நிவேதா பெத்துராஜ் ஸ்டைலில் சுடிதார் போட்டு பாருங்க..

நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ்  பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில் அணிந்துள்ள சுடிதார் ஸ்டைல் பற்றி பார்ப்பாமோ.

 • Share this:
  நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் பொன் மாணிக்கவேல், பார்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

  இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.நடிகை நிவேதா பெத்துராஜ் அடிக்கடி புடவை,மாடர்ன் உடை, சுடிதார், லெஹங்கா இப்படி அனைத்து விதமான ஆடைகளிலும்  தனது போட்டோ ஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.தற்போது நிவேதா பெத்துராஜ்  பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில் அணிந்துள்ள சுடிதார் ஸ்டைல் பற்றி பார்ப்பாமோ.  பிங்க் நிறத்தில் சுடிதார் அணிந்துள்ள நிவேதா பெத்துராஜ். பலாசோ பேண்ட்டை( palasso  pant ) தேர்வு செய்துள்ளார். பலாசோ பேண்ட் என்பதால் டாப்பை முட்டி வரையும் அணிந்துள்ளார்.இது சுடிதாரின் அழகை கூட்டி காட்டுகிறது.சிலிவ் லெஸ் அணிந்துள்ள நிவேதா பெத்துராஜ் ஒரு பக்கம் ஸ்டைலாக துப்பட்டா அணிந்துள்ளார்.

  சுடிதாரின் டாப்பில் மட்டும் வைலெட் நிறத்தில் பூ டிசைன் இருப்பது பார்ப்பதற்கு அழகாக உள்ளது.  இது ஒரு மாடர்ன் லுக் தரும் சுடிதார் என்பதால் கழுத்தை ஒட்டி சோக்கர் ( choker ) அணிந்துள்ளார்.அந்த சோக்கரில் நடுவில் பெரிய கற்கள் பதித்து, அதற்கு கிழே முத்துகள் தொங்குவது கண்ணை பரிக்கிறது. கையில் அழகிய சின்ன ப்ரேஸ்லெட் அணிந்துள்ளார்.

  Also Read : சிம்பிளான சிவப்பு நிற உடையில் ஓணம் வாழ்த்து சொன்ன நடிகை மாளவிகா மோகனன்..

  மேலும் இந்த ஆடைக்கு ஏற்றது போல அழகனா லைட் ஷேட் மேக்கப்பையே தேர்வு செய்துள்ளார்.நெற்றியில் சிறிய பொட்டு, கண்ணக்கு காஜல்,  ஐ லைனர் மற்றும் உதட்டிற்கு பிங்க் நிற லிப் ஸ்டிக் போட்டுள்ளார். இதை மேக்கப் அப் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

     ஹேர் ஸ்டைலை பொற்றுத்தவரை நேர் உச்சி வகுடு எடுத்து straightening செய்து ப்ரீ ஹேர் விட்டுள்ளார்.இந்த லுக் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் நிவேதா பெத்துராஜ் ஸ்டலை ஃபாலோ செய்யலாம்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: