கதாப்பாத்திரங்களை மிகச் சிறப்பாக தேர்வு செய்து நடிப்பதில் ஐஷ்வர்யா ராஜேஷ் ஆகச்சிறந்த நடிகை. அதனால்தான் அவரை தமிழக அரசு கௌரவித்து கலைமாமணி விருது வழங்கியுள்ளது. சினிமாத்துறையில் நன்கு தமிழ் பேசத் தெரிந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளின் எண்ணிக்கை மிகக் குறைவு.
அப்படியே இருந்தாலும் அவர்கள் இத்தனை பெரும் உயரத்தை அடைய வேண்டுமெனில் கடின உழைப்பு அவசியம். அதுவும் டஸ்கி நிறம் எனில் கூடுதலாக உழைக்க வேண்டும். அப்படி கடின உழைப்பினால் முன்னேறிய நடிகை ஐஷ்வர்யா.
ஐஷ்வர்யா நடிப்பில் மட்டுமல்லாது ஆடைகளை தேர்வு செய்வதிலும் பெண்களைப் பொறாமைப்பட வைப்பார். எப்போதும் எளிமையான அதேசமயம் ரிச் லுக் தோற்றங்களை பின்பற்றும் பாணி கொண்டவர். அந்த வகையில் ஐஷ்வர்யா கலைமாமணி விருது வாங்கச் சென்றபோது நீல நிற சல்வார் அணிந்து சென்றார். அதற்கு பொருத்தமாக கைவேலைபாடு கொண்ட கலம்காரி துப்பட்டா உடுத்தியது இந்திய கலைஞர்களை பெருமைப்படுத்தியது போல் இருந்தது.
எந்த வேலைபாடுகளும் இல்லாமல் எளிமையான உடை அணிந்து அதற்கு ஏற்ப அலங்காரத்தையும் எளிமையாக செய்துள்ளார். ஐஷ்வர்யாவின் இந்த போஸ்டில் இந்த ஆடை ஒரே நாளில் வடிமைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடையை வடிவமைத்தவர் மெரசல் ஃபேஷன் ஸ்டுடியோவின் நிறுவனர் , வடிவமைப்பாளர் நந்திதா ரமேஷ். இவர் பிரியா பவானி ஷங்கர், வாணி போஜன் போன்ற நடிகைகளுக்கும் ஆடைகளை வடிவமைத்துத் தருகிறார்.