மணப்பெண்ணிற்கு தோழியா போறீங்களா..? ஆலியா பட்டின் இந்த லெஹங்கா ஸ்டைலை டிரை பண்ணுங்க..!

ஆலியா பட்

நெட்டிசன்களின் கண்களை கவர்ந்துள்ள அவரின் லெஹங்கா, சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்றும் கூறப்படுகிறது.

  • Share this:
தனது நெருங்கிய தோழியின் திருமணத்துக்கு பாலிவுட் திரைப்பட நடிகை ஆலியா பட் அணிந்து சென்ற உடை பலரையும் கவர்ந்துள்ளது.

திரைப் பிரபலங்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தனி மவுசு உண்டு. பாலிவுட் நடிகையான ஆலியா பட், தோழியின் திருமணத்துக்கு சென்றபோது அணிந்திருந்த லெஹங்கா, தற்போது நெட்டிசன்களின் கண்களை கவர்ந்துள்ளது.  பிரவுன் நிறத்தில் இருக்கும் அவரின் லெஹங்கா, சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலானது என்றும் கூறப்படுகிறது.

ஆலியா பட்டின் நெருங்கிய தோழியான ரேகா குரானாவின் திருமணம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட்டும் கலந்து கொண்டார். அதில், முன்னணி பேஷன் டிசைனரானா பப்பா டோன்ட் பிரீச் (Papa Don’t Preach) வடிவமைத்த லெஹங்காவை அணிந்திருந்தார். செங்கல் பிரவுன் கலரில் இருந்த அந்த லெஹங்கா, ஆலியா பட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வண்ணத்துப் பூச்சி டிசைனில் பிளவுஸ் மற்றும் தங்க நிறத்திலான அணிகலன்களை அணிந்திருந்ததால், காண்போரின் கண்களை ஆலியா பட் எளிதில் வசீகரித்தார்.

திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண் உடல் எடையைக் குறைக்க ஈசியான டிப்ஸ்..!

ஆலியா பட் அணிந்திருந்த லெஹங்கா குறித்து பலரும் விசாரித்த நிலையில், அந்த உடை குறித்து டிசைனர் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரிக் பிரவுன் லெஹங்கா 1,06,400 ரூபாய் என விலை நிர்ணயித்துள்ளதாகவும் பப்பா டோன்ட் பிரீச் கூறியுள்ளார். இந்த உடையானது இளம் பெண்களை எளிதில் கவரும் என நெட்டிசன்கள் கூறியுள்ளனர். பல்வேறு பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வரும் ஆலியா, பிஸி ஷெட்யூல்களுக்கு இடையே தோழியின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். தற்போது இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியாவடி (Gangubai Kathiawadi), ரன்பீர் கபூரின் பிரம்மாஸ்திரா படத்திலும் நடித்து வருகிறார்.




கங்குபாய் கத்தியாவடி படமானது மும்பையில் உள்ள சிவப்பு விளக்கு பகுதியான காமத்திபுராவை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதில், காமத்திபுராவில் பாலியல் தொழில் நடத்தும் பெண் தாதாவாக மிரட்டியிருக்கிறார் ஆலியா பட். மிகவும் துணிச்சலாக இந்த கதாப்பாத்திரத்தை தேர்தெடுத்தற்காக அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். 2 ஸ்டேட்டஸ் மற்றும் கல்லிபாய் படங்களில் சைலண்ட் கேரக்டராக நடித்திருந்த ஆலியா பட், கங்குபாயில் அடிதடி, அரசியல் என புகுந்து விளையாடி இருக்கிறார்.

பாகுபாலிக்குப் பிறகு சுமார் 400 கோடி ரூபாய் பொருட் செலவில் ராஜமௌலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திலும் ஆலியா பட் நடித்துள்ளார். 28வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள ஆலியா பட்டிற்கு பிறந்தநாள் பரிசாக, ஆர்.ஆர்.ஆர் படத்தில் அவர் நடித்துள்ள சீதா கேரக்டரின் பர்ஸ்ட் லுக்கை ராஜமௌலி வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தப் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published: