Home /News /lifestyle /

மேக்கப் ரிமூவ் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கா? முறையாக செய்வது எப்படி? 

மேக்கப் ரிமூவ் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கா? முறையாக செய்வது எப்படி? 

மேக்கப்பை எப்படி ரிமூவ் செய்வது?

மேக்கப்பை எப்படி ரிமூவ் செய்வது?

மேக்கப்பை ரிமூவ் செய்வது மேக்கப் போடுவதைப் போலவே முக்கியமான ஒரு விஷயம். அதை சரியாக செய்யவில்லை என்றால் பிரச்சினையில் முடியவும் வாய்ப்புள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    நாள் முழுவதும் நேரம் ஒதுக்கி பார்த்து, பார்த்து செய்த மேக்கப்பை, படுக்கைக்கு போகும் முன்பு அகற்றிவிட்டு செல்வது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது. உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் டான்ஸ், தடபுடலான விருந்து என அனைத்தையும் கொண்டாடிவிட்டு வீடு திரும்பும் போது படுக்கையில் படுத்து உறங்க வேண்டும் என்ற எண்ணமே ஆக்கிரமித்திருக்கும்.

    ஆனால் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் மேக்கப்பை முற்றிலுமாக நீக்கிவிட்டு உறங்கச் செல்வது தான் நல்லது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் முறையாக மேக்கப்பை ரிமூவ் செய்யவில்லை என்றால் முகப்பரு, கரும்புள்ளிகள், வெடிப்புகள் போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புண்டு.

    எனவே மேக்கப் உடன் அழுக்கு, மாசுகள், எண்ணெய் மற்றும் வியர்வை என முகத்தில் படிந்திருக்கும் அனைத்தையும் இரவில், படுக்கைக்கு செல்லும் முன் சுத்தம் செய்ய வேண்டும்.

    சாதாரண சருமம் முதல் வறண்ட சருமம் வரை மேக்-அப்பை அகற்றுவதற்கான சிறந்த வழி, க்ளென்சிங் க்ரீம் அல்லது ஜெல் பயன்படுத்துவதாகும். க்ளென்சர் சருமத்தை மென்மையாக்குவதால், மேக்கப்பை அகற்றுவது எளிதாகிறது.

    எண்ணெய் பசை சருமம் உடையவர்கள், ஃபேஸ் வாஷ் அல்லது கிளன்சிங் மில்க் (Cleansing Milk) பயன்படுத்தலாம். லேசான மசாஜ் மூலம் முகத்தில் க்ளென்சரை தடவி ஈரமான பருத்தி துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

    கண்களை சுற்றியுள்ள பகுதி மற்றும் உதடுகளுக்கு, அனைத்து வகை சருமத்திற்கும் பொருத்தக்கூடிய கிளீனிங் ஜெல்லைப் பயன்படுத்தலாம். ஏனெனில் கண்களை சுற்றியுள்ள தோல் மற்றும் உதடுகளில் உள்ள தோல் மென்மையாக இருக்கும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.

    கண்களை சுற்றியுள்ள தோலை இழுக்காமல் அல்லது நீட்டாமல் மெதுவாக துடைக்க வேண்டும், உங்கள் மோதிர விரலைப் பயன்படுத்தி, க்ளென்சிங் ஜெல் தடவி, ஈரமான பருத்தி பஞ்சால் மெதுவாக துடைத்து எடுக்கவும். முன்னுக்குப் பின் வேகமாக இழுக்காமல், ஒரே திசையில் பொறுமையாக துடைத்து எடுக்க வேண்டும்.

    கண் இமைகளில் உள்ள மஸ்காராவை அகற்ற, ஈரமான பருத்தி துணியில் க்ளென்சரை பயன்படுத்தி, அதை உங்கள் ஆள்காட்டி விரலில் சுற்றி மெதுவாக துடைக்கலாம். கீழ் கண் இமைகளில் உள்ள மஸ்காராவை அகற்ற, ஒரு பருத்தி பஞ்சில் சிறிதளவு க்ளென்சரை பயன்படுத்தி, சுத்தப்படுத்தலாம்.

    லிப்ஸ்டிக்கை அகற்ற, ஈரமான பருத்தி பஞ்சு அல்லது துணியில் க்ளென்சரை வைத்து, உட்புறமாக உதட்டின் மூலையில் இருந்து மையம் நோக்கி மெதுவாக துடைக்க வேண்டும்.

    இயற்கை க்ளென்சர்கள்:

    இயல்பானது முதல் வறண்ட சருமம் வரை:

    அரை கப் பாலில் ஐந்து துளிகள் தாவர எண்ணெய் (டில், ஆலிவ் அல்லது சூரியகாந்தி எண்ணெய்) சேர்க்கவும். இதனை ஒரு பாட்டிலில் போட்டு நன்றாக குலுக்கவும், இதனை ஒரு பருந்தி பஞ்சு அல்லது துணியில் தொட்டு பயன்படுத்தலாம். மீதமுள்ள கலவையை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

    எண்ணெய் மற்றும் கலவையான சருமத்திற்கு:

    நான்கில் ஒரு பங்கு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், ஒரு டீஸ்பூன் வெள்ளரி சாறு மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து இயற்கையான க்ளென்சரை உருவாக்கவும். இதனை முகத்தில் தடவி பின்னர், 15 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரில் சுத்தப்படுத்தலாம்.

    பப்பாளி ஒரு இயற்கையான க்ளென்சர் ஆகும். ஏனெனில் இதில் உள்ள என்சைம்கள் தோலை சுத்தப்படுத்த உதவுகின்றன. பழுத்த பப்பாளி கூழை சருமத்தின் மீது தடவி அரை மணி நேரம் கழித்து கழுவலாம். இது இறந்த சரும செல்களை அகற்றுவதோடு, சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது.

    உருளைக்கிழங்கு சாறு சருமத்தை சுத்தப்படுத்த சிறப்பானது. எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள், உருளைக்கிழங்கு சாற்றை முல்தானி மெட்டியுடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் போல அப்ளே செய்து கொள்ளலாம். 15 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இது சருமத்தை சுத்தப்படுத்துவதோடு கரும்புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது.

    ஸ்ட்ராபெரி பழங்களை கூழாக்கி முகத்தில் தடவி, 10 நிமிடங்களுக்குப் பின்னர் ரோஸ் வாட்டர் கொண்டு கழுவினால் சருமம் பளீச் லுக்கிற்கு மாறும்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Face Bleaching, Makeup

    அடுத்த செய்தி