ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமண ஆடையை வடிவமைத்தது யார் தெரியுமா?

காஸ்டியூம் கெமிஸ்ட்ரியில் கலக்கும் ஜோடி

ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமண ஆடையை வடிவமைத்தது யார் தெரியுமா?
ஆரியா - சாயிஷா ஜோடி
  • News18
  • Last Updated: March 11, 2019, 5:59 PM IST
  • Share this:
ஆர்யாவின் திருமணம் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளியாக நேற்று (ஞாயிறு) ஹைதராபாத்தில் உள்ள தாஜ் ஃபாலக்னுமா பேலஸில் ஆர்யாவிற்கும் சாயிஷாவிற்கும் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

கடந்த மாதம் காதலர் தினத்தன்று தங்களின் திருமணத்தை உறுதி செய்த ஆர்யா, சாயிஷா, திருமணத் தேதியையும் மார்ச் மாதம் என அறிவித்திருந்தார். அதன்படி நேற்று நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ, கோலாகலமாக நடந்தேறியது திருமணம். அவர்களைப் போலவே அவர்களின் திருமண ஆடையும் ஜொலித்தது.
சாயிஷா முற்றிலும் கற்கள் பதித்த சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். அதற்குப் பொருத்தமான ஆண்டிக் குந்தன் நகைகள் அணிந்து கண்கவரச் செய்தார்.

சிவப்பு நிற ஆடைக்கு ஏற்ப போல்ட் மேக்அப் பக்காவாக இருந்தது. குறிப்பாக சிவப்பு நிற லிப்ஸ்டிக் ஹைலைடாக இருந்தது. அது அவரிம் அழகை மேலும் மெருகேற்றியது.
சாயிஷாவின் ஆடைக்கு காம்ளிமெண்ட்ரியாக ஆர்யாவும் கருப்பு நிற ஷெர்வானி அணிந்திருந்தது அத்தனை பொருத்தம். ஆர்யாவும் கிளாசிக் ஸ்டைல் தோற்றத்தால் சாயிஷாவிற்கு ஈடு கொடுத்தார் என்றே சொல்லலாம்.

திருமணத்தை அடுத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடந்தது. அதிலும் இந்த ஜோடி சளைக்கவில்லை. இப்பொழுதே காஸ்டியூம் கெமிஸ்ட்ரியில் கலக்கும் ஜோடியாக இருக்கின்றனர். இருவரும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தனர். அதிலும் சாயிஷா வெள்ளை நிற லெஹங்காதான் அணிந்திருந்தார். அதில் முற்றிலும் பூக்களின் எம்பராய்டரிகளால் கற்கள் பதித்து வடிவமைத்திருக்கிறார் ஆடைவடிவமைப்பாளர் ஷஹீன். இவர் வேறுயாருமில்லை சாயிஷாவின் அம்மாதான். ஆடைக்கு ஏற்ப அவரின் கற்கள் பதித்த ஆண்டிக் நகைகள் ஒவ்வொன்றும் தேர்ந்தெடுத்த ரகங்கள். இப்படி சாயிஷாவை தேவதையாக தோற்றமளிக்கச் செய்தவர் மேக் அப் ஆர்டிஸ்ட் நம்ரதா சோனி. இவர் செலிபிரிட்டிகள் பலருக்கும் மேக்அப் செய்கிறார். ஹேர்ஸ்டைலும் ஆடைக்கு ஏற்ப வேவியாக தேர்வு செய்துள்ளார் நம்ரதா.ஆர்யாவும் தன் பங்கை சிறப்பாகச் செய்துள்ளார். இப்படி சாயிஷாவிற்கு ஈடுகட்டும் விதமாக ஆர்யாவிற்கு மேக்அப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்தவர் விபுல் பகத்தான். இவரும் பிரபலங்கள் பலருக்கும் ஒப்பனை செய்கிறார். ஆர்யாவின் ஆடையையும் சாயிஷவின் அம்மா ஷஹீன் தான் வடிவமைத்துள்ளார். ஆர்யாவின் ஜாகெட்டை கற்களால் பதித்து ஹைலைட் செய்திருக்கிறார்.மொத்தத்தில் இருவரின் திருமண ஆடையும் சிம்பிள் அண்ட் ரிச்சாக இருக்கின்றன.
First published: March 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்