• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வீட்டு விசேஷத்திற்கு என்ன மாதிரி ட்ரெஸ் போடலாம் என்று குழப்பமா இருக்கா ? இந்த மாதிரி பாவாடை தாவணி காஸ்டியூம் போடுங்க..

வீட்டு விசேஷத்திற்கு என்ன மாதிரி ட்ரெஸ் போடலாம் என்று குழப்பமா இருக்கா ? இந்த மாதிரி பாவாடை தாவணி காஸ்டியூம் போடுங்க..

கேப்ரியெல்லா

கேப்ரியெல்லா

வீட்டு விசேஷத்திற்கு எந்த மாதிரியான உடை அணிவது என்று உங்களுக்கு குழப்பமாக இருந்தால், கேப்ரியெல்லா ஸ்டைல் ட்ரை பண்ணுங்க..

  • Share this:
    பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக்கொண்டவர் கேப்ரியெல்லா. இவர் சிறு வயது முதலே படங்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டுள்ளார். மூன்று, சென்னையில் ஒரு நாள் , அப்பா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    கேப்ரியெல்லா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். தற்போது கடைகள் திறப்பு விழாவிற்கும் சிறப்பு விருந்தினராக கேப்ரியெல்லா சென்று வருகிறார்.

    நடிகை கேப்ரியெல்லா இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில் பாவாடை தாவணியில் க்ராண்டான லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். வீட்டு விசேஷத்திற்கு எந்த மாதிரியான உடை அணிவது என்று உங்களுக்கு குழப்பமாக இருந்தால், கேப்ரியெல்லா ஸ்டைல் பாவாடை தாவணி போல் நீங்களும் அணிந்து பாருங்கள்..



    கேப்ரியெல்லா  ஆரஞ்ச் மற்றும் வயலெட் நிறத்தில் பாவாடை தாவணி அணிந்துள்ளார். இந்த லுக்கில் பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளார். பாவாடை மற்றும் தாவணி ஆரஞ்சு நிறத்திலும், ஜாக்கெட் வயலெட் நிறத்திலும் அணிந்துள்ளார். வயலெட் நிற ஜாக்கெட்டில் மிகுந்த டிசைன் இருப்பது கண்களை கவர்கிறது.

    ஜாக்கெட்டின் கழுத்து பகுதியில் கோல்டன் நிற பார்டர் இருப்பது ஜாக்கெட்டிற்கு க்ராண்ட் லுக்கை தருகிறது. அதுமட்டுமில்லாமல் தாவணியிலும் கோல்டன் நிற பார்டர் இருக்கிறது.

    ஆரஞ்சு நிற பாவாடை முழுவதும் கோல்டன் நிற கட்டங்களும், ஆங்காங்கே சிறிய டிசைன்களும் உள்ளது. மொத்தத்தில் இந்த பாவாடை தாவணியை விசேஷம் அன்று அணிந்தால் அனைவரின் கண்ணும் உங்களின் மேலே தான் இருக்கும்.



    பாவாடை தாவணி க்ராண்டாக இருப்பதால் அதற்கு ஏற்றது போல் அணிகலன்களையும் தேர்வு செய்துள்ளார்.கழுத்துக்கு நெக்லெஸ், அதற்கு மேட்சாக தோடு, கடா வளையல், மோதிரம், தலையில் நெற்றிச்சுட்டி மற்றும் இடுப்பில் ஒட்டியானமும் அணிந்துள்ளார்.

    கேப்ரியெல்லாவின் இந்த மேக்கப் அவர் அணிந்திருக்கும் உடையின் அழகை இன்னும் கூட்டி காட்டுகிறது.மேலும் மேக்கப்பிற்கு பொருத்தமாக லூஸ் கேர் ஹேர் ஸ்டைலை தேர்வு செய்துள்ளார்.

    உங்கள் வீட்டில் எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும், பாவாடை தாவணி காஸ்டியூம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: