என்னுடைய சாய்ஸ் எப்போதும் டெனிம் ஆடைகள்தான் - ஃபேஷன் தேர்வு பற்றி மனம் திறந்த ஐஷ்வர்யா தனுஷ்..!

ஐஷ்வர்யா தனுஷ்

ஐஷ்வர்யா மட்டுமல்லாது பல பிரபலங்கள் டெனிம் ஆடைகள்தான் தங்களுக்கான சௌகரியமான உடை என கூறியுள்ளனர்.

 • Share this:
  ரஜினியின் மகள், தனுஷின் மனைவி என்ற அடையாளத்தின் பின்னனியில் வாழாமல் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வாழ்பவர்தான் ஐஷ்வர்யா தனுஷ். பெண் தொழில் முணைவோர், இரண்டு மகன்களுக்கு தாய் என்கிற பிசி ஷெட்யூல் இருந்தாலும் தன் ஆரோக்கியம், வாழ்க்கைமுறையிலும் மிகுந்த அக்கறையுடன் இருப்பவர். தனிப்பட்ட நேரம்யோகா, சுற்றுலா பயணம், ஹாபிகளில் சமரசம் செய்துகொள்ளாமல் திட்டமிட்டு வாழும் பெண்.

  இவை ஒரு புறம் இருக்க ஆடை அலங்காரங்களிலும் இவர் சளைத்தவரல்ல. இரண்டு மகன்களுக்கு அம்மா என்கிற தோற்றமே இல்லாமல் இப்போதும் டீன் ஏஜ் பெண் போல் தோற்றமளிப்பார். அதற்கு அவருடைய ஆடை அலங்காரங்களே காரணம்.
  அதற்கு உதாரணமாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வீக் எண்டை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் அவர் அதை இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார். வீக் எண்ட் வைப் என்கிற ஹாஷ் டாகுடன் டெனிம் ஆடையில் கண்ணாடியைப் பார்த்தவாறு ஒரு செல்ஃபி புகைப்படம் பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு டெனிம் ஆடைகள், டெனிம் நிறம்தான் மிகவும் பிடித்தது என்பதுப்போல் பகிர்ந்துள்ளார். அதற்கு ஏற்றவாறு ஜிப்ஸி ஸ்டைலில் டோன் ஜீன் அணிந்து அதற்கு மேட்சாக டெனிம் சட்டை அணிந்துள்ளார். ஆடைக்கு ஏற்ப பூட்ஸ் ஷூ, ஸ்லிங் பேக், கையில் இரண்டு பேண்ட், என கல்லூரி பெண் போல் இருக்கிறார்.

  இந்த புகைப்படத்தின் மூலம் தனக்கு எப்போதும் டெனிம் ஆடைகள்தான் ஃபேவரட் என்பதை உணர்த்துகிறார். அதை உணர்த்துவதுபோலவே இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நிறைய டெனிம் ஆடைகள் அணிந்த படத்தையே பகிர்ந்துள்ளார். ஐஷ்வர்யா மட்டுமல்லாது பல பிரபலங்கள் டெனிம் ஆடைகள்தான் தங்களுக்கான சௌகரியமான உடை என கூறியுள்ளனர்.
  Published by:Sivaranjani E
  First published: