ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தாடி ஸ்டைலை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என கண்டுபிடிக்கலாம்..!

தாடி ஸ்டைலை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர் என கண்டுபிடிக்கலாம்..!

தாடியின் ஸ்டைல்

தாடியின் ஸ்டைல்

முகவாய்க்கட்டையில் மட்டும் குறுந்தாடி வைத்திருப்பவர் நீங்கள் என்றால் திறமையானவர், நம்பகமானவர் மற்றும் நம்பிக்கைக்கு தகுதியானவராக இருப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுவீர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தாடி வைப்பது இப்போதெல்லாம் மிகவும் ஃபேஷனான விஷயமாக இருக்கிறது. பள்ளி மாணவர்கள் கூட ஸ்டைலாக தாடி வைக்கும் கலாச்சாரம் தான் இப்போது இருந்து வருகிறது. நீங்களும் தாடி வைத்திருப்பவர் என்றால் உங்களுக்கு எந்த ஸ்டைல் பிடிக்கும்.! முழு தாடி வைப்பதா? பிரெஞ்ச் பியர்டா? அல்லது ஸ்டப்புல் ஸ்டைல் தாடியா.?

ஏன் கேட்கிறோம் என்றால் உங்கள் தாடி தோற்றத்தின் அடிப்படையில் உங்களை பற்றி எங்களால் நிறைய சொல்ல முடியும். ஆம், நீங்கள் வழக்கமாக மெயின்டைன் செய்யும் தாடி ஸ்டைல் உங்களின் உண்மையான ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகிறது. சரி, இப்போது கீழே சில தாடி ஸ்டைல்களையும் அதற்கான ஆளுமை பண்புகள் என்ன என்பதை பற்றியும் பார்க்கலாம்.

ஃபுல்-லென்த் பியர்ட் (Full -Lenghth Beard) : 

மேலே உள்ள படத்தில் இருப்பதை போல நீங்கள் முழு நீள தாடி வைத்திருப்பவர் என்றால், மிகவும் ஆக்ரோஷமானவர்கள் மற்றும் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். மேலோட்டமாக பார்த்தால் கரடு-முரடான தோற்றத்தில் நீங்கள் காட்சி அளித்தாலும் உங்களுக்குள் கருணை, இரக்கம், நம்பிக்கை, தைரியம் என அனைத்து அடிப்படை பண்புகளையும் பெற்றிருப்பீர்கள். கடின உழைப்பாளியான நீங்கள் உங்கள் இலக்குகளை நோக்கி முன்னேறுவதில் தீர்க்கமாக இருப்பீர்கள்.

Also Read : மழைக்காலத்தில் தாடி அரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லையா..? இந்த விஷயங்களை செஞ்சு பாருங்க...

கோட்டி பியர்ட் (Goatee Beard ) :  

இந்த ஸ்டைலை ஆட்டு தாடி அல்லது குறுந்தாடி என்றும் சொல்வார்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்...

இந்த இமேஜில் உள்ளது போல முகவாய்க்கட்டையில் மட்டும் குறுந்தாடி வைத்திருப்பவர் நீங்கள் என்றால் திறமையானவர், நம்பகமானவர் மற்றும் நம்பிக்கைக்கு தகுதியானவராக இருப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டுவீர்கள். உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதிலும், நீண்ட கால உறவுகளைப் பேணுவதிலும் நீங்கள் அக்கறை காட்டுவீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நீங்கள் எது வேண்டுமானாலும் செய்வீர்கள். உங்களுக்கு அன்பான மற்றும் அக்கறையான வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்பதில் பெரும் ஆசை இருக்கும்.

ஸ்டபுல் பியர்ட் (Stubble Beard) : 

மேலே பார்ப்பதை போல நீங்கள் எப்போதும் ஷார்ட் தாடியை மெயின்டைன் செய்பவர் என்றால் சுறுசுறுப்பான, தைரியமான மற்றும் வசீகரமான நபராக இருப்பீர்கள். சாகச நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ட்ரெண்டிற்கு ஏற்ப நீங்கள் உங்களை மாற்றி கொள்ள கூடியவராக இருப்பீர்கள். நீங்கள் வெளியில் நான் மெச்சூரிட்டியாக இருக்கிறேன் பார் என்று காட்டி கொண்டாலும், உள்ளுக்குள் ஒரு குறும்புத்தனம் ஒளிந்திருக்கும்.

Also Read : தாடி வளர்க்க எண்ணெய்.. செலவே இல்லாமல் வீட்டிலேயே தயாரிக்க டிப்ஸ்..!

பிரெஞ்ச் பியர்ட் (French Beard) : 

இந்த ஸ்டைல் பியர்ட் பற்றி நாம் சிறு வயது முதலே கேள்விப்பட்டிருக்கிறோம். நீங்கள் வழக்கமாக இந்த பியர்ட் ஸ்டைல் கொண்டவரா.! அப்படி என்றால் நீங்கள் அதிக நம்பிக்கை கொண்டவர் மற்றும் முக்கிய விஷயங்களை மெச்சூரிட்டியுடன் கையாள்வீர்கள். பிரச்சனைகளை சமாளிப்பது முதல் உங்கள் கெத்தை விட்டு கொடுக்காமல் இருப்பது வரை மிகவும் நேர்த்தியாக செயல்படுவீர்கள். நீங்கள் உடன் இருப்பதை உங்களது அன்புக்குரியவர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதை போல உணர்வார்கள். ஒருவர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை சரியாக கணிப்பீர்கள் மற்றும் அதற்கேற்ப செயல்பட்டு நன்மதிப்பை பெறுவீர்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Beard care, Grooming tips, Personality Test