திருமண மற்றும் சுப நிகழ்வுகள் இந்தியா முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் பலரும் இப்போது இண்டர்நெட்டை ஒரு கலக்கு கலக்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அதிதியின் காஸ்ட்லியான சேலை பற்றித்தான் இந்தப் பதிவில் நாம் காண இருக்கிறோம். அதிதி ராவ் ஹைதாரி தனது நெருங்கிய தோழி தியா மிர்சாவின் திருமணத்தில் வைப்ரன்ட் பிங்க் கலர் சேலை அணிந்திருந்தார், பார்ப்பதற்கு அட்டகாசமாக இருந்த அந்த சாரியின் விலை எவ்வளவென்று தெரியுமா?
அதிதி ராவ் ஹைடாரி, ரூ .38600 மதிப்புள்ள சேலையை அணிந்த படம் இப்போது இண்டர்நெட்டில் படுவேகமாக பரவி வருகிறது. நடிகை தியா மிர்சாவின் திருமண நிகழ்வில் தியா, பிரைட்டான சிவப்பு பனராசி சேலையை அணிந்திருந்தார். நடிகையின் உயிர் தோழியான அதிதி ராவ் ஹைதாரி கோல்டன் கலர் லைன்களுடன் ஒரு வைப்ரன்ட் பிங்க் கலர் சாரியில் கிட்டத்தட்ட மணப்பெண் போலவே பலரையும் ஈர்த்தார்.
திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள் பலரும் அதிதி ராவின் இந்த சேலை பற்றித்தான் நீண்ட நேரம் பேசி இருக்க வேண்டும். அதிதி எப்பொழுதும் டிரடிஷன் உடைகளில் அதிக நாட்டமுடையவர். அதிலும் திருமணம் போன்ற கலாசாரத்துடன் ஒன்றிய நிகழ்வுகளுக்கு பெரும்பாலும் அதிதி இது போன்ற உடைகளை தான் அணிய தேர்வு செய்வார் . இந்த குறிப்பிட்ட உடை அதிதிக்கு மிகவும் நேர்த்தியாக இருந்தது.
கலைமாமணி விருது வாங்க ஐஷ்வர்யா ராஜேஷ் அணிந்து சென்ற அசத்தல் சல்வார்..! ஒரே நாளில் வடிவமைத்த ஸ்பெஷல்..!
அதிதி தனது பைலி சேலையை வி-நெக்லைன் பிளவுஸுடன் அணிந்திருந்தார். இது அவரது ஒட்டுமொத்த தோற்றத்திற்கும் கூடுதல் அழகை தந்ததுபோல இருந்தது. நடிகை அதிதி தனது பாரம்பரிய தோற்றத்தை மேலும் அழகூட்ட கோல்டன் கடாஸ் மற்றும் கோல்டன் காதணிகளை அணிந்திருந்தார். பிங்க் லிப்ஸ்டிக் அணிந்து மின்னினார்.
அதிதியின் அட்டகாசமான படங்களை இங்கே காணுங்கள்.
அதிதி அணிந்திருந்த சேலை மட்டும் ரூ.24,800க்கு ரா மாம்போவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. மேலும் சாரீக்கு மேட்ச்சாக அஜ்மீர் சில்க் கோட்டா பிளவுஸ் ரூ.13,800 ஆகும். தியா மிர்சாவின் திருமணத்தில் அதிதியின் உடைக்கு மட்டும் ரூ.38,600 என கணக்கிடப்படுகிறது.
அதிதியின் சினிமா பயணம், தமிழ் திரையுலகத்தில்தான் தொடங்கியது. 2007-ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்ரீரங்கம்' படத்தில் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்போதே அவரது நடிப்பு பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இவர் திரைக்கு நடித்த முதல் படம் தமிழானாலும், 2006-ஆம் ஆண்டு திரைக்கு வந்த இவரது முதல் படம் மலையாளத்தின் 'பிரஜாபதி'.
ஆசை ஆசையாக வைக்கும் நெயில் பாலிஷ் உடனே உறிந்துவிடுகிறதா..? நீண்ட நாட்கள் இருக்க சூப்பர் டிப்ஸ்
பின்பு பாலிவுட்டில் நடிக்க தொடங்கிய அவர், 2008-2016 வரையில் பதினொன்று பாலிவுட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். அதிலும் இவர் நடித்த 'டெல்லி-6', 'ஏ சாலி ஜிந்தகி', 'ராக்ஸ்டார்', 'மர்டர்-3', 'வாஜிர்', 'ஃபிடூர்' ஆகிய படங்கள் இவருக்கு ரசிகர்களை உருவாக்கியது. 2011-இல் திரைக்கு வந்த 'ஏ சாலி ஜிந்தகி' படம் இவருக்கு சிறந்த துணை நடிகை விருது பெற்று தந்தது.