ஐஷ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரங்களின் நாயகி எனலாம். எந்த கதையோடும் ஒன்றிப்போகும் ஐஷ்வர்யா அதற்காக அவர் கொடுக்கும் உழைப்பு அதிகம். கிராமத்துப் படங்களில் மட்டுமே அதிகம் பார்த்துக்கொண்டிருந்த ஐஷ்வர்யா தற்போது மார்டன் நகர்ப்புறப் பெண்னாகவும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு படத்தில் இந்த லுக்கை தான் ஃபாலோ செய்யப்போவதாகக் கூறியிருக்கிறார்.
ஐஷ்வர்யா படங்களை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் ஃபேஷனில் நல்ல ஆர்வம் கொண்டவர். எப்போதும் அப்டேட்டாக இருப்பவர். அதேபோல் பல புது புது விஷயங்களை முயற்சி செய்யும் நடிகை. எந்த ஷோ, நேர்காணல் சென்றாலும் தனித்துவமான ஆடையில் வந்து கலக்குவார். அவரைப் பார்க்கும் கண்கள் விரிந்து வாய் வாவ் சொல்லாமல் ஓயாது. அந்த அளவிற்கு ஆடைத் தேர்வுகளில் அதிக அக்கறை செலுத்துவார்.
படங்களைப் பொறுத்தவரை கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஆடை அணிவதாக இருந்தாலும் தன்னால் இயன்ற ஃபர்பெக்ஷனை அவர் செய்துவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் தன்னுடைய அடுத்த படத்திற்கான லுக்கை ஷேர் செய்திருக்கிறார்.
தெலுகு படமான ரிபப்ளிக் என்ற படத்தில் மைரா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் அவர் மார்டன் பெண்ணாக நடிப்பதுபோல் தெரிகிறது. ஏனெனில் அந்த ஆடை அலங்காரம் அப்படித்தான் உள்ளது. சற்று பாஸி ஸ்டைலில் ஸ்டன்னிங்காக இருக்கிறார்.
இந்த புகைப்படத்தில் உள்ளே வெள்ளை நிற சட்டை பிளாக் பேண்ட் அணிந்து அதன் மேல் நீளமான ஷ்ரக் அணிந்திருக்கிறார். பிளாக் அண்ட் ஒயிட் காம்போவிற்கு பாசை நிற ஷ்ரக் ராயல் தோற்றத்தை அளிக்கிறது. அதோடு கழுத்தில் கழுத்தோடு ஒட்டிய சிம்பிளான ஜெயின் , கையில் வாட்ச் என மிடுக்காக தோன்றுகிறார்.
அடுத்த புகைப்படத்தில் ஜாலியான கல்லூரி பெண் போல் காட்சியளிக்கிறார். கழுத்தை ஒட்டிய டி.ஷர்ட் ஹை ஜீன் பேண்ட் என சிம்பிள் அண்ட் கியூட்டாக இருக்கிறார். வேவி ஹேர் விட்டு அதன் மேல் கொண்டை போட்டிருப்பது ஒட்டுமொத்த தோற்றத்தையே மாற்றுகிறது. அதாவது சீரியஸ் தோற்றத்திலிருந்து விலகி ஜாலியாக தோன்றுகிறார்.
இவரின் இந்த ஆடை அலங்காரத்திற்கு முக்கிய காரணம் கில்லாரி ஸ்ரீ. ஏனெனில் அவர்தான் இந்த படத்தில் ஐஷ்வர்யாவிற்கு ஆடை வடிவமைப்பாளர் மற்றும் ஸ்டைலிஸ்ட். இந்த இரு தோற்றங்களையும் ஸ்டைல் செய்திருப்பது கில்லாரிதான்.