• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சிம்பிளான சிவப்பு நிற உடையில் ஓணம் வாழ்த்து சொன்ன நடிகை மாளவிகா மோகனன்..

சிம்பிளான சிவப்பு நிற உடையில் ஓணம் வாழ்த்து சொன்ன நடிகை மாளவிகா மோகனன்..

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள மாறன் படத்திலும் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.



    சிம்பிளான சிவப்பு நிற உடையில் ஒரு அழகான தோற்றத்தை கண் முன் காட்டியுள்ளார் மாளவிகா மோகனன். எந்த ஒரு டிசைனும் இல்லாத வீ நெக் மாடல் ஜாக்கெட், வெள்ளை நிற டிசைன் உள்ள பாவாடை இது இரண்டும் மிகவும் பொருத்தமாக உள்ளது என்று தான் கூற வேண்டும்.



    நாம் உடுத்தும் உடையின் அழகை எடுத்துக்காட்ட மேக்கப் மிகவும் முக்கியமானது.அந்த வகையில் கண்களுக்கு காஜல், ஐ லைனர் போட்டு, உதட்டிற்கு சிவப்பு நிற லிப் ஸ்டிக்கை தேர்வு செய்துள்ளார். இவரின் இந்த மேக்கப் அட்டகாசமாக உள்ளது.

    Also read : தென்னிந்திய நடிகைகளின் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்..



    அணிகலன்களை பொருத்தவரை ஆக்ஸிடைஸ்டு  ( oxidised ) ஜுவல்லரியை தேர்வு செய்துள்ளார். காதில் சிறிய ஜிமிக்கி, சிவப்பு நிற உடைக்கு மேட்சாக கையில் ஒற்றை வளையால், காலில் கொழுசு அணிந்துள்ளார். இது ஆபரணங்கள் மாளவிகா மோகனின் உடைக்கு பொருத்தமான தோற்றத்தை கொடுத்துள்ளது.



     




    View this post on Instagram





     

    A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)






    ஒரு ட்ரெண்டியான லுக் கிடைக்க வேண்டும் என்பதற்காக நேர் உச்சி எடுத்து முடியின் நுணியில் curls செய்து ப்ரீ ஹேர் விட்டுள்ளார் மாளவிகா மோகனன்.



    ஃபேஷன் தொடர்பான செய்திகள், தகவல்களுக்கு இணைந்திருங்கள்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: