விதவிதமாக லெஹங்கா போடுவது உங்களுக்கு பிடிக்குமா ? சமந்தா ஸ்டைலை ட்ரை பண்ணி பாருங்க..

சமந்தா

வீட்டு விஷேசத்திற்கு க்ராண்டா ட்ரெஸ் பண்ண போறீங்களா ? இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க.

  • Share this:
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் அமேசானில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது தெலுங்கில் ’சகுந்தலம்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.தமிழில் காத்து வாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவர் அடிக்கடி தனது போட்டோ ஷூட்களையும் பதிவிடுவார்.தற்போது பிங்க் நிற லெஹங்காவில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

நீங்க அடிக்கடி விஷேசத்திற்கு லெஹங்கா போடுபவராக இருந்தால் இந்த ஸ்டைலை ட்ரை பண்ணி பாருங்க.இதில் லைட் பிங்க் நிறத்தில் சமந்தா லெஹங்கா அணிந்துள்ளார். பாவாடை,ஜாக்கெட், துப்பட்டா அனைத்துமே ஒரே கலரில் உள்ளது. வி நெக் ( v neck ) ஜாக்கெட்டில் சில்வர் நிற கற்கள் பதித்திருப்பது பார்ப்பவர் கண்ணை பரிக்கிறது.

துப்பட்டாவை பொறுத்தவரை நெட் மாடலில் உள்ளது.இதை நீங்கள் பாவாடை தாவணிக்கு எப்போதும் கட்டுவது போலும் கட்டலாம்.பாவாடை முழுவதும் சிலவர் நிற கோடுகள் இருப்பது க்ராண்ட் லுக்கை தருகிறது.

Also Read : வெள்ளை நிற சுடிதார் , சிம்பிள் மேக்அப்… அசத்தும் ரகுல் ப்ரீத் சிங் : நீங்களும் டிரை பண்ணி பாருங்க...போட்டோ ஷூட்டிற்கு ஏற்றது போல் டாப் நாட் ஹேர் ஸ்டைலை தேர்வு செய்துள்ளார்.மேலும் மூக்கில் வளையம் அணிந்திருப்பது ஒரு வித்தியாசமான லுக்கை தருகிறது.லெஹங்கா முழுவதும் கற்கள் பதிருப்பதால் எந்த ஒரு அணிகலனும் அணியவில்லை.காதில் சிம்பிளான தோடு மட்டும் அணிந்துள்ளார்.

லெஹங்கா க்ராண்டாக இருப்பதால் மிகவும் சிம்பிளான மேக்கப்பையே தேர்வு செய்துள்ளார். விதவிதமாக லெஹங்கா போடுவது உங்களுக்கு பிடிக்கும் என்றால் சமந்தா ஸ்டைலையும் ட்ரை பண்ணி பாருங்க..
Published by:Tamilmalar Natarajan
First published: