ஆஃபிஸ் போறீங்களா ? ஐஸ்வர்யா ராஜேஷின் காட்டன் சுடிதார் ஸ்டைல் ட்ரை பண்ணுங்க..

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சுடிதார் ஸ்டைல் பிடிச்சிருக்கா ? அப்ப நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

  • Share this:
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தில் அமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதற்கு முன்பு அவர் பல  படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் தான் அவரை ரசிகர்கள் மத்தியில் அடையாளம் காட்டியது.அதையடுத்து காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தனது அசாதாரண நடிப்பால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

பின்பு ஆறாது சினம், சாமி 2, கனா என பல படங்களில் நடித்தார்.தற்போது ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பார்.அடிக்கடி மாடர்ன் ட்ரெஸ், ஜீன்ஸ், லாங் ட்ரெஸ் இப்படி அனைத்து விதமான  போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்வார்.

தற்போது வெள்ளை நிற காட்டன் சுடிதாரில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அணிந்துள்ள சுடிதார் ஸ்டைல் பற்றி பார்ப்போமா.

’’பாவாடை தாவணி’’ கட்ட ஆசையா இருக்கா ? அப்போ பிக்பாஸ் கேப்ரியெல்லா லுக் ட்ரை பண்ணுங்க..வெள்ளை நிற டாப் அணிந்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்.பல வண்ணங்கள் உள்ள துப்பட்டாவை தேர்வு செய்துள்ளார்.இந்த காம்போ அட்டகாசமாக உள்ளது. இந்த டாப்பிற்கு காலர் வைத்திருப்பது மெஜஸ்டிக்கான லுக்கை தருகிறது.

இந்த சுடிதாருக்கு பொருத்தமாக ஜிமிக்கி அணிந்துள்ளார்.இது ஒரு சிம்பிளான சுடிதார் லுக் என்பதால்  சிம்பிளான மேக்கப்பையே தேர்வு செய்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ் ஸ்டைலில் சுடிதார் போட்டு பாருங்க..

அதே போல் சைடு வகுடு எடுத்து ப்ரீ ஹேர் விட்டுள்ளார்.இவரின் இந்த லுக் சுடிதாருக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

நீங்கள் ஆஃபிஸுக்கு  விதவிதமாக உடை அணிந்து செல்பவராக இருந்தால் ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த சுடிதார் லுக்கை ட்ரை பண்ணி  பாருங்க.
Published by:Tamilmalar Natarajan
First published: