிக்குமா ? சமந்தா ஸ்டைலை ட்ரை பண்ணி பாருங்க..
எந்த ஒரு அணிகலன்களும் பெரிதாக அணியாமல் ப்ளூ மற்றும் வெள்ளை நிற கற்கள் பதித்த காதணி அணிந்துள்ளார்.
மேக்கப்பை பொறுத்தவரை கண்களில் ஸ்மோக்கி ஐஸ் ( smoky eyes ), ஐ லைனர் மற்றும் லைட் ஷேடில் லிப் ஸ்டிக் போட்டுள்ளார். அணிந்திருக்கும் புடவைக்கு இந்த மேக்கப் மேலும் அழகை சேர்த்துள்ளது.
கைகளில் எந்த ஒரு ஆபரணமும் அணியாமல் மோதிரம் மட்டும் அணிந்துள்ளார்.
இந்த புடவைக்கு ஏற்றது போல் ஃபுல் ஹேர் பண் ( full hair bun ) ஹேர் ஸ்டைலை தேர்வு செய்துள்ளார்.
தீபிகா படுகோனின் இந்த சேலை தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதன் விலை சுமார் ரூ.19,000 என்று கூறப்படுகிறது. இந்த ட்ரெண்டியான புடவை உங்களுக்கு பிடித்திருந்தால் இதே மாதிரி கலரில் புடவை வாங்கி அணியலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.